வெள்ளி விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வரும் வேளையில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை 84 டாலருக்கும், உள்நாட்டு சந்தையில் ஒரு கிலோ 2.85 லட்சம் ரூபாய் அளவிலான உயர்வை பதிவு செய்துள்ளது.
ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சந்திப்புக்குப் பிறகு அமைதி ஒப்பந்தம் நெருங்கிவிட்டதாக தகவல்கள் வெளியானதால் முதலீட்டாளர்கள் மத்தியில் பாதுகாப்பு முதலீட்டுக்கான தேவை குறைந்துள்ளது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி மீது முதலீடு செய்துள்ளவர்கள் லாப பார்க்கும் விதமாக பியூச்சர்ஸ் சந்தையில் அதிகப்படியான தங்கம் மற்றும் வெள்ளியை விற்றனர்.

இந்த விற்பனையில் அதிகம் பாதிக்கப்பட்டது என்னவோ வெள்ளி தான், எம்சிஎக்ஸ் சந்தையில் மார்ச் மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஒப்பந்தங்களின் வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு இன்று ஒரு நாள் மட்டும் 21,000 ரூபாய் வரை குறைந்து 2,33,120 ரூபாய் வரை சென்றது. ரீடைல் சந்தையில் கிலோவுக்கு 4000 ரூபாய் குறைந்துள்ளது.
வெள்ளி விலை எம்சிஎக்ஸ் சந்தையின் இன்றைய வர்த்தக தொடக்கத்தில் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. காலை வர்த்தகத்தில் ஒரு கிலோ வெள்ளி 2,54,174 ரூபாய் வரை சென்றது, ஆனால் மதிய வர்த்தகத்தில் 21000 ரூபாய் சரிந்து அதிர்ச்சி கொடுத்தது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 84 டாலருக்கு மேல் தொட்டு 74.2 டாலர் வரையில் குறைந்துள்ளது.
டிரம்ப்-ஜெலென்ஸ்கி சந்திப்பின் தாக்கம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி டிசம்பர் 28ஆம் தேதி புளோரிடாவில் சந்தித்தனர். இந்த சந்திப்பு உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தின் முடிவில் டிரம்ப் "நாங்கள் ஒப்பந்தத்துக்கு மிக அருகில் உள்ளோம், ஒருவேளை மிக மிக அருகில்" என்று கூறி முதலீட்டு சந்தைக்கு முக்கிய செய்தியை கொடுத்தார். இந்த தகவல் தான் பாதுகாப்பான சொத்துகளான தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை குறைந்தது.
2025 ஆம் ஆண்டில் வெள்ளி விலை 181 சதவீதம் உயர்ந்துள்ளது. தங்கத்தை விட அதிக லாபம் தந்துள்ளது மூலம் மிடில் கிளாஸ் மக்களின் புதிய தங்கமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இன்றைய வெள்ளி விலையின் சரிவு முதலீட்டாளர்களுக்கு புதிய பாதையை காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications