சாமானிய மக்களின் தங்கமாக இருந்த வெள்ளி (Silver), வெள்ளிக்கிழமை MCX சந்தையின் முடிவில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக சரிந்தது. ஒரு கிலோ வெள்ளி விலை சுமார் ரூ.1,07,968 (27 சதவீதம்) வீழ்ச்சியடைந்து ரூ.2,91,925ஆக முடிந்தது. இது ஒரே நாளில் பதிவு செய்த மிகப்பெரிய இழப்பாகும். வெள்ளி-யின் மார்ச் ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தம் விலை ரூ.4 லட்சத்தை தொட்டு சாதனை படைத்த ஒரே நாளில் இந்த பெரும் சரிவு ஏற்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் மட்டும் தான் இப்படியா என்றால், சர்வதேச சந்தையில் இதைவிட மோசமாக உள்ளது. சர்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் வெள்ளி விலை 28 சதவீதம் சரிந்து ஒரு டிராய் அவுன்ஸ் 85 டாலராக குறைந்துள்ளது. சமீபத்தில் 121.60 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியிருந்தது.

மேலும் தங்க விலையில் சர்வதேச சந்தையில் 4.7 சதவீதம் சரிந்து 5,143.40 டாலராக முடிந்தது. MCX-யில் தங்கத்தின் பிப்ரவரி ஃபியூச்சர்ஸ் 12 சதவீதம் குறைந்து இதன் விலை ஒரே நாளில் ரூ.20,514 சரிந்து ரூ.1,50,440ஆக முடிந்தது.
இந்த பெரும் சரிவுக்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக, கெவின் வார்ஷ் ஃபெடரல் ரிசர்வ் தலைவராக நியமிக்கப்பட்டதால் அமெரிக்க டாலர் வலுப்பெற்றது. டாலர் குறியீடு 97ஐ தாண்டியது. வலுவான டாலர் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களுக்கு எப்போதும் எதிராக இருக்கும்.
இரண்டாவதாக, தங்கம் விலை சரிவு வெள்ளியை பாதித்தது. வெள்ளி பெரும்பாலும் தங்கத்தின் போக்கை தான் பின்பற்றும், அந்த வகையில் தங்கம் விலை சரிவால், வெள்ளி விலையும் பாதித்துள்ளது.
மூன்றாவதாக, முதலீட்டாளர்கள் டாலர் விலை உயர்வு, அமெரிக்க பத்திர சந்தையின் லாபம் உயர்வு ஆகியவை பங்குச்சந்தைக்கும், உலோக சந்தைக்கும் எதிராக மாறியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கிடைத்த வரையில் லாபம் போதும் என profit booking செய்ய துவங்கிய காரணத்தால் பெரியளவில் தங்கம், வெள்ளி விலை சரிந்துள்ளது.
தற்போது பிரச்சனை என்னவென்றால் அதிகப்படியான விலையில் தங்கம், வெள்ளியை வாங்கிய முதலீட்டாளர்கள் தான் இந்த சரிவால் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு குறைவான விலையில் வாங்கியோர் தொடர்ந்து லாபத்தை பெறும் அளவிலேயே உள்ளனர்.
இந்த சரிவு உலகளாவிய முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளி தொழில்துறை பயன்பாட்டுக்கும் முதலீட்டுக்கும் பயன்படும் உலோகம். AI, தொழில்நுட்ப துறை பங்குகள் சரிவால் வெள்ளி தேவை குறைந்தது. சந்தை ஆய்வாளர்கள் இதன் விலை ரூ.3 லட்சத்திற்கு கீழே திரும்பலாம் என்று எச்சரிக்கின்றனர். ஆனால் நீண்டகாலத்தில் விநியோக பற்றாக்குறை, புவிசார் அபாயங்கள் தொடர்ந்தால் மீண்டும் உயரலாம். எனவே தங்கம், வெள்ளி விலை உயர்வதற்கான வாய்ப்பு இன்னும் அதிகமாகவே உள்ளது.
இந்தியாவில் MCX சந்தையில் இந்த சரிவு நகை வாங்குபவர்களுக்கு சற்று நிவாரணமாக அமைந்துள்ளது. ஆனால் குறுகிய கால ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். நீண்டகால முதலீட்டாளர்கள் இந்த சரிவை வாங்கும் வாய்ப்பாக பார்க்கலாம்.
More From GoodReturns

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications