இந்தியாவில், வெள்ளியை "ஏழையின் தங்கம்" என்று அழைப்பது வழக்கம். தங்கத்தைக் காட்டிலும் மலிவானதாக இருக்கும் காரணத்தாலும், மதிப்புடையதாக இருக்கும் காரணத்தாலும், குறைந்த வருமானம் ஈட்டும் மக்கள் மத்தியில் வெள்ளி முக்கிய முதலீடாக உள்ளது.
இதேபோல் பெரும் பணக்காரர்கள் மத்தியில் வெள்ளி அலங்காரப் பொருட்களாகவும், வீட்டில் உபயோக பொருட்களையும் வெள்ளியில் வாங்கும் காரணத்தால் மக்கள் மத்தியில் எப்போதும் டிமாண்ட் உள்ள உலோகமாக உள்ளது வெள்ளி.

மறுபுறம் தங்கத்தின் விலை வரலாற்று உச்ச அளவை அடைந்துள்ள நிலையில், வெள்ளி நகைகளுக்கான தேவை மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. சில்வர் இன்ஸ்டியூட் (Silver Institute) நிறுவனத்தின் தகவல்படி, உலகளவில் வெள்ளி நகைகளுக்கான தேவை 6 சதவீதம் வளர்ச்சி அடையவுள்ளது, இதில் இந்தியா முக்கிய பங்கீட்டை வகிக்கிறது என்றும் கணித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்தியாவில் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த வருடம் 20 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. திங்கட்கிழமை வர்த்தகத்தைத் தொடர்ந்து இன்றும் வெள்ளி விலை கிராமுக்கு 100 ரூபாய்க்கு அதிகமாக அதாவது ஒரு கிலோ வெள்ளி விலை 1 லட்சம் ரூபாயைத் தாண்டியுள்ளது.
வெள்ளி கடந்த சில மாதங்களாக 90000 - 99000 ரூபாய் அளவிலேயே வர்த்தகமாகி வந்த வேளையில், இந்த வாரம் 1 லட்சம் ரூபாயைக் கடந்துள்ளது. இன்று ரீடைல் சந்தையில் வெள்ளி விலை ஒரு கிலோ 1300 ரூபாய் உயர்ந்து 1,00,300 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை ஏன் உயர்கிறது?: தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் பொதுவாக ஒரே மாதிரியாக உயரும், குறையும். பொருளாதார பிரச்சனைகள், புவிசார் அரசியல் பதற்றங்கள், அதிகரித்த பணவீக்கம் மற்றும் வட்டி விகிதக் குறைப்பு ஆகிய சூழ்நிலைகளில் இவை உயரும் போக்கு இருக்கும்.
ஆனால், வெள்ளி ஒரு தொழில்துறை உலோகமாக இருப்பதால், இதற்குக் கூடுதல் சிறப்பு சேருகிறது. தங்கத்தைக் காட்டிலும் வெள்ளி உலோகம் தொழிற்துறையில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது தொழில்துறையில் வெள்ளியின் தேவை அதிகரித்த காரணத்தால் வெள்ளி விலை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
சோலார் பேனல் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் உட்பட பல தொழில்களில் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. சந்தை நிபுணர்களின் ஆய்வில், உலகளவில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளியில் சுமார் 50 சதவீதம் தொழில்துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
பூமியின் வெப்ப மயமாதலைக் குறைக்கும் சோலார் மின்சாரத் துறை வளர்ச்சியும் வெள்ளி தேவை அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணமாகும். ஏனெனில், சோலார் பேனல் உற்பத்தி செய்வதற்கு வெள்ளி மிக அவசியமாகும்.
வெள்ளியில் முதலீடு செய்வது நல்லதா?: குறுகிய மற்றும் நடுத்தர காலத்திற்கு, தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரு விலைமதிப்பற்ற உலோகங்களின் எதிர்காலமும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்துறை தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் ஆண்டுகளில் வெள்ளி தங்கத்தை விட அதிக லாபம் தரும் எனவும் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
2024 இல் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கினால், அது வெள்ளி விலைகளுக்குக் கூடுதல் பலத்தை அளிக்கும். பொருளாதார நடவடிக்கைகள் அதிக வேகத்தைப் பெறும், இறுதியில், தொழில்துறை உலோகமான வெள்ளிக்கான தேவை அதிகரிக்கும்.
More From GoodReturns

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?



Click it and Unblock the Notifications