சர்வதேச சந்தையில் வெள்ளி விலை புதிய உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. தங்கத்தை காட்டிலும் வெள்ளிக்கு தொழிற்துறையில் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் காரணத்தாலும், தங்கத்தை போல வெள்ளியையும் மத்திய வங்கிகள் வாங்க திட்டமிட்டு வரும் காரணத்தாலும் வெள்ளிக்கான டிமாண்ட் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இதனால் வெள்ளி தொடர்ந்து உயர்ந்து வரும் வேளையில், கடந்த சில நாட்களாக ஏற்பட்ட தடுமாற்றத்திற்கு பின்பு இன்று மீண்டும் உச்சத்தை நோக்கி தனது பயணத்தை துவங்கியுள்ளது. இன்று சர்வதேச ஸ்பாட் சந்தையில் வெள்ளி விலை ஒரு அவுன்ஸுக்கு சுமார் 58.50 டாலர் அளவில் வர்த்தகமாகும் நிலையில், வெள்ளிக்கிழமை பதிவான 59.33 டாலர் உச்சத்தை நெருங்கி வருகிறது.

கடந்த வாரத்தில் மட்டும் வெள்ளி ETF பண்டுகளில் மட்டும் சுமார் 590 டன் அளவில் அதிகரித்துள்ளது, இது முதலீட்டாளர்கள் இந்த ஏற்றத்தை தொடரும் என நம்புவதைக் காட்டுகிறது. இந்த ஏற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளன, அவற்றை விரிவாகப் பார்ப்போம்.
அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) இந்த வாரம் வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளி விலை மேலும் உயர்ந்துள்ளது. வட்டி குறைக்கப்படும் போது பத்திர சந்தையில் இருக்கும் பெருமளவிலான முதலீடுகள் தங்கம் மற்றும் வெள்ளி மீது வருவது காலம் காலமாக நடக்கும் ஒரு விஷயமாகும். இந்த வட்டி குறைப்பு தொடர்பான எதிர்பார்ப்பு சந்தையில் நம்பிக்கையை அதிகரித்துள்ளது, வெள்ளி விலையை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
இதோடு சமீபத்தில் லண்டன் சந்தையில் நடந்த வரலாற்று சுருட் ஸ்க்வீஸ் (short squeeze) நிகழ்வும் வெள்ளி விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த நிகழ்வு சந்தையை பெரிதும் பாதித்து, முதலீட்டாளர்களிடம் வெள்ளி மீதான ஆர்வத்தை மீண்டும் ஊட்டியது. இதன் விளைவாக வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து, புதிய வரலாற்று உச்சத்தை தொடும்.
இதேவேளையில் இந்தியாவில் இன்று வெள்ளி விலை 1 கிலோவுக்கு 1000 ரூபாய் குறைந்து 1,98,000 ரூபாயாக உள்ளது. ஆனால் இந்த மாதம் 3, 4ஆம் தேதிகளில் வெள்ளி விலை கிலோவுக்கு 2 லட்சத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது. எனவே பெட் வட்டிக்கு பின்பு வெள்ளி விலை தொடர்ந்து 2 லட்சத்திற்கு மேல் தக்க வைக்கலாம் என்ற கணிப்பும் நிலவுகிறது.
மேலும் தங்கம் போல் வெள்ளி இல்லை என்பதை அனைத்து தரப்பு மக்களும் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். தங்கம் பொதுவாக 2 விஷயங்களுக்காக முதலீட்டை பெறும், ஒன்று சேமிப்பு மற்றொன்று நகைகள். ஆனால் வெள்ளி அப்படியில்லை, இவ்விரண்டையும் தாணடி வெள்ளி-க்கு தொழிற்துறையில் மிகப்பெரிய அளவிலான டிமாண்ட்-ஐ கொண்டு உள்ளது.
வெள்ளி பல துறைகளில் நேரடியாக பயன்படுத்தப்படும் கிரிட்டிக்கல் இன்டஸ்ட்ரியல் மெட்டல் ஆக விளங்குகிறது. பல நாடுகள் தற்போது வெள்ளியை முக்கிய உலோகமாக அறிவித்து, அதிகளவில் சேமிக்கவும் துவங்கியுள்ளனர். தற்போது வெள்ளி ரினியூஎபிள் எனர்ஜி, எலெக்ட்ரானிக்ஸ் துறையில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
சொல்லப்போனால் வெள்ளியின் மொத்த சப்ளையில் சுமார் 50 சதவீதத்திற்கும் மேல் நேரடியாக தொழிற்துறை பயன்பாட்டுக்கு செல்கிறது. உதாரணமாக electronics, solar, EV, battery, மருத்துவ உபகரணங்களில் அதிகளவில் வெள்ளி பயன்படுத்தப்பட்டு வருகிறது. சோலார் பேனல்களில் உள்ள photovoltaic (PV) செல்களுக்குள் இருப்பதும் சில்வர் பேஸ்ட் தான்.
இப்படி பல துறையில், பல பிரிவில் வெள்ளி தற்போது முக்கியமான உலோகமாக மாறியுள்ளது, அதிலும் முக்கியமான கிரீன் எனர்ஜி, அதிக வேகம், அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் என நீங்கள் கேட்கும் அனைத்து இடங்களிலும் வெள்ளி இருக்கிறது.
More From GoodReturns

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?



Click it and Unblock the Notifications