தங்கம் விலை தாறுமாற உயர்ந்த வேளையில் வெள்ளி மிகவும் முக்கியமான உலோகமாக மாறியுள்ளது. முதலில் வெள்ளி வெறும் பொருட்களாகாகவும், நகைகளுக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 10 வருடத்தில் கிரீன் எனர்ஜி துறையில் முக்கியமானதாக மாறியுள்ளது, கடந்த 1 வருடத்தில் உலக நாடுகளின் மத்திய வங்கிகளும், முதலீட்டு வங்கிகளும் வெள்ளியை முக்கிய உலோகமாக அறிவித்து தங்களுடைய சேமிப்பு கிடங்களில் சேமிக்க துவங்கியுள்ளனர்.
சமீபத்தில் ஜேபி மார்கன் பல நூறு டன் வெள்ளியை தனது டிரசரியில் சேமித்தது. இதோடு அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா ஆகியவை வெள்ளியை முக்கிய உலோகமாக அறிவித்துள்ளது, சீனா வெள்ளி ஏற்றுமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. இப்படி வெள்ளி மிகவும் முக்கியமான உலோகமாக மாறி வரும் வேளையில் இதன் விலை தாறுமாறாக உயர்ந்து இன்று வரலாற்று உச்சத்தை தொட்டு உள்ளது.

புதன்கிழமை (டிசம்பர் 10) வர்த்தகத்தில் வெள்ளி ஃப்யூச்சர்ஸ் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. MCX-யில் வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.1,90,374 என்ற அளவை எட்டி இதுவரையில் எட்டத உச்சத்தை அடைந்துள்ளது. அதே நேரத்தில் தங்கம் 10 கிராமுக்கு ரூ.1,30,369 என்ற உயர்ந்த நிலையில் நிலையாக உள்ளது.
இந்த தீடீர் உயர்வு, அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகித முடிவுகளை வெளியிடுவதற்கு முன் ஏற்பட்டு உள்ளதால் முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கையை உருவாகியுள்ளது. இதேபோல் வெள்ளி சர்வதேச சந்தையில் முதல் முறையாக ஒரு அவுன்ஸுக்கு 61.48 டாலர் என்ற உச்சத்தைத் தொட்டு, தங்கத்தை விட வேகமாக உயர்ந்து வருகிறது.
பியூச்சர்ஸ் சந்தையிலேயே வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்திருக்கும் வேளையில் ரீடைல் சந்தையில் எப்படி இருக்கிறது என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும். இன்று சென்னை ரீடைல் சந்தையில் ஒரு கிராமுக்கு 8 ரூபாய் அதாவது கிலோவுக்கு 8000 ரூபாய் உயர்ந்து 2,07,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் டிசம்பர் 9-10 தேதி நடக்கும் நாணய கொள்கை கூட்டத்தில் 25 அடிப்படைப் புள்ளிகள் வட்டியை குறைக்க 90 சதவீத வாய்ப்பு உள்ளது. வட்டி குறையும் போது வங்கியிலும், பத்திர சந்தையில் இருக்கும் பணத்திற்கு குறைவான வட்டி வருமானம் கிடைக்கும் காரணத்தால் பெருமளவிலான தொகை தங்கம், வெள்ளி, பங்குச்சந்தை மீது திரும்பும்.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் வெள்ளி முதல் முறையாக ஒரு அவுன்ஸ்-க்கு 60 டாலரை தாண்டியது, இதற்கு முன்பு 50 டாலர் அளவீட்டை எட்டி வெறும் 12 வர்த்தக நாட்களில் 60 டாலரை தொட்டு உள்ளது. தற்போது பெடரல் ரிசர்வ் தனது வட்டியை குறைக்க உள்ளது, இதனால் 10 நாட்களில் 70 டாலரை தொட்டாலும் வியப்படைய தேவையில்லை.
இந்தியாவின் எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி ஃப்யூச்சர்ஸ் மார்ச் ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை 3.48 சதவீதம் உயர்ந்து ரூ.1,88,064-இல் முடிந்தது, புதன்கிழமை காலை வர்த்தகத்தில் ரூ.1,90,374 உச்சத்தைத் தொட்டது.
More From GoodReturns

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?



Click it and Unblock the Notifications