வெள்ளியை பொறுத்தவரை, தொழில்துறை பயன்பாட்டைத் தவிர, நகைத்துறையிலும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய வெள்ளி நுகர்வோராக இந்தியா உள்ளது. இறக்குமதி வரிகள் மற்றும் மற்ற வரிகளைத் தவிர, உள்நாட்டு வெள்ளி விலைகளை சர்வதேச விலைகளும் தீர்மானிக்கின்றன. தங்கத்தைப் போலவே வெள்ளியும் ஒரு முதலீட்டு வாய்ப்பாக மக்களால் பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், மும்பையில் இன்று (ஜூன் 10) வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ.1,09,000 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. திங்கட்கிழமையான நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.108-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனையானது. ஆனால், நேற்றும் இன்றும் ஒரு கிராம் வெள்ளி கிட்டதட்ட ரூ.2 உயர்ந்து, ரூ.109-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,000 உயர்ந்து ரூ.1,09,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையின் இந்த உயர்வுக்கு, மின்சார உற்பத்தி மற்றும் சூரிய சக்தி துறைகளில் இருந்து வரும் தொழில்துறையின் தேவையே காரணம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, வெள்ளியின் விலை மேலும் புதிய உச்சத்தை தொடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதேபோல், வரும் வாரங்களில் வெள்ளிக்கான எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதாக Angel One நிறுவனத்தின் பொருள் மற்றும் நாணயங்கள் துறையின் முதன்மை தொழில்நுட்ப ஆய்வாளரான தேஜாஸ் ஷிக்ரேகா தெரிவித்துள்ளார். இதற்கு ரஷ்யா - உக்ரைன் போர், தொடர்ச்சியான பதற்றங்கள், பணவீக்க அழுத்தங்கள், மந்தநிலை அபாயங்கள் மற்றும் அமெரிக்கா போன்ற முக்கிய பொருளாதாரங்களில் நிதி ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்டவை காரணங்களாக இருக்கின்றன.
அமெரிக்க டாலர் பலவீனமடையும் நிலையில், வெள்ளி மற்றும் மற்ற டாலர் அடிப்படையிலான பொருட்கள் வாங்குவோரால், வெள்ளி தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஒரு அவுன்சுக்கு 35 டாலர் என்ற அளவை வெள்ளி கடந்துள்ளது. இதன் மூலம் நிறுவன மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய உற்சாகம் பிறந்துள்ளது. வெள்ளி இம்மாதத்தின் (ஜூன்) முதல் வாரத்தில் சுமார் 8.7% வளர்ச்சி கண்டுள்ளது.
MCX அகமதாபாத் சந்தையின் வெள்ளி முடிவு விலை அடிப்படையில் கணக்கீடு செய்தபோது, SAMCO Securities நிறுவனத்தின் சந்தை பார்வைகள் மற்றும் ஆராய்ச்சி பிரிவின் தலைவர் அபூர்வா ஷேத் கூறுகையில், "ஒவ்வொரு முறையும் வெள்ளி அதன் முந்தைய உச்சநிலையை கடந்தால், அது பெரிய நகர்வுகளையும் ஏற்படுத்தும். ஒரு முறை விலை உயர்வை கண்டுவிட்டால், மேலும் விலை உயர்ந்து கொண்டே செல்லும். தற்போதைய சூழ்நிலைகள், பதற்றங்கள், நாணய மாறுபாடுகள் மற்றும் மத்திய வங்கிகளின் நிலைப்பாடு ஆகியவற்றால், வெள்ளி பாதுகாப்பு முதலீடாக மாறியுள்ளது. சில்லறை மற்றும் நிறுவன முதலீட்டாளர்களின் ஆர்வமும் அதிகரித்துள்ளது. இது வெறும் உலோகத்தின் நகர்வல்ல. இது ஒரு வேகநிலை ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - சீனா இடையே நடைபெறும் முக்கியமான பேச்சுவார்த்தைகள் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கும் இடையிலான பல முரண்பாடுகளில் முன்னேற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பான முதலீடுகளுக்கான தேவையை குறையக்கூடிய சூழலை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், அமெரிக்காவின் சமீபத்திய Nonfarm Payrolls Reportஇல் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல், ரிசர்வ் முடிவுகளை லட்சியப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தங்கத்தின் விலைக்கு தடையாக செயல்படுவதாக ஹெ.டி.எஃப்சி நிறுவனத்தின் மூத்த பொருள் நிபுணர் சௌமில் காந்தி கூறியுள்ளார்.
More From GoodReturns

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?



Click it and Unblock the Notifications