சென்னை: சமீப காலமாகத் தங்கத்திற்கு இணையாக வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ஒரு கிலோ வெள்ளி விலை தற்போது ரீடைல் சந்தையில் 1 லட்சம் ரூபாயைத் தொட்டு இருக்கும் வேளையில் அடுத்த சில மாதத்தில் 1.25 லட்சம் ரூபாய் வரையில் உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்கள் ஆபரணங்களாகப் பயன்படுத்துவதற்கு இணையாக தொழிற்துறையிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் முக்கியமாக வெள்ளி தொழிற்துறை உற்பத்தியில் அதிகளவில் பயன்படுத்துவதாக இவ்விரு உலோகங்களுக்கான டிமாண்ட் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

இதற்கு மத்தியிலும் தங்கம் மற்றும் வெள்ளி மக்களின் சேமிப்பு கருவிகளில் முக்கியமானதாக உள்ளது இருக்கிறது, இருக்கவும் போகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் ஒரு கிலோ வெள்ளி
இன்னும் அதிகமாக, கிலோவுக்கு ரூ.1,25,000 வரை உயரலாம் என்ற கணிப்புகள் முக்கிய முதலீட்டு வாய்ப்பாக மாறியுள்ளது. இந்த உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
மோதிலால் ஒஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ் வெளியிட்டுள்ள காலாண்டு அறிக்கையின்படி, கடந்த சில மாதங்களில் வெள்ளி விலை 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. எனவே, விலை சரிவு ஏற்படும் போது அதை வாங்கும் வாய்ப்பாகப் பயன்படுத்தலாம்.
வெள்ளியின் விலை ரூ.86,000 முதல் 86,500 வரை குறைய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், அடுத்த 12 முதல் 15 மாதங்களில் வெள்ளி விலை உள்நாட்டில் ரூ.1,25,000 மற்றும் அமெரிக்காவில் 40 டாலர் வரை உயரலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய உலோக உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் சீனா, இந்த நிலையில் சீனா அதிகமாக வெள்ளி வாங்கினால் கட்டாயம் இதன் விலையைப் பாதிக்கும். கடந்த 2 மாதங்களாகத் தங்கம் வாங்குவதைச் சீனா நிறுத்தியுள்ளது. இதனால் சீன மக்கள் வெள்ளி வாங்க முற்படலாம்.
Silver Institute-ன் கணிப்பின்படி, 2023 முதல் 2024 வரை மொத்த வெள்ளி தேவை சுமார் 2% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் மொத்த தேவை சுமார் 1219 டன்னாக இருக்கும் எனவும், இதில் தொழில்துறை தேவை அதிகப்படியாக 710.9 டன் வரையில் இருக்கும் என கணித்துள்ளது.
இது 2023 ஐ விட 8.5% அதிகம் மற்றும் கொரோனா காலத்திற்குப் பிறகு 40% அதிகம். நகை மற்றும் வெள்ளிப் பொருட்களுக்கான தேவை சுமார் 4.5% அதிகரிக்கும் என்று Silver Institute தனது கணிப்பில் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications