Silver Price: காலியாகும் லண்டன் கஜானா.. வெள்ளிக்கு வரி போட திட்டமிட்டும் டிரம்ப்..? இது லிஸ்ட்லயே இல்லையே..!!

தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் டிசம்பர் 29ஆம் தேதி பட்டென குறைந்தது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. இது புயலுக்கு பின் அமைதி என பார்ப்பதை காட்டிலும் அடுத்த புயல் உருவாவதற்கு முன்பு ஏற்பட்ட அமைதியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலை உருவாக முக்கியமான காரணம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 2025 ஆம் ஆண்டில் பெரும் ஏற்றத்தை கண்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்திலிருந்து இதன் விலை கிட்டத்தட்ட இரு மடங்கு உயர்ந்து புதிய உச்சங்களை தொட்டுள்ளது. இதன் மூலம் இந்த வருடம் தங்கத்தை விட அதிக லாபத்தை வெள்ளி தந்துள்ளது.

காலியாகும் லண்டன் கஜானா.. வெள்ளிக்கு வரி போட திட்டமிட்டும் டிரம்ப்..? இது லிஸ்ட்லயே இல்லையே..!!

அமெரிக்க வரி அச்சமே முதல் காரணம்
இந்த ஏற்றத்திற்கு முக்கிய காரணம் அமெரிக்காவில் இன்னும் அறிவிக்கப்படாத வரி விதிப்பு அச்சம் தான் என ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் பிக்சட் இன்கம் பிரிவில் CIO அதிகாரியான மனிஷ் பன்தியா ஈடி பத்திரிக்கைக்கு எழுதிய செய்தியில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வணிகத் துறை செக்ஷன் 232 சட்டத்தின் கீழ் முக்கிய கனிமங்களை ஆய்வு செய்து வருகிறது. ஏற்கனவே வெள்ளியை அந்நாட்டு தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக முக்கிய கனிமங்களாக அறிவித்திருக்கும் வேளையில் வெள்ளியின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை கட்டுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையை எடுக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதில் முக்கியமாக வரி விதிப்பு அதிகம் இருக்கும் என தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே சீனா வெள்ளியை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்த உரிமம் பெறும் புதிய நடைமுறையை உருவாக்கியிருக்கும் வேளையில், கிட்டத்தட்ட இதே நடைமுறையை அமெரிக்கா எடுக்க உள்ளது. இதனால் டிமாண்ட் அதிகமாக இருக்கும் வேளையில் சப்ளை குறைய வாய்ப்புள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்காவின் டிரம்ப் அரசு செக்ஷன் 232 சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற அனுமதி இல்லாமல் வெள்ளி இறக்குமதிக்கு 15 முதல் 50 சதவீதம் வரை வரி விதிக்கப்படலாம் என அச்சம் நிலவுகிறது. வரி விதிக்கும் வரையில் காத்திருக்காமல் வரி கட்டாயம் விதிக்கப்படும் என எதிர்பார்த்து வர்த்தகர்கள் முன்கூட்டியே செயல்பட்டனர். இதன் வாயிலாகவே வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

இதேவேளையில் அமெரிக்க அரசு தரப்பிலும் சரி, அமெரிக்க முதலீட்டாளர்கள் மத்தியிலும் சரி லண்டனில் இருக்கும் மிகப்பெரிய உலோக கருவூலத்தில் இருந்து அமெரிக்காவுக்கு பெருமளவு வெள்ளி அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் லண்டன் கருவூலத்தில் உலோக சேமிப்புகள் விரைவாக காலியாகி வருகின்றன.

இதன் எதிரொலியாக லண்டன் சந்தையில் வெள்ளி பற்றாக்குறை ஏற்பட்டதால், தற்போது வெள்ளி மீது கடன் வாங்கும் செலவு 30 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. இது வரலாறு காணாத உயர்வாக பார்க்கப்படுகிறது, இது கடும் பற்றாக்குறையின் அறிகுறியாகும்.

உதாரணமாக இந்தியாவில் தீபாவளி பண்டிகை காலத்தில் வெள்ளி விலை சர்வதேச சந்தை விலையை காட்டிலும் 15 சதவீதம் வரை அதிகமாக இருந்தது. இதற்கு வெள்ளி பற்றாக்குறைக்கும் டிமாண்ட்-க்கும் மத்தியிலான வித்தியாசம் தான் முக்கிய காரணமாக இருந்தது.

இதேவேளையில் ஈடிஎஃப் திட்டங்கள் மூலம் வெள்ளி மீதான முதலீடுகளை பெரிய அளவில் உயர்ந்தது, ஆனால் தற்போது சந்தையில் போதுமான உலோக மதிப்பிலான வெள்ளி கிடைக்காத காரணத்தால் சில ETF Fundகள் வெள்ளி மீதான புதிய முதலீடுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. சீனாவின் மிகப்பெரிய வெள்ளி ஈடிஎஃப் புதிய முதலீடுகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனாவ் ஒரே நாளில் விலை 10 சதவீதம் சரிந்தது.

இதனால் தற்போது பேப்பர் வெள்ளியை காட்டிலும் உலோக அடிப்படையிலான வெள்ளிக்கு தான் அதிகப்படியான டிமாண்ட் உருவாகியுள்ளது. உங்களிடம் வெள்ளி இருந்தால் ஒரு கிராம் கூட விற்றுவிடாதீர்கள், வெள்ளிக்கு தொழிற்துறையில் மிகப்பெரிய டிமாண்ட் இருக்கும் வேளையில் சீனாவும், அமெரிக்காவும் வெள்ளியை கட்டுப்படுத்தியிருக்கும் வேளையில் இதன் விலை எப்படி வேண்டுமானாலும் உயரலாம்.

தற்போதைய சூழ்நிலையில் வெள்ளி விலை சில சரிவுகளை சந்தித்தாலும் நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்து உயரும் என கணிக்கப்படுகிறது. இன்றைய சரிவும் இதற்கு உதாரணம், வெள்ளி விலை உயர்வுக்கு நம்பிக்கை அளிக்கும் 2 விஷயம், 1. தொழிற்துறை சேவை, 2. உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வெள்ளியை முக்கிய சேமிப்பாக பார்க்க துவங்கியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+