வெள்ளி தற்போது உலகின் 3வது பெரிய சொத்தாக விளங்குகிறது. பங்குகள் அல்லது பத்திரங்கள் போல் வருமானம் தராத வெள்ளி உலோகம், தொழிற்துறையில் இதன் பயன்பாடு அதிகரித்துள்ள காரணத்தாலும், புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வெள்ளி முக்கியமானதாக மாறியிருக்கும் வேளையில் சீனா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகியவை வெள்ளியை முக்கிய உலோகமாக அறிவித்து, இதை அதிகளவில் சேமிக்க துவங்கியுள்ளது.
பொதுவாக தங்கம் தான் முக்கிய உலோகமாக இருக்கும், ஆனால் இந்த ஆண்டு வெள்ளி முக்கிய உலோகமாக மாறிய 190 சதவீதத்திற்கும் அதிகமான லாபத்தை வெள்ளி முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது. இந்திய ரீடைல் சந்தையில் ஜனவரி 1ஆம் தேதி ஒரு கிலோ வெள்ளி விலை 98000 ரூபாயாக இருந்த நிலையில் 2,85,000 ரூபாய் வரையில் இந்த வருடம் உயர்ந்துள்ளது.

இந்த அதிரடியான விலை உயர்வு வெள்ளியை கிரிப்டோகரன்சி போல அதிகப்படியான ஏற்ற இறக்கத்தை காட்டுகிறது. இதனால் கிரிப்டோவில் இருக்கும் அதே ஆபத்து தன்மை வெள்ளியிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வரலாற்று தரவுகள் என்ன சொல்கிறது என்பதை முதலீட்டாளர்களை தாண்டி அனைவரும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
வெள்ளி விலை உயர்வு வெள்ளியை வாங்குவோரை தாண்டி சாமானிய மக்களையும் பாதிக்கும், சோலார் பேனல் முதல் ஏஐ சிப் வரையில், ஸ்மார்ட்போன் முதல் எலக்ட்ரிக் கார் வரையில் அனைத்திலும் வெள்ளி பயன்படுத்தும் காரணத்தால் வெள்ளி விலை உயர்வு இத்தகைய பொருட்களின் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்கள் வெள்ளி முதலீட்டாளர்களுக்கு கடும் பாடத்தை கற்பிக்கிறது. 1979-80இல் ஒரு அவுன்ஸ் வெள்ளி 6 டாலரில் இருந்து 49 டாலருக்கு உயர்ந்து சில மாதங்களில் 90 சதவீதத்துக்கு மேல் சரிந்தது. இதேபோல் 2011இல் 48 டாலரை தொட்ட பிறகு 75 சதவீதத்துக்கு மேல் வீழ்ந்தது. இந்த இரு முறையும் வெள்ளி விலை பல மடங்கு உயர்ந்த பிறகே சரிய தொடங்கியது.
கொரோனா கால குறைந்த விலையில் இருந்து இப்போது வெள்ளி விலை 6 மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 3 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த அதிரடியான விலை உயர்வு தான் முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் தற்போது தொழிற்துறையில் உருவாகியுள்ள தேவையை போல் 1979-80களிலும், 2011ல் உருவானதா என்றால் இல்லை.
வெள்ளி விலை ஏற்றத்தின் நீட்சி மற்றும் ஆபத்து
தற்போதைய வர்த்தக சூழ்நிலையில் வெள்ளி விலையின் இந்த ஏற்றம் இன்னும் தொடரலாம். ஆனால் வரலாற்றில் நடந்த சம்பவங்களை முதலீட்டாளர்களுக்கு சொல்வது என்னவென்றால், இந்த விலை உயர்வின் சைக்கிள் உடைந்தவுடன் வெள்ளி விலை 50 சதவீதத்துக்கு மேல் சரிய வாய்ப்புள்ளது என ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் பிக்சட் இன்கம் பிரிவில் CIO அதிகாரியான மனிஷ் பன்தியா ஈடி பத்திரிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதற்கு மத்தியில் அமெரிக்காவின் டிரம்ப் அரசு செக்ஷன் 232 அறிக்கை அக்டோபர் 2025இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இந்த ரிப்போர்ட் வெளியாக தாமதமாகியுள்ளது. இந்த அறிக்கை வெளியான பிறகு அதிகபட்சம் டிரம்ப் 90 நாட்களுக்குள் வரி விதிப்பது குறித்து முடிவு செய்வார். இது முடிவடைந்தவுடன் அமெரிக்காவுக்குள் வெள்ளியை சேமித்து வைக்கும் பழக்கம் குறையும், இதேபோல் வரி விதிப்பு அச்சம் இருக்கும் வரையில் சர்வதேச சந்தையில் இருந்து வெள்ளி அமெரிக்காவுக்கு செல்லும். அப்படி செல்லும் போது சந்தையில் டிமாண்ட் அதிகமாகி விலை உயரும்.
டிரம்ப் வரி விதித்த பின்பு வெள்ளி மீதான முதலீடுகள் தொடர்ந்தாலும், அமெரிக்காவுக்குள் கொண்டு வருவது குறையும், இதனால் சந்தையில் போதுமான சப்ளை கட்டாயம் இருக்கும்.
More From GoodReturns

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?



Click it and Unblock the Notifications