2025 ஆம் ஆண்டின் கடைசி வர்த்தக நாளான இன்று (டிசம்பர் 31), தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் ரீடைல் சந்தையை காட்டிலும் பியூச்சர்ஸ் சந்தையில் பெரும் சரிவை சந்தித்தன. ஆண்டு முழுவதும் புதிய உச்சங்களை தொட்டு வந்த இந்த தங்கம், வெள்ளி விலை கடைசி வர்த்தக நாளில் தரையைதட்டுகிறது.
உலகம் முழுவதும் இருக்கும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையிலும், கிரிப்டோ சந்தையிலும் ஏற்பட்ட சரிவை ஈடு செய்ய தங்கம் மற்றும் வெள்ளியில் செய்த முதலீட்டை விற்பனை செய்து தங்களுடைய கணக்கை லாபகரமாக முடிக்கும் பொருட்டு தீவிரமாக விற்பனை செய்து வருகின்றனர். ஆனாலும் இந்த ஆண்டு அதிகம் லாபம் கொடுத்த சொத்துக்களாக தங்கம் மற்ரும் வெள்ளி தான் உள்ளது.

இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) தளத்தில், மார்ச் 2026 முடியும் பியூச்சர்ஸ் ஒப்பந்தத்தின் வெள்ளி விலை சுமார் 6 சதவீதம் சரிந்து கிலோவுக்கு ரூ.2,35,952 ஆக வர்த்தகமாகி வருகிறது. இது நேற்றை வர்த்தக முடிவை ஒப்படும் போது சுமார் ரூ.15,060 குறைவாகும். அதேநேரம், பிப்ரவரி 2026 மாதம் முடியும் தங்கம் ஃப்யூச்சர்ஸ் 0.4 சதவீதம் குறைந்து 10 கிராமுக்கு ரூ.1,36,124 ஆக வர்த்தகமாகி வருகிறது.
சர்வதேச ஸ்பாட் தங்கம் விலை ஏறத்தாழ 0.3 சதவீதம் குறைந்து அவுன்ஸுக்கு 4334 டாலருக்கு வர்த்தகமானது. கடந்த வாரம் பதிவான உச்சமான 4549.71 டாலரில் இருந்து இது சிறிய அளவிலான சரிவை காட்டுகிறது. அமெரிக்க கோல்டு ஃப்யூச்சர்ஸ் 1 சதவீதம் சரிந்து 4346.50 ஆக நேற்று முடிவடைந்தது.
சர்வதேச ஸ்பாட் சந்தையில் வெள்ளி விலை இன்று 5 சதவீதம் வரையில் சரிந்து ஒரு அவுன்ஸுக்கு 72 டாலரில் வர்த்தகமாகி வருகிறது.
2025 ஆம் ஆண்டு தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டாளர்களுக்கு ஒரு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. தங்கம் சுமார் 70 சதவீதமும், வெள்ளி 150 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி அடைந்து பெரும் லாபத்தை கொடுத்தது. 1979 ஆம் ஆண்டுக்குப் பிறகு சிறந்த லாபத்தை இந்த ஆண்டு பதிவு செய்துள்ளன.
இந்த விலை உயர்வுக்கு மையப்புள்ளியாக இருந்தது உலகளாவிய மத்திய வங்கிகள் தொடர் தங்கம் வாங்கியது தான். இதை தொடக்ந்து முதலீட்டு சந்தையில் ஏற்றபட்ட மாற்றம், வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்பு ஆகியவை தங்கம், வெள்ளி விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணங்களாகும்.
வெள்ளியின் விலை உயர்வுக்கு தொழில்துறையில் இதன் தேவை அதிகரித்திருப்பது மிகவும் முக்கியமான காரணமாகும். குறிப்பாக சோலார் பேனல், எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி ஆகியவை பெரும் பங்கு வகித்தன.
ஏன் இந்த தற்காலிக சரிவு?
ஆண்டு இறுதியில் முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்யும் வழக்கம் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. புதிய உச்சங்களை தொட்ட பிறகு இது இயல்பான திருத்தமாகவும் இதை பார்க்கலாம். இருப்பினும், அடிப்படை காரணிகள் வலுவாக உள்ளதால், 2026 ஆம் ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக புவிசார் அரசியல் பதற்றங்கள், பணவீக்க எதிர்பார்ப்பு ஆகியவை தங்கம் மற்றும் வெள்ளியை பாதுகாப்பான முதலீடாக மாற்றியுள்ளது. இறுதியாக 2025ஆம் ஆண்டின் இறுதி சரிவு தற்காலிகமானது என்றே சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர். நீண்டகால முதலீட்டாளர்களுக்கு இது வாங்கும் வாய்ப்பாகவும் அமையலாம்.
More From GoodReturns

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

வெள்ளி விலை 15 ஆண்டுகளில் இல்லாத மோசமான சரிவு! அடுத்து என்ன நடக்கும்? நிபுணர்கள் சொல்வது இதுதான்!



Click it and Unblock the Notifications