சர்வதேச சந்தையில் வெள்ளி விலை சமீபத்தில் புதிய உச்சத்தை தொட்டது எல்லோருக்கும் தெரியும், இந்த நிலையில் இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது அனைவரின் பார்வையும் வெள்ளி மீது தான் இருந்தது. இதற்கு முக்கியமான காரணம் அமெரிக்க சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் நடந்த பெரும் முதலீட்டு மூலம் இதன் விலை தாறுமாறாக உயர்ந்தது.
இதன் எதிரொலியாக இன்று காலை ஆசிய சந்தை வர்த்தக துவக்கத்தில் ஸ்பாட் விலை ஒரு அவுன்ஸ் வெள்ளிக்கு சுமார் 83.93 டாலர் வரை உயர்ந்து, ஏழாவது நாளாக தொடர்ச்சியான உயர்வை பதிவு செய்தது. ஆனால் உச்சத்தை தொட்ட பிறகு விலை சுமார் 9 சதவீதம் வரை குறைந்தது 74.94 டாலருக்கு குநைந்தது. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 11 சதவீதம் உயர்ந்தது மூலம் 2008க்கு பிறகு மிகப்பெரிய ஒரு நாள் உயர்வை பதிவு செய்தது.
இதேவேளையில் சில மணிநேரத்தில் வெள்ளி விலை மீண்டும் 80 டாலரை கடந்து தற்போது 80.65 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

இது விடுமுறை காலம் என்பதால் விற்பனை அளவு குறைவாக இருக்கும் போதும் இதன் விலை அதிகளவில் உயர்ந்துள்ளதை காட்டுகிறது. வெள்ளியின் இந்த ஏற்றம் அக்டோபர் மாத ஷார்ட் ஸ்க்வீஸை விட அதிகமாக உள்ளது.
வெள்ளி விலை உயர்வுக்கான காரணம்
வெள்ளி விலை பெரிய அளவில் உயரும் என நம்பிக்கையில் உலகம் முழுவதும் பெரிய அளவில் முதலீடுகள் செய்யப்படுகிறது, இதேவேளையில் சந்தையில் வெள்ளியின் விநியோகம் குறைந்துள்ளது.
மறுமுனையில் வெள்ளிக்கு தொழிற்துறை தேவை அதிகமாக இருக்கும் காரணத்தால் இதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. குறிப்பாக சோலார் மின்சார பேனல், எலக்ட்ரிக் வாகனங்கள், செயற்கை நுண்ணறிவு உபகரணங்கள் போன்றவற்றில் வெள்ளி அதிகம் பயன்படுகிறது. இதனால் தேவை அதிகரித்துள்ளது.
விநியோகம் குறைவாக இருக்கும் வேளையில், டிமாண்ட் அதிகமாக இருக்கும் காரண்தால் இதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
பிளாட்டினம் விலையும் இதே போல உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் 40 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. இதேபோல் அமெரிக்காவின் நைஜீரியா தாக்குதல் மூலம் புதிய புவிசார் அரசியல் பதற்றம் உருவாகியுள்ளது. இதேபோல் டாலர் மதிப்பு சரிவை முதலீட்டாளர்கள் வெள்ளி, பிளாட்டினம், பல்லாடியம் போன்ற உலோகம் மீதான முதலீட்டின் மூலம் ஈடு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications