இந்திய சந்தையில் தங்கம் விலை உயர்வை காட்டிலும் வெள்ளி விலை கடுமையான உயர்ந்து முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதேவேளையில் தீபாவளி மற்றும் தந்தேராஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இந்தியா முழுவதும் வெள்ளிக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது.
தந்தேராஸ் பண்டிகை 18ஆம் தேதியும், தீபாவளி 20ஆம் தேதி கொண்டாடப்படும் வேளையில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவது இப்பண்டிகை காலத்தில் ஒரு பழக்கமாக இருந்து வருகிறது. தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் போதும் பெரும்பாலான மக்கள் வெள்ளியை வாங்குவார்கள் என்பதால் வெள்ளி விலை அடுத்த ஒரு வாரத்தில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் MCX ஸ்பாட் விலை தரவின்களின் படி, வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.1,71,085-ஆக வர்த்தகமாகியுள்ளது. இது கடந்த சில நாட்களில் குறிப்பிடத்தக்க உயர்வாகும். அக்டோபர் 10, 2025-இல் வெள்ளி விலை ரூ.1,62,432 மற்றும் அக்டோபர் 9, 2025-இல் ரூ.1,58,112 ஆக இருந்தது. இதுவே ரீடைல் சந்தையில் வெள்ளி ஒரு கிலோ 1,97,000 ரூபாய் வரையில் உயர்ந்தது.
வெள்ளி விலை உயர்வின் முக்கிய காரணம் தொழில்துறையில் உருவாக்கியுள்ள அதிகப்படியான தேவை மற்றும் பண்டிகை சீசன் காரணமாக அதிகரித்த விற்பனை. இதேபோல் தங்கத்தை வாங்க முடியாதவர்கள் தற்போது அதிகளவில் வெள்ளியில் முதலீடு செய்து வருகின்றனர்.
தொழில்துறை பொருத்த வரையில் எலக்ட்ரானிக்ஸ், சோலார் எர்னர்ஜி மற்றும் ஆட்டோமொபைல் துறைகள் போன்ற உயர் தொழில்நுட்ப பிரிவுகள் வெள்ளியை அதிகளவில் பயன்படுத்துகின்றன. தொழில்துறை தேவை அதிகரிக்கும்போது, வெள்ளி விலைகள் உயர்கின்றன. இதனால் வெள்ளிக்கான டிமாண்ட் தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது.
தீபாவளி மற்றும் தந்தேராஸ் பண்டிகை காலத்தில் வெள்ளி விலை 2 லட்ச அளவீட்டை கடந்து புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications