வெள்ளி விலை கொடுக்க போகும் செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய முதலீட்டு சந்தையில் தங்கத்திற்கு இணையாக லாபம் கொடுத்து வரும் ஒரே முதலீடு வெள்ளி தான்.

சொல்லப்போனால் தங்கத்தினை விட அதிக ஏற்றம் இறக்கம் காண்பது தங்கம் தான். வெள்ளியின் தேவையானது தொழில் துறையில் அதிகரித்து வரும் நிலையில், வெள்ளியின் விலையானது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

நிபுணர்கள் தங்கம் வெள்ளி விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கும். ஆக நீண்டகால நோக்கில் வாங்க வேண்டும் என நினைப்பவர்கள், எப்போது வேண்டுமானாலும் இந்த நெருக்கடியான காலத்தில் வாங்கி வைக்கலாம். அது நிச்சயம் ஒரு நாள் லாபம் கொடுக்கும் என்றும் கூறியுள்ளனர்.

லட்சுமி விலாஸ் பேங்கைத் தொடர்ந்து, தனலட்சுமி வங்கியிலும் CEO-வை வெளியேற்றிய பங்குதாரர்கள்!லட்சுமி விலாஸ் பேங்கைத் தொடர்ந்து, தனலட்சுமி வங்கியிலும் CEO-வை வெளியேற்றிய பங்குதாரர்கள்!

தங்கம் வெள்ளி விலை அதிகரிக்கும்

தங்கம் வெள்ளி விலை அதிகரிக்கும்

அமெரிக்காவின் முதலீட்டு குருவான ஜிம் ரோஜெர்ஸ், மிகப்பெரிய முதலீட்டாளர், பொருளாதார நிபுணருமான, முதலீட்டாளார் என பல பதவிகளை தன்னகத்தே கொண்டவர். இவர் சில் வாரங்களுக்கு முன்பு தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது மீண்டும் அதிகரிக்கும். ஏனெனில் மக்கள் அவற்றை வாங்கி வைத்துக் கொண்டே தான் இருப்பர். இதன் விளைவாக மீண்டும் அவைகள் விரைவில் புதிய உச்சத்தினை தொடும். நான் கடந்த 2019ம் ஆண்டு முதல் தங்கம் மற்றும் வெள்ளியில் தொடர்ச்சியாக முதலீடுகளை செய்து வருகிறேன், இனியும் தொடர்ந்து இன்னும் சிறிது காலத்திற்கு தொடர்ந்து முதலீடு செய்வேன் எனவும் கூறியிருந்தார்.

வெள்ளிக்கான தேவை அதிகரிப்பு

வெள்ளிக்கான தேவை அதிகரிப்பு

தொழில்துறையில் பயன்படுத்தப்படும் வெள்ளியின் தேவையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஏனெனில் இது வரை லாக்டவுனினால் முடங்கிக் கிடந்த உலகம், கடந்த சில வாரங்களாகவே புத்துயிர் பெற்று இயங்கத் தொடங்கியுள்ளன. இதனால் தொழில் சாலைகள் ஓரளவுக்கு வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளன. இதனால் வெள்ளியின் தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நடப்பு ஆண்டில் வெள்ளி விலை நிலவரம்

நடப்பு ஆண்டில் வெள்ளி விலை நிலவரம்

கடந்த சில ஆண்டுகளாகவே சற்று பெரியவில் மாற்றம் இல்லாமல், வர்த்தகமாக தொடங்கிய வெள்ளியின் விலையானது, நடப்பு ஆண்டில் கொரோனா பரவல் தொடங்கிய நிலையில் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியது. சரியாக சொல்ல வேண்டுமானால் கடந்த மார்ச் 11 அன்று 11.645 டாலர்கள் வரை சென்ற வெள்ளியின் விலையானது, ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 29.915 டாலர்கள் வரை சென்றது.

செப்டம்பர் வெள்ளி விலை நிலவரம்

செப்டம்பர் வெள்ளி விலை நிலவரம்

ஏப்ரல் மாதம் தொடங்கி ஆகஸ்ட் வரையில் தொடர் ஏற்றத்தினை கண்டு வந்த வெள்ளியின் விலையானது, கடந்த செப்டம்பர் மாதத்தில் 21.810 டாலர்கள் வரை குறைந்தது. எனினும் செம்ப்டம்பர் மாதத்தில் முடிவு 23.494 டாலர்களாகும். எனினும் இன்று அக்டோபர் முதல் நாளான இன்று 23.455 டாலர்களாக தொடங்கியுள்ளது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

இன்றைய சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் வெள்ளியின் விலையானது 1% அதிகரித்து 23.730 டாலரகளாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே தடுமாற்றத்தில் இருந்து வந்த வெள்ளியின் விலையானது, இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. குறிப்பாக தற்போது சீனாவில் வெள்ளியின் தேவை அதிகரித்து வரும் நிலையில், வெள்ளியின் விலை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபெடரல் வட்டி குறைவு

ஃபெடரல் வட்டி குறைவு

அமெரிக்காவின் வட்டி விகிதம் அடுத்த சில ஆண்டுகளுகு எந்த மாற்றமும் இருக்காது என்று ஃபெடரல் வங்கி ஏற்கனவே கூறியிருந்தது. ஏனெனில் பொருளாதார வளர்ச்சியினை மீட்டெடுக்கவும், டாலரின் மதிப்பினை நிலை நிறுத்தவும் வட்டி விகிதம் அப்படியே இருக்கும் என்றும் கூறியிருந்தது. வட்டி குறைவாக இருப்பின் பத்திர சந்தைகளில் லாபம் குறையும். மற்ற வங்கி முதலீடுகளிலும் லாபம் குறையும். இதனால் விலையுயர்ந்த ஆபரணங்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது அதிகரிக்கும். அதிலும் வெள்ளியின் தேவையானது தொழில் துறையிலும் அதிகம் இருப்பதால், இது நிச்சயம் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

வெள்ளிக்கு அடுத்த டார்கெட்

வெள்ளிக்கு அடுத்த டார்கெட்

நடப்பு ஆண்டில் வெள்ளியின் விலையானது அவுன்ஸூக்கு 25 டாலர்கள் வரை செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே அடுத்தாண்டில் அவுன்ஸூக்கு 27 டாலர்கள் வரை செல்லலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர். பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலை அதிகரிக்கும் போது, வெள்ளியின் விலையும் அதிகரிக்கும், இதற்கு வெள்ளியின் தேவையும் கூடுதலாக அழுத்தம் கொடுக்கும் என்றும் கூறியுள்ளனர்.

வெள்ளி உற்பத்தி சரிவு

வெள்ளி உற்பத்தி சரிவு

உலகம் முழுவதும் கொரோனாவின் காரணமாக முடங்கிக் கிடக்கும் நிலையில், வெள்ளியின் உற்பத்தியானது 7% வரை குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் சில இடங்களில் தற்போது உற்பத்தி தொடங்கியுள்ளது. எனினும் இது எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பழைய நிலையை எட்டும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

சுமார் 40% வெள்ளி சப்ளை

சுமார் 40% வெள்ளி சப்ளை

லத்தீன் அமெரிக்காவில், குறிப்பாக மெக்ஸிகோ மற்றும் பெருவில் இருந்து தான் சுமார் 40% வெள்ளி சப்ளை செய்யப்படுகின்றது. அங்கு வைரஸ் பரவலானது இன்னும் மோசமாக பரவி வரும் நிலையே நிலவி வருகின்றது. நிலத்தடியில் உள்ள சுரங்கங்களில் சமூக இடைவெளியினை கடைபிடிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

வெள்ளி பற்றாக்குறை இருக்கும்

வெள்ளி பற்றாக்குறை இருக்கும்

ஆக சப்ளை மற்றும் தேவையை ஒப்பிட்டு பார்க்கும் போது, வெள்ளியின் சந்தையில் அடுத்த 2022ம் ஆண்டுல் வரையில் சிறிய பற்றாக்குறை என்பது இருக்கும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆக இப்படி பல காரணிகளும் வெள்ளிக்கு ஆதரவாகவே இருந்து வருகின்றன.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளியின் விலையானது தற்போது 381 ரூபாய் அதிகரித்து, 60,300 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது 0.64% ஏற்றமாகும். கடந்த சில தினங்களாகவே சற்று சரிவில் இருந்து வந்த நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. ஆக நீண்ட கால நோக்கில் வெள்ளியினை வாங்கி வைக்க இது சாதகமான இடம் தான் என்கின்றனர் நிபுணர்கள்.

சென்னையில் ஆபரண வெள்ளியின் விலை

சென்னையில் ஆபரண வெள்ளியின் விலை

சென்னையில் ஆபரண வெள்ளியினை பொறுத்த வரையில் இன்று இன்னும் மாற்றம் காணாத நிலையில், நேற்று கிராமுக்கு 61 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 61,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே சற்று குறைந்த வண்ணமே இருந்தாலும், செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 69,500 ரூபாயாகவும், குறைந்தபட்சம் 57,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Silver prices will soar amid strong demand

Silver prices will soar amid strong demand; gold price also will go up in future.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X