2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்த வண்ணம் தான் இருக்கிறது. தங்கத்தை பொறுத்தவரை படிப்படியாக உயர்ந்த வந்து செப்டம்பர் , அக்டோபர் மாதங்களில் வரலாறு காணாத உச்சத்தை தொட்டது .இதன் பிறகு நவம்பர் மாதத்தில் ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை டிசம்பரில் எதிர்பாராத விதமாக தன்னுடைய வரலாற்று உச்சத்தை தொட்டது.
வெள்ளி விலை இந்த ஆண்டு தங்கத்தை விட அதிகமாக உயர்வு கண்டிருக்கிறது. கடந்த ஆறு மாத காலத்தில் பார்க்கும் போது திடீரென பெரும் அளவு ஏறுவது திடீரென சரிவது என தொடர்ச்சியாக வெள்ளி விலை பெரிய ஏற்ற இறக்கங்களுடன் தான் காணப்படுகிறது. கடந்த அக்டோபர் 17ஆம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 12,200 ரூபாய் என்றும் ஒரு சவரன் 97,600 ரூபாய் என்றும் வரலாற்று உச்சத்தை எட்டியது. இதன் பிறகு விலை படிப்படியாக சரிந்தது. இந்த நிலையில் டிசம்பர் 10ஆம் தேதியிலிருந்து மீண்டும் தங்கம் தன்னுடைய வேலையை காட்டி வருகிறது .

டிசம்பர் 15ஆம் தேதி அன்று யாரும் எதிர்பாராத வகையில் ஒரு கிராம் தங்கம் 12515 ரூபாய் என்றும் ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்தை தாண்டி 1,00,120 ரூபாய் என்றும் வர்த்தகமானது. அதன் பிறகு தங்கம் விலை லேசாக சரிந்து இருக்கிறது இருந்தாலும் பெரிய அளவில் விலை குறையவில்லை.2025ஆம் ஆண்டு முடிவதற்கு இன்னும் பத்து நாட்களே இருக்கக்கூடிய சூழலில் இந்த பத்து நாட்களில் விலை ஏறுமா இறங்குமா என மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
ஆண்டு இறுதி என்றாலே பெரும்பாலான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விடுமுறைகளுக்கு செல்வார்கள் என்பதால் தங்களுடைய முதலீடுகளை விற்று பணமாக்குவார்கள் அவ்வாறு அவர்கள் தங்கத்தில் செய்த முதலீடுகளை விற்பனை செய்த லாபம் பார்த்தால் தங்கத்தின் விலை ஓரளவு குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் ஒரு சவரன் 95,000க்கு கீழே செல்வதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்றே கணிக்கப்படுகிறது.
இன்றைய தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 12,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 99,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1, 24,000 ரூபாய் என விற்பனையாகிறது.24 கேரட் தங்கம் ஒரு கிராம் 13,528 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,08,224 க்கும், 10 கிராம் 1, 35,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு தரகு நிறுவனங்களும் சர்வதேச நிதி அமைப்புகளும் தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருக்கும் என்று தான் கணிப்பு வெளியிட்டு இருக்கின்றன.
ஏழைகளின் தங்கம் என அழைக்கப்படும் வெள்ளியின் விலையும் சாமானியர்களை கண்ணீர் வடிக்க வைக்கிறது. இன்று சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 226 ரூபாய் என வரலாற்று உச்சத்தை தொட்டுவிட்டது. அதாவது ஒரு கிலோ வெள்ளி 2,26,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . வெள்ளியை இந்த ஆறு நாட்களில் இரண்டு நாட்கள் விலை குறைந்து இருக்கிறது, நான்கு நாட்கள் விலை உயர்ந்திருக்கிறது .
திங்கட்கிழமை விலையோடு ஒப்பீடு செய்து பார்த்தால் வெள்ளியின் விலை டிசம்பர் 1ஆம் தேதி உடன் ஒப்பீடு செய்து பார்த்தால் ஒரு கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து இருக்கிறது அதாவது ஒரு கிலோவுக்கு 30,000 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. அண்மையில் சீனா வெள்ளி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்தது , அமெரிக்க அரசாங்கம் வெள்ளியை அரிய வகை கனிமமாக பட்டியலிட்டது . தொழில் துறை ரீதியாக வெள்ளிக்கான தேவை அதிகரித்திருப்பது , ஆனால் இந்த தேவைகளுக்கு ஏற்ப சப்ளை குறைவாக இருப்பது ஆகியவை வெள்ளி விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.
More From GoodReturns

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?



Click it and Unblock the Notifications