Silver Rate Today: வெள்ளி விலை 3 லட்சத்தை தாண்டியது.. இனியும் தொடர்ந்து உயரும்..? நிபுணரின் பிளிச் பதில்..!

இந்திய மக்களின் முக்கிய முதலீடாக இருக்கும் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று இரு உலோகமும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதிலும் முக்கியமாக வெள்ளி விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 3 லட்ச அளவீட்டை இன்று பதிவு செய்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே வெள்ளி விலை வலுவான உயர்வை கண்டு வந்த நிலையில், இன்று MCX சந்தையில் காலை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிலோவுக்கு 10,800 ரூபாய் அதாவது நேற்றைய விலையை காட்டிலும் 4 சதவீத உயர்ந்து 2,86,100 ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டது.

Silver Rate Today: வெள்ளி விலை 3 லட்சத்தை தாண்டியது! இனியும் தொடர்ந்து உயருமா? நிபுணர் பிளிச் பதில்

மேலும் சர்வதேச சந்தையில் வெள்ளி விலை ஒரு டிராய் அவுன்ஸுக்கு 90 டாலர் என்ற பென்ச் மார்க் அளவை தாண்டி 91.56 டாலரை அளவை பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக இன்று ஒரே நாளில் ரீடைல் சந்தையில் 15000 ரூபாய் அளவில் உயர்ந்து வெள்ளி விலை 3,07,000 ரூபாய் அளவீட்டை தொட்டு உள்ளது.

தற்போது மக்களின் முக்கிய கேள்வியே இந்த நிலை தொடர்ந்து உயருமா..? அல்லது சரியுமா..? என்பது தான். தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளன. ஒருப்பக்கம் மத்திய வங்கிகள் வாங்குவது, தொழிற்துறை தேவை ஆகியவை நிலையாக இருந்தாலும், இதை தாண்டி தற்போது பல்வேறு காரணங்கள் இதன் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

இதில் முதலாவதாக, எப்போதெல்லாம் முதலீட்டு சந்தையிலும், பொருளாதாரத்திலும் அச்சம் நிலவுகிறதோ, அப்போதெல்லாம் பாதுகாப்பான முதலீட்டு சொத்தாக கருதப்படும் தங்கம், வெள்ளி மீதான முதலீடுகள் அதிகரித்து இதன் தேவை அதிகரிக்கும்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட short squeeze மற்றும் லண்டன் சந்தையில் விநியோக பாதிப்புகள் வெள்ளி விலை உயர முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு துவக்கம் முதல் சர்வதே அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் நிலையற்றதாக இருப்பதால் முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களை அதிகம் நம்புகின்றனர்.

Silver Rate Today: வெள்ளி விலை 3 லட்சத்தை தாண்டியது! இனியும் தொடர்ந்து உயருமா? நிபுணர் பிளிச் பதில்

அமெரிக்காவில் டிரம்ப் அரசு ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவெல் மீது குற்றவியல் விசாரணை தொடங்கியுள்ளது. டிரம்ப்-க்கும் ஜெரோம் பவல் ஆகியோர் மத்தியில் நீண்ட காலமாக கருத்து முறன்பாடு இருந்து வரும் வேளையில், ஜெரோம் பவல் கடந்த ஆண்டு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஃபெடரல் ரிசர்வ் கட்டிட மறுசீரமைப்பு தொடர்பான விசாரணையில் அளித்த வாக்குமூலம் தொடர்பாக குற்றவியல் விசாரணை நடைபெறுகிறது.

இதற்கு பதில் அலித்த ஜெரோம் பவெல் இந்த சமன் அரசியல் அழுத்தத்திற்கான முன்னெச்சரிக்கை என்று விமர்சனம் செய்துள்ளார். இது ஃபெடரல் ரிசர்வின் சுதந்திரத்தை பாதிக்கும் என்ற அச்சம் முதலீட்டாளர்களை பாதுகாப்பான சொத்துகளை நோக்கி தள்ளியுள்ளது.

இதேபோல் நேற்று வெள்ளியான அமெரிக்காவின் சில்லறை பணவீக்கம் கணிக்கப்பட்டதை காட்டிலும் குறைவாக இருந்த காரணத்தால் டிரம்ப், ஜெரோம் பவல்-ஐ கடுமையாக விமர்சனம் செய்து, கிண்டல் செய்து வட்டி விகிதத்தை குறைக்க வலியுறுத்தினார். இதனால் அடுத்த கூட்டத்தில் வட்டி விகிதம் குறைப்பதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. பொதுவாக வட்டி குறைக்கும் போது பெருமளவிலான பணம் தங்கம், வெள்ளி மீது குவியும், இதுவும் வெள்ளி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

Silver Rate Today: வெள்ளி விலை 3 லட்சத்தை தாண்டியது! இனியும் தொடர்ந்து உயருமா? நிபுணர் பிளிச் பதில்

புவிசார் அரசியல் பதற்றங்கள்
ஈரானில் நடைபெறும் பெரிய அளவிலான மக்கள் போராட்டங்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானியர்களை தொடர்ந்து போராடுமாறு வலியுறுத்தியுள்ளார். உங்களுக்கான "உதவி வருகிறது" என்று சமுக வலைத்தளம் மூலம் பதிவிட்டு உள்ளார்.

மேலும் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார் டிரம்ப். இதுவும் உலகளாவிய வர்த்தகத்தையும், இந்தியா, சீனா போன்ற நாடுகளையும் கடுமையாக பாதித்து வருகிறது.

இதை தாண்டி வெனிசுலாவுடனான அமெரிக்க உறவு அதிகரித்துள்ளது. வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு தற்போது அமெரிக்காவுக்கு சென்று வருகிறது.

ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர், தைவான் மூலம் சீனா-ஜப்பான் இடையேயான பதற்றம் அதிகரிப்பு, அமெரிக்கா கிரீன்லாந்தை வாங்கும் முயற்சி போன்றவை உலக அளவில் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.

இந்த அனைத்து காரணங்களும் பங்குச்சந்தை, கிரிப்டோ காட்டிலும் தங்கம், வெள்ளியை சிறப்பாக செயல்பட வைத்துள்ளன. தங்கத்திற்கு இல்லாத ஒகு விஷயம் வெள்ளிக்கு உள்ளது, வெள்ளிக்கான தொழில்துறை டிமாண்ட் அதிகம் உள்ளதால், இதற்கான டிமாண்ட் மற்றும் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது சந்தையில் 1000 மில்லியன் அவுன்ஸ் வெள்ளி வருகிறது என்றால் சந்தையில் இதற்கான டிமாண்ட் 1200 மில்லியன் அவுன்ஸ் ஆக உள்ளது.

இந்த நிலையில் சந்தை நிபுணர்கள் கூறுகையில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான விலை ஏற்றம் தொடரும் என்றாலும், சில சரிவுகள் வரலாம் என்று எச்சரிக்கின்றனர். முதலீட்டாளர்கள் இப்போது வெள்ளியை பாதுகாப்பான விருப்பமாக பார்க்கின்றனர். உலக பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமைகள் மாறும்போது வெள்ளி விலை தடுமாற கூடும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+