சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. இந்திய சந்தையில் நிலவும் டிமாண்ட் மற்றும் விற்பனையை தாண்டி சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார - வர்த்தக சூழ்நிலை தான் தங்கம் வெள்ளி விலையை தீர்மானிக்கிறது.
இப்படி பார்க்கும் போது, டிரம்ப்-ன் வெனிசுலா நாட்டு தாக்குதல், கிரீன்லாந்து நாட்டை கைப்பற்ற ஐரோப்பா மீது விதிக்கப்படும் வரி அச்சுறுத்தல் முதலீட்டு சந்தையை கலங்கடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதன் படி கடந்த 20-25 நாட்களாக தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வெள்ளி விலை ஒரே நாளில் சுமார் 20000 ரூபாய் உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்களையும், முதலீட்டாளர்களையும் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை
நேற்று வர்த்தக முடிவில் 1 கிராம் ஆபரண தங்கம் 14550 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 2 முறை விலை உயர்ந்து 14,750 ரூபாயாக உள்ளது. காலையில் கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்த தங்கம், மாலையில் 130 ரூபாய் வரையில் உயர்ந்தது. இதன் மூலம் ஒருபவுன் தங்கம் விலை 1,18,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று 2 முறை உயர்வைக் கண்டுள்ளது. காலை நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் ரூ.10 உயர்ந்து கிராம் ரூ.365 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரே நாளில் வெள்ளி விலை ரூ.20 உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ வெள்ளி ரூ.3.65 லட்சம் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
பொதுமக்கள் அதிர்ச்சி
தங்கம், வெள்ளி விலை இன்று தடாலடியாக உயர்ந்து வருவது நகை வாங்க திட்டமிட்டிருந்த நடுத்தர குடும்பங்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. அதே நேரத்தில், ஏற்கனவே முதலீடு செய்துள்ளவர்களுக்கு இந்த விலை உயர்வு லாபத்தை தரும் சூழலை உருவாக்கியுள்ளது. சர்வதேச சந்தை நிலவரம், டாலர் மதிப்பு மாற்றம் மற்றும் முதலீட்டாளர்களின் பாதுகாப்பான முதலீட்டு தேடல் ஆகியவை இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications