இந்த ஆண்டின் (2025) தொடக்கத்தில் இருந்து வெள்ளி விலை 59% மற்றும் தங்கத்தின் விலை 47% உயர்ந்துள்ளது. ஆனால், இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி (Nifty) வெறும் 4% மட்டுமே உயர்ந்துள்ளது. இந்த விகிதத்தை பார்க்கும்போது, இந்திய சந்தையில் பெரும் மாற்றம் வரப்போகிறதா என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற்றம் : இந்திய பங்குச் சந்தையில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடுகளை வெளியேற்றி வருகின்றனர். பலவீனமான காலாண்டு முடிவுகள், நிறுவனங்களின் மதிப்பீட்டு குறைப்பு, அமெரிக்க டாலரின் வலு மற்றும் வர்த்தகப் பதட்டங்கள் காரணமாக சுமார் ரூ.1.48 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை அவர்கள் விற்றுள்ளனர். இதன் விளைவாக, 2019 இறுதியில் 22% ஆக இருந்த அந்நிய முதலீட்டாளர்களின் பங்குகள், தற்போது 16% ஆக குறைந்துள்ளது. இருப்பினும், இந்த சரிவுக்கு மத்தியிலும் சில அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்கள் வாய்ப்புகளை கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்டின் பங்குப் பிரிவின் தலைவர் ஸ்ரேயாஸ் தேவல்த்கர் கூறுகையில், "நிஃப்டியின் வருவாய் வளர்ச்சி மற்றும் துறை சார்ந்த சுழற்சி குறிப்பாக வங்கிகள், தொலைத்தொடர்பு மற்றும் ரசாயனத் துறைகள் போன்றவை தங்கத்தை விட சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது. விலைமதிப்பற்ற தங்கங்கள் இப்போது வருவாய் வேகம் குறைய தொடங்கி, பங்குச் சந்தைக்கு சாதகமான ரிஸ்க்-ரிவார்டு விகிதம் உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பங்குச் சந்தை இனி உயரும் : கடந்த 12 மாதங்களாக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய பங்குச் சந்தை, இனி வலுப்பெற வாய்ப்புள்ளதாக உலகளாவிய வங்கி நிறுவனமான HSBC தெரிவித்துள்ளது. HSBC, இந்தியப் பங்குச் சந்தைக்கான தனது மதிப்பீட்டை நடுநிலை என்பதில் இருந்து ஓவர்வெயிட் என்று உயர்த்தியுள்ளது.
குறைந்த மதிப்பீடுகள், வருவாயில் மெதுவான மீட்பு மற்றும் அந்நிய முதலீட்டாளர்களின் குறைந்த நிலைப்பாடு ஆகியவை சந்தை குறித்து நேர்மறையான பார்வையை தருகின்றன. 12 மாத இடைவெளிக்கு பிறகு, அந்நிய முதலீடுகள் மீண்டும் வரத் தொடங்குவதற்கான சரியான சூழல் உருவாகியுள்ளது என்று HSBC தெரிவித்துள்ளது.
தங்கம், வெள்ளியின் அசுர வளர்ச்சி ஏன்..? : உலகளாவிய வர்த்தகப் பதட்டங்கள், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்குவது மற்றும் ஃபெடரல் வங்கியின் கொள்கை குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் தங்கம் விலை உயர்ந்துள்ளது. வெள்ளியை பொறுத்தவரை வலுவான தொழில் துறை தேவை மற்றும் விநியோக சங்கிலி தடைகள் காரணமாக பிம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக யூனியன் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனியின் பங்குப் பிரிவின் தலைவர் சஞ்சய் பெம்பால்கர் கூறுகையில், பல மத்திய வங்கிகள், அமெரிக்க டாலர் மீதான தங்களது அபாயத்தை குறைக்க, விலைமதிப்பற்ற உலோகங்களில் முதலீடு செய்கின்றன. இந்த வாங்குதல் எவ்வளவு காலம் தொடரும் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
அதேபோல், ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸின் மூத்த பகுப்பாய்வாளர் ஜிகர் த்ரிவேதி கூறுகையில், உலகளாவிய விநியோக பற்றாக்குறை, முதலீட்டாளர்களின் ஆர்வம் மற்றும் வலுவான தொழில் துறை தேவை ஆகியவற்றால், வெள்ளி அடுத்த 6 மாதங்களுக்கு கிலோவுக்கு ரூ.1,70,000 முதல் ரூ.1,75,000 வரை உயர வாய்ப்புள்ளது. தற்போதைய நிலைகள் வெள்ளியில் முதலீடு செய்ய சரியான நேரம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Marcellus இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனத்தின் ஆய்வு பிரிவின் தலைவர் கிருஷ்ணன் வி.ஆர். கூறுகையில், தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டும் கடந்த ஓராண்டில் சாதனை வருமானத்தை அளித்துள்ளதால், நான் இப்போது அதில் 8 முதல் 10% க்கு மேல் முதலீடு செய்ய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
2025-இன் இறுதிப் பகுதியில், இந்திய பங்குச் சந்தைகள் ஒரு திருப்புமுனையில் நிற்கின்றன. அந்நிய முதலீட்டாளர்களின் நிலைப்பாடு குறைவாக உள்ளது. அதேபோல், மதிப்பீடுகள் சரிந்துள்ளன. விலைமதிப்பற்ற உலோகங்களின் எழுச்சி நீடித்தாலும், வரும் ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தைகள் உயர்ந்து செயல்பட வாய்ப்புகள் அதிகம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
More From GoodReturns

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

உங்க பணத்தை இரட்டிப்பாக்கும் போஸ்ட் ஆபிஸ் முதலீட்டு திட்டம்!! ரூ.1000 கூட முதலீடு செய்யலாம்!!

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications