டாடா குடும்பத்தில் பல முக்கிய உறுப்பினர்கள் பற்றிய பின்னணி பெரும்பாலான மக்களுக்கு இன்னும் தெரியவில்லை. சமூக வெளிச்சத்துக்கு பலர் வருவதில்லை. அவர்களது குடும்ப தொழில் பற்றியும் பிரஸ்தாபம் செய்வதில்லை.
அப்படியொருவர்தான் ரத்தன் டாடாவின் சித்தியும் நோயல் டாடாவின் அம்மாவுமான சைமன் டாடா. லாக்மே (Lakme) வெற்றிக்குக் காரணகர்த்தா. டாடாவின் வெஸ்ட்சைடு தொடங்குவதற்கும் காரணமாக இருந்தவர்.

சைரஸ் மிஸ்திரியின் இறுதிச்சடங்கில் டாடா குடும்பத்தின் சார்பில் சைமன் டாடா மட்டுமே கலந்து கொண்டார். டாடா குடும்பத்துக்கும் சைரஸ் மிஸ்திரி குடும்பத்துக்கும் இருக்கும் கருத்து வேறுபாடுகளுக்கு நடுவே இறுதிச்சடங்கில் சைமன் டாடா பங்கேற்றபோது அதுதான் எங்கும் ஒரே பேச்சாக இருந்தது.
1930 ஆம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவாவில் பிறந்தார் சைமன் டாடா. ஜெனிவா பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்த சைமன் தனது எதிர்கால முயற்சிகளுக்கு அடித்தளம் அமைத்தார். 1953 ஆம் ஆண்டு அவர் இந்தியாவுக்கு நாவல் ஹெச்.டாடாவுடன் வந்தார். 1955 ஆம் ஆண்டு நாவல் டாடாவுடன் சைமன் இணைந்ததும் இந்தியாவில் டாடா குடும்பத்துடன் சைமனின் வாழ்க்கைப்பயணம் தொடங்கியது.
மும்பையை தனது நிரந்தர இல்லமாக்கிக் கொண்டார். நோயல் டாடாவின் தாய் ஆன சைமன் நாவல்லை திருமணம் செய்து கொண்டதும் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவின் சித்தி ஆனார். 1962 ஆம் ஆண்டில் லாக்மே போர்டில் சைமன் உறுப்பினரானதும் டாடா பிஸினஸ் ஏரியாவில் சைமனின் நுழைவு நிகழ்ந்தது.
அப்போது டாடா ஆயில் மில்லின் துணை நிறுவனமாக லாக்மே இருந்தது. சைமனின் புத்தி சாதுர்யமான முயற்சிகளால் லாக்மே வெளிச்சத்துக்கு வந்தது. 1961இல் அவர் நிர்வாக இயக்குநராக ஆனார். 1982இல் தலைவர் ஆனார். லாக்மே தயாரிப்புகளின் பார்முலாவை அவரே உருவாக்கியதாகவும் அதை வெளிநாடுகளில் பரிசோதனை செய்ததாகவும் சைமன் கூறினார்.
அவரது வழிகாட்டுதலின் கீழ் லாக்மே இந்தியாவில் முன்னணி காஸ்மெடிக் கம்பெனியாக உருவெடுத்தது. இது அவரது புகழை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் கொண்டு சேர்த்தது.
அவரது தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைமையினாலும் அயராத உழைப்பினாலும் லாக்மே பெரும் வெற்றியைப் பெற்றது.
சைமன் டாடாவின் தொழில்முனைப்பு ஆர்வம் அவரை லாக்மேயுடன் நிறுத்தவில்லை. ரிடைல் செக்டாரில் உள்ள வாய்ப்பைப் பார்த்து அவர் முக்கியமான முடிவுகளை எடுத்து சந்தையில் டாடாவின் இருப்பை உணர்த்தினார். 1996இல் லாக்மேயைச ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட்டுடன் இணைத்ததால் டாடாவின் பேர்போன வெஸ்ட்சைடு பிராண்டு உருவானது.
இந்த பிராண்டு விரைவிலேயே எல்லா வீடுகளிலும் சென்று நிறைந்தது. காஸ்மெடிக்ஸில் இருந்து ரீடெய்லுக்கு நுழைந்தது சைமனின் பன்முகத் தன்மையை காட்டியது. அவரை ஒரு பெண் தொழில் அதிபராகவும் எடுத்துக்காட்டியது.
அவர் சர் ரத்தன் டாடா இன்ஸ்டிடியூட்டின் தலைவராகவும் இருந்தார். சில்ட்ரன் ஆப் தி வெர்ல்டு இந்தியாவின் அறக்கட்டளை அறங்காவலராகவும் இருந்தார். சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களையும் வாய்ப்பு இல்லாதவர்களையும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளையும் சமூக, மத, இன, கலாசார, அரசியல் நம்பிக்கைகள் இல்லாமல் அணுகுவதற்கு உதவியது.
கலைகளுக்கான இந்திய அறக்கட்டளையின் அறங்காவலராகவும் சைமன் டாடா பதவி வகித்தார். படைப்புகளை உருவாக்கவும், கமிஷன் ஆராய்ச்சிகளையும் ஒரு பப்ளிக் பிளாட்பார்மை உருவாக்கி அதன் மூலம் மக்கள் அணுகக் கூடிய வகையிலும் கலைஞர்களின் திறமையை ஊக்குவிப்பதிலும் அடிப்படை கலை அமைப்புகளை உருவாக்குவதிலும் திறம்பட செயல்பட்டார்.
நோயல் டாடா டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷனின் தலைவராகவும் டிரென்டின் துணைத்தலைவராகவும் இருந்தார். அவரை பொதுவெளியில் பார்ப்பது மிகவும் அரிதாகும். சச்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் நோயல் படித்தார். கான்சாய் நெரோலேக் பெயிண்ட்ஸின் இயக்குநராகவும், டைடன் இண்டஸ்ட்ரீஸ், வோல்டாஸிலும் இயக்குநராகவும் அவர் இருந்தார்.
சைமனின் மருமகள் ஆலுவும் நோயலின் மனைவியுமான பல்லோன்ஜி மிஸ்திரி டாடா சன்ஸில் மெஜாரிட்டி பங்கை வைத்துள்ளார்.
Xerxes Desai : இந்தியாவின் முதல் quartz வாட்ச் அறிமுகம்.. டைட்டான் நிறுவனத்தின் பிறப்புக்கு காரணம்!!
ஒரு பிரஞ்சு சுற்றுலாப் பயணியாக இருந்து சைமனின் வாழ்க்கைப் பயணம் டாடா சகாப்தத்தில் பங்கெடுக்க வைத்தது. லாக்மேயை வளர்த்தது வெஸ்ட்சைடை டாடா வரலாற்றில் ஒரு மைல் கல்லாக்கியது சைமனின் பங்காகும். அவரது வாழ்க்கைப் பயணம் டாடா குடும்பத்தையும் தாண்டி எதிர்கால சந்ததியினருக்கு பெரும் உத்வேகமாக விளங்குகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications