25 லட்சம் திருமணம்.. இந்தியர்கள் எப்போதுமே மாஸ் தான்...!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய மாநில அரசுகள் கொரோனா தொற்றுப் பாதிப்பு குறைந்த காரணத்தால் லாக்டவுன் கட்டுப்பாடுகளை அதிகளவில் குறைத்தது, இதுமட்டும் அல்லாமல் திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்வோர் எண்ணிக்கை கட்டுப்பாட்டையும் தளர்த்திய காரணத்தால் இந்தியா முழுவதும் மக்கள் விமர்சியாக திருமணங்களைச் செய்துகொள்ளத் துவங்கியுள்ளனர்.

 

ஒருபக்கம் புதிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் பரவி வரும் வேளையில் அரசு புதிய லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதிக்கும் திருமணத்தைச் செய்யும் வேண்டும் எனத் திட்டமிட்டு அவசர அவசரமாகத் திருமணத்தை இந்திய மக்கள் செய்துள்ளனர்.

இதன் எதிரொலியாக இந்தியாவில் தங்கம் இறக்குமதி சுமார் 6 வருட உயர்வை எட்டியுள்ளது.

 25 லட்சம் திருமணங்கள்

25 லட்சம் திருமணங்கள்

சமுக வலைத்தள பதிவுகள் அடிப்படையில் ஆய்வு செய்த போது நவம்பர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாத முடிவதற்குள்ள இந்தியா முழுவதும் 25 லட்சத்திற்கும் அதிகமான திருமணங்கள் நடை பெறுகிறது, இது தோராயக் கணிப்பாக இருந்தாலும் இதன் எண்ணிக்கை கட்டாயம் 25 லட்சத்தை விடவும் அதிகமாகவே இருக்க வாய்ப்பு உள்ளது.

 கொரோனா தொற்று

கொரோனா தொற்று

2 வருடமாகக் கொரோனா தொற்றுக் காரணமாக மக்கள் தங்கள் மற்றும் தங்கள் பிள்ளைகளின் திருமணத்தை ஒத்துவைத்து வந்த நிலையில், மத்திய மாநில அரசுகள் சமீபத்தில் அறிவித்த தளர்வுகள் தொடர்ந்து அதிகப்படியான திருமணங்கள் இந்தியா முழுவதும் நடந்து வருகிறது. குறிப்பாகப் பெரிய திருமணங்கள் அதிகளவில் நடந்து வருகிறது.

தங்கம்
 

தங்கம்

திருமணம் என்றாலே இந்தியாவில் தங்கம் அதிகளவில் வர்த்தகம் செய்யப்படுவது வழக்கம், அந்த வகையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடக்கும் திருமணங்களின் எதிரொலியாக இந்தியாவில் தங்கம் இறக்குமதி சுமார் 6 வருட உயர்வை எட்டியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் கொரோனா காலத்தில் தங்கத்தை விற்பனை செய்த நடுத்தர மக்கள், தங்கம் விலையில் உருவான சரிவைப் பயன்படுத்திக்கொண்டு தங்க நகைகளை வாங்கத் துவங்கினர்.

 900 டன் தங்கம்

900 டன் தங்கம்

இதன் எதிரொலியாக நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 900 டன் தங்கம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது, இது கடந்த ஆண்டை விடவும் 350 டன் அதிகம் என்பது மட்டும் அல்லாமல் 2021 தங்க இறக்குமதி அளவு சுமார் 6 வருட உச்சத்தைத் தொட்டு உள்ளதாகவும் மெட்டல் போகஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது.

 திருமணம், விழா கால விற்பனை

திருமணம், விழா கால விற்பனை

தங்கம் விலையில் ஏற்பட்ட சரிவு மற்றும் திருமணம், விழா கால விற்பனை மூலம் உருவான டிமாண்ட் ஆகியவற்றின் மூலம் தங்கம் மற்றும் தங்க நகை விற்பனை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. உலகத் தங்க கவுன்சில் ஏற்கனவே இந்த வருடம் தங்கம் இறக்குமதி கடந்த 10 வருட உச்சத்தை அடையும் எனக் கணித்திருந்தது.

 இந்தியர்களும், தங்கமும்

இந்தியர்களும், தங்கமும்

கிரிப்டோகரன்சி, NFT, பங்குச்சந்தை, மியூச்சவல் பண்ட், தங்க பத்திரம், அரசு பத்திரம் என எவ்வளவு வந்தாலும் இந்தியாவையும், இந்தியர்களையும் தங்கத்தில் இருந்து பிரிக்க முடியாது என்பதை மீண்டும் நிரூபனம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் நடுத்தர மக்களிடம் கொரோனாவுக்குப் பின்பு வருமானம் அதிகரிக்கத் துவங்கியதும் தங்க விற்பனை அதிகரிக்க முக்கியக் காரணமாகவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

since November 2.5 million weddings happen after lifting curbs made gold imports 6 year high

since November 2.5 million weddings happen after lifting curbs made gold imports 6 year high 25
Story first published: Thursday, December 16, 2021, 15:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X