நாள்தோறும் புதிய உச்சம் தொடும் தங்கம்! மக்களை நகை வாங்க வைக்க விற்பனையாளர்கள் புதிய திட்டம்!!

தங்கம் விலை உயர்வு இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே பெரிய அளவில் எதிரொலித்திருக்கிறது. கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை 50 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்திருக்கிறது. இது சாமானிய மக்களுக்கு மட்டுமல்ல நகை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கும் பெரிய சிக்கலை ஏற்படுத்தி தந்திருக்கிறது.

4000 டாலர்களை கடந்தது: தங்கம் தொடர்ந்து மூன்றாவதாக இரண்டு இலக்க வளர்ச்சியை பெற்று இருக்கிறது. குறிப்பாக இந்த ஆண்டு தங்கத்தின் விலை பல வரலாறு காணாத உச்சங்களை எட்டிவிட்டது. உலக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4000 டாலர்களை கடந்து விட்டது. அடுத்ததாக தங்கம் விலை குறைவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படுவதாக தெரியவில்லை.

நாள்தோறும் புதிய உச்சம் தொடும் தங்கம்! மக்களை நகை வாங்க வைக்க விற்பனையாளர்கள் புதிய திட்டம்!!

வங்கிகளே காரணம்: பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் எடுத்த வட்டி குறைப்பு நடவடிக்கைகள், டாலரின் மதிப்பு குறைவது, சர்வதேச அளவிலான பொருளாதார நிலையற்ற தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களும் தொடர்ந்து தங்கத்தின் விலையை உயர்த்த தான் போகின்றன. பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் அதிக அளவில் முன்பை விட மிக தீவிரமாக தங்கத்தை வாங்கி குவித்து வைக்கின்றன. இதனால் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கிறது .

மேலும் விலை உயருமா?: ஒருபுறம் முதலீட்டாளர்கள் , முதலீட்டு நிறுவனங்கள் தங்கத்தை நோக்கி படையெடுக்கிறார்கள் மறுபுறம் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் கையில் இருக்க காசை எல்லாம் போட்டு தங்கத்தை வாங்கி வைக்கின்றன. இதன் காரணமாக உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த ஒரு பொருளாக தங்கம் தொடர்ந்து தன்னை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறது. உலகம் எங்கும் இருக்கக்கூடிய 95% மத்திய வங்கிகள் அடுத்த மூன்று ஆண்டுகள் வரை தங்களுடைய தங்க கையிருப்பை அதிகப்படுத்த இருப்பதாக உலக தங்க கவுன்சில் வெளியிடும் தகவல் கூறுகிறது.

நகை விற்பனை சரிவு: தங்கம் விலை உயர்வு நகை விற்பனை நிறுவனங்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி தந்திருக்கிறது. அதாவது கடைகளில் சென்று நகை வாங்குபவர்களை இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒன்று வீட்டில் நடைபெறும் விசேஷங்கள் உள்ளிட்டவற்றுக்கு கட்டாயமாக நகை வாங்கக்கூடிய சூழலில் இருப்பவர்கள் . மிடில் கிளாஸ் மக்கள் குறைந்த வருமானம் கொண்ட மக்களை இந்த பிரிவில் கூறலாம். மற்றொரு பிரிவினர் நகை விலை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் வழக்கம் போல அவர்கள் வாங்குவதை வாங்கிக் கொண்டுதான் இருப்பார்கள் .இவர்களை பெரும் பணக்காரர்களாக நாம் கூறலாம் .

நாள்தோறும் புதிய உச்சம் தொடும் தங்கம்! மக்களை நகை வாங்க வைக்க விற்பனையாளர்கள் புதிய திட்டம்!!

மக்கள் வருகை குறைகிறது: நகை விற்பனை நிறுவனங்களை பொறுத்தவரை இந்த பெரும் பணக்கார வாடிக்கையாளர்களின் வருகை என்பது அவர்களுக்கு குறையவில்லை . தங்கம் விலை எவ்வளவு தான் உச்சத்தை எட்டினாலும் அவர்கள் வழக்கம் போல வந்து தங்களுக்கு பிடித்த மாடல்களிலும் தங்களுக்கு பிடித்த நகைகளையும் வாங்கிக் கொண்டுதான் செல்கிறார்கள் . ஆனால் மிடில் கிளாஸ் மக்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்கள் கடைகளுக்கு வருகை தருவது உலக அளவிலேயே குறைந்து இருக்கிறதாம்.

ஆடம்பர நகை விற்பனை நிறுவனங்கள்: சிஎன்பிசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின் படி பார்க்கும்போது ஆடம்பர தங்க நகைகளை விற்பனை செய்யும் நிறுவனங்களை பொறுத்தவரை தங்கம் விலை உயர்வு என்பது அவர்கள் விற்பனையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் சாமானிய மக்கள் அதிக அளவில் வந்து நகைகளை வாங்கிச் செல்லக்கூடிய கடைகளில் எல்லாம் நகை விற்பனை என்பது குறைந்திருக்கிறது. இந்தியாவில் கூட நவராத்திரி பண்டிகையின் போது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு நகை விற்பனை அளவு சரிந்து இருப்பதாகவே நகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

ரூ.1 லட்சம் இருந்தால் தான் 1 பவுன்: தற்போது நாம் ஒரு பவுன் நகை வாங்க வேண்டும் என்றால் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் கொடுக்க வேண்டும். கண்டிப்பாக இது சாமானிய மக்களால் முடியாத ஒரு விஷயம். என்னதான் ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் பல்வேறு பொருட்களின் விலை குறைந்திருக்கிறது , வருமான வரி விகிதத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் உள்ளிட்டவை இருந்தாலும் தங்கம் வாங்கும் அளவிற்கு அதன் மூலம் நம்மால் பணத்தை சேமித்து விட முடியுமா என்றால் நிச்சயம் முடியாது. எனவே நகைக்கடை நிறுவனங்கள் நகைகளை விற்பனை செய்வதற்காக பல்வேறு புதுப்புது யுத்திகளை கையில் எடுக்க தொடங்கி இருக்கின்றன.

புதிய திட்டம்: குறிப்பாக விலை குறைவாக இருந்தால் தான் மக்கள் அதிகம் கடைக்கு வருவார்கள் எனவே 22 கேரட்டுக்கு மாற்றாக 18 கேரட் 14 கேரட் ,9 கேரட் நகைகள் விற்பனைக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். குறைந்த கேரட் அளவுக்கு கொண்ட தங்க நகைகளை அதிகம் விளம்பரம் செய்ய தொடங்கி இருக்கிறார்கள். தங்கம் வாங்க வேண்டும் ஆனால் குறைந்த விலைக்கு வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்கள் நிச்சயம் இதுபோன்ற நகைகளை நோக்கி வருவார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருக்கிறது. அது மட்டும் இன்றி தற்போதுள்ள இளம் தலைமுறையினர் லைட் வெயிட் நகைகளுக்கு விருப்பம் காட்டுவதால் அந்த பிரிவினர் ஓரளவு தங்களுடைய விற்பனையை தக்க வைப்பார்கள் என எதிர்பார்க்கின்றனர்.தங்க முலாம் பூசப்பட்ட உயர்தர டிசைன் கொண்ட நகைகளுக்கு கூட ஓரளவு டிமாண்ட் அதிகமாகி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+