2024 ஆம் நிதியாண்டின் கடைசி வர்த்தக நாள் இன்று முடிந்த நிலையில், அதிகப்படியான லாபத்தை அள்ளிக்கொடுத்த பிரிவாக ஸ்மால்கேப் பங்குகள் உள்ளது, இந்த வருடம் ஸ்மால்கேப் பங்குகள் அதிகப்படியான விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் அதிகப்படியான லாபத்தைக் கொடுத்துள்ளது.
நிதி ஆண்டு 2024 இல், இந்த சிறு முதலீட்டாளர்களின் மிகவும் பிடித்தமான பங்குகளாக இருந்த ஸ்மால்கேப் பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ரூ.26 லட்சம் கோடி என்ற மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்துள்ளது.

1,000 சிறுதொழில் பங்குகளைக் கொண்ட மும்பை பங்குச்சந்தையின் (BSE) சிறுகேப் குறியீட்டின் (Smallcap index) மொத்த சந்தை மதிப்பு இந்த ஆண்டில் மட்டும் சுமார் ரூ.26 லட்சம் கோடி அதிகரித்து தற்போது ரூ.66 லட்சம் கோடியாக உள்ளது.
இதன் வாயிலாக, சிறுதொழில் குறியீட்டில் உள்ள 252 பங்குகள், அதாவது ஒவ்வொரு நான்காவது பங்கும் பல மடங்கு லாபம் (Multibagger Returns) கொடுத்துள்ளன. இந்த பண மழை துறை சார்ந்த எல்லைகளைக் கடந்துள்ளது, 1000 பங்குகள் வெறும் 124 பங்குகள் மட்டுமே முதலீட்டாளர்களுக்கு இழப்பைக் கொடுத்துள்ளது.
ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகளின் அதிகரித்த மதிப்பீடுகள் குறித்து பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி எச்சரித்ததைத் தொடர்ந்து, கடந்த மாதத்தில் மும்பை பங்குச்சந்தையின் ஸ்மால்கேப் குறியீட்டு 6.5% சரிந்தது.
இந்த சரிவு, 2018 ஆம் ஆண்டில் ஏற்பட்டதைப் போன்ற பெரிய அளவிலான விற்பனை (Sell-Off) சந்தையில் ஏற்படலாம் என்று பல சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ஆனாலும் கடந்த ஒரு வருடத்தில் ஸ்மால்குறியீட்டு சுமார் 61% வரை உயர்ந்துள்ளது.
ஸ்மால்கேப் பிரிவில் ஜெய் பாலாஜி இண்டஸ்ட்ரீஸ் (1,878%), வாரி ரினிவபிள் டெக்னாலஜிஸ் (810%), ஃபோர்ஸ் மோட்டார்ஸ் (522%), ஐனாக்ஸ் விண்ட் (441%), சுஸ்லான் எனர்ஜி (369%) மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் (281%) ஆகியவை லாபத்தை அள்ளிக்கொடுத்தது. மேலும் Ircon International, Jupiter Wagons, RVNL, Cochin Shipyard, Titagarh Railsystems, PTC Industries மற்றும் Mazagon Dock Shipbuilders போன்ற பாதுகாப்பு மற்றும் ரயில் பங்குகளும் மல்டிபேக்கர் வருமானத்தை அளித்தன.
More From GoodReturns

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications