உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் ஒரு குறிப்பிட்ட மதத்தை கடைப்பிடிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஹலால் சான்றிதழை வழங்குவதன் மூலம் விற்பனையை அதிகரிக்க மத உணர்வுகளை சாதகமாக பயன்படுத்தியதாக பல நிறுவனங்களுக்கு எதிராக அண்மையில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஹலால் சான்றிதழ் அளிப்பதில் முறைகேடு நடப்பதாக கூறி ஹலால் சான்றிதழுக்கு உத்தர பிரதேச அரசு தடை விதித்தது. உணவுப் பொருட்களின் ஹலால் சான்றிதழ் என்பது உணவு பொருட்களின் தரம் தொடர்பான குழப்பத்தை உருவாக்கும் ஒரு இணையான அமைப்பாகும்.

ஹலால் தர சான்றுடன் கூடிய உணவு பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவை உடனடியாக தடை செய்யப்படுகிறது. அதேசமயம், ஏற்றுமதிக்காக தயார் செய்யப்படும் பொருட்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறீ செயல்படும் தனிநபர் மற்றும் நிறுவனத்துக்கு எதிராக சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அம்மாநில அரசு எச்சரித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் ஹலால் சான்றிதழ் பெற்ற உணவுகளை விற்பனை செய்ய யோகி அரசு தடை விதித்து இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஹலால், ஹலால் சான்றிதழ் குறித்து சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வோம்.
1974ல் முதன் முதலில் அறுக்கப்பட்ட இறைச்சிக்காக ஹலால் சான்றிதழ் வழங்குவது அறிமுகப்படுத்தப்பட்டது. இஸ்லாமிய முறையில் பெறப்படும் இறைச்சி ஹலால் இறைச்சி என கூறப்படுகிறது. விலங்குகள் தொண்டை, உணவுக்குழாய் மற்றும் கழுத்து நரம்புகள் வழியாக கொல்லப்பட வேண்டும்.
ஹலால் சான்றிதழ், உணவு சுத்தமானதாகவும், இஸ்லாமிய சட்டத்தின்படியும் சமைக்கப்பட்டதையும் உறுதி செய்கிறது. ஹலால் உணவு என்பது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பால் (எஃப்.ஏ.ஓ.) இஸ்லாமிய சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட உணவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, அனைத்து சட்டப்பூர்வ நில விலங்குகளும் புதிய இறைச்சிக்கான பரிந்துரைக்கப்பட்ட சுகாதார பயிற்சியின் கோடெக்ஸில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளுக்கு இணங்க வெட்டி கொலை செய்ய வேண்டும்.
இந்தியாவில் உள்ள பல தனியார் நிறுவனங்கள் ஹலால் சான்றிதழ் வழங்குகின்றன, முஸ்லிம்கள் உட்கொள்ளும் உணவு அல்லது பொருளை குறிப்பிடுகின்றன. இந்த ஹலால் சான்றளிக்கும் நிறுவனங்களில் சிலவற்றை இந்திய அரசாங்கம் அங்கீகரித்தாலும், அவற்றில் சிலவற்றுக்கு இன்னும் அங்கீகாரம் இல்லை.
சமீபத்தில் வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட ஹலால் சான்றிதழ் பெற்ற டீ ப்ரீமிக்ஸ் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. ஒரு பயணி ஹலால் சான்றிதழுடன் கூடிய தேநீர் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள விரும்பினார். இதனையடுத்து அந்த தேயிலை ப்ரீமிக்ஸ் பிற நாடுகளுக்கு ஏற்றுமதிக்கான அங்கீகாரம்.
இந்த சான்றிதழ் இஸ்லாத்தை கடைபிடிக்கும் நாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டது என்று கார்ப்பரேஷன் விளக்கம் கொடுத்தது. எனவே ஹலால் என்பது இறைச்சியுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. சில அழகுசாதன பொருட்களுக்கும் ஹலால் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது இது மது மற்றும் பன்றி கொழுப்பு போன்ற ஹராம் பொருட்கள் இல்லாதது என்பதை குறிப்பிடுகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications