தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்னிந்திய சினிமாக்களில் இன்று பல பான் இந்தியா படமாக மாறி வருகிறது. எந்திரன், கே.ஜி.எஃப்., காந்தாரா, ஆர்.ஆர்.ஆர். போன்ற பல படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். தென்னிந்திய படங்களின் மார்க்கெட் விரிவடைந்துள்ளதால், நடிகர்களின் சம்பளமும் அதிகரித்துள்ளது. ஜெய்லர் படத்துக்காக ரஜினிகாந்த் ரூ.110 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.
விஜய் லியோ படத்துக்காக ரூ.130 கோடி ஊதியம் பெற்றுள்ளார். இந்தியன் 2 படத்துக்காக கமல் ரூ.150 கோடி சம்பளம் கேட்டதாக தகவல். இந்த அளவுக்கு இல்லையென்றாலும் மற்ற மொழிகளை சேர்ந்த பிரபல நடிகர்களும் கணிசமான தொகையை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.

தென்னிந்திய சினிமாவில் டாப் பணக்கார நடிகராக யார் இருப்பார் என்று நீங்க நினைக்கிறீங்க?. ஆனால் ஒன்று நீங்க நினைக்கிற மாதிரி ரஜினியோ, விஜயோ, ராம் சரணோ அல்லது மகேஷ் பாபுவோ நிச்சயமாக இல்லை. ஒரு படத்துக்கு ரூ.9 முதல் 20 கோடி வரை வாங்கும் ஒரு நடிகர்தான் தென்னிந்தியா சினிமாவின் மிகப்பெரிய பணக்கார நடிகர். இவரது இரண்டாவது மனைவி ஒரு காலத்தில் பிரபலமான நடிகை தான். அந்த நடிகரின் வாரிசுகள் இரண்டு பேரும் இப்போது நடிகர்களாக உள்ளனர். இப்ப கண்டு பிடிச்சு இருப்பீங்க, ஆமாங்க நம்ம அக்கினேனி நாகார்ஜூனாவே தான். ஜி.கியு. அறிக்கையின்படி, இவருடைய தற்போதைய சொத்து மதிப்பு ரூ.3,010 கோடி. நடிகர் என்ற முகத்தை தவிர, சினிமா தாயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் தொழில்முனைவோர் என பல முகங்கள் அவருக்கு.
தற்போது 64 வயதாகும் நாகார்ஜூனா தனது 30 வருட திரை பயணத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் பேனரில் திரைப்படங்களை தயாரித்து வருமானம் பார்க்கிறார். ரியல் எஸ்டேட் வர்த்தகம், இந்தியன் சூப்பர் லீக்கில் முதலீடு செய்துள்ளார். கேரள பிளாஸ்டர்ஸ் எஃப்.சி. அணியின் இணை உரிமையாளராக உள்ளார். ஹைதராபாத்தில் ஒரு பிரமாண்டமான மையம் உள்ளது. இதுதவிர விளம்பரங்கள் வாயிலாகவும் அவருக்கு பணம் கொட்டுகிறது. சொகுசு வாழ்க்கை வாழும் நாகார்ஜூனாவுக்கு ஹைதராபாத்தில் ரூ.45 கோடி மதிப்பிலான பிரமிக்க வைக்கும் பங்களா, விலையுயர்ந்த கார்கள், பல கோடி மதிப்பிலான தனியார் ஜெட் விமானம் ஆகியவையும் உள்ளன.
தென்னிந்தியாவில் நாகார்ஜூனாவுக்கு அடுத்த பெரிய பணக்காரர்கள் யார் என்றால் பார்த்தால் நடிகர் டகுபதி வெங்கடேஷ் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.2,200 கோடி. மூன்றாவது இடத்தில் ரூ.1,650 கோடி சொத்துக்களுடன் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்ஜீவி உள்ளார். ராம் சரண் ரூ.1,370 கோடி சொத்துக்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் நம்ம ஊரு சூப்பர் ஸ்டார் கொஞ்சம் பின்னால்தான் இருக்கார். ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு ரூ.430 கோடி தான் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications