இந்திய ரிசர்வ் வங்கி இன்று 2023-24 சீரியஸ் 1 சவரின் கோல்டு பத்திரங்களை (Sovereign Gold Bond) மக்கள் மத்தியிலான வர்த்தகத்திற்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த சுற்று பத்திரம் ஜூன் 19 ஆம் தேதி திறக்கப்பட்டு ஜூன் 23 ஆம் தேதி நிறைவடையும் என்பதல் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை திட்டமிட்டுகொள்ளுங்கள்.
சவரின் கோல்டு பாண்ட்ஸ் என்பது பொதுவாக ஒரு கிராம் தங்கத்தின் விலையை அடிப்படையாக கொண்டு விலை நிர்ணயம் செய்து வட்டி விகிதம் முதல் அனைத்தையும் கணக்கிடும். இதன் மூலம் ரிசர்வ் வங்கி இன்று வெளியிடும் 2023-24 சீரியஸ் 1 ஒரு Sovereign Gold Bond-ன் பத்திரம் ரூ.5,926க்கு வழங்கப்பட உள்ளது.

இந்த Sovereign Gold Bond-ஐ டிஜிட்டல் நிதிபரிமாற்றத்தின் வாயிலாக விண்ணப்பிக்கும் மற்றும் பணம் செலுத்தும் முதலீட்டாளர்களுக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடியை ஆர்பிஐ வழங்குகிறது. இதன் மூலம் 5,876 ரூபாய்க்கு தங்க பத்திரத்தை பெற முடியும்.
Sovereign Gold Bondல் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு அரையாண்டு அடிப்படையில் 2.5 சதவீத வட்டியைப் பெறுவார்கள். மேலும் இப்பத்திரத்தின் முதிர்வு காலம் 8 வருடமாகும், மேலும் இது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளதால் முதலீட்டாளர்கள் இதை பங்குச்சந்தையில் பரிமாற்றம் செய்துக்கொள்ள முடியும்.
8 வருட முதிர்வு காலத்திற்கு முழுமையாக காத்திருக்க முடியாத முதலீட்டாளர்கள் 5 வருடத்திற்கு பின் முதலீட்டை திரும்ப பெறும் வாய்ப்பு உள்ளது. Sovereign Gold Bond தங்கத்தின் விலையில் விற்பனை செய்யப்படும் காரணத்தால் தங்கத்தை வாங்குவதற்கு இணையாக பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த பத்திர முதலீட்டுக்கு 6 மாதத்திற்கு 2.5 சதவீதம் வரையிலான வட்டி வருமானம் அளிக்கப்படும் காரணத்தால் நீண்ட கால அடிப்படையில் தங்க முதலீட்டில் இருக்கும் ஏற்ற இறங்கங்களை இது சரி செய்யும். மேலும் தங்கத்தை உலோகமாக வாங்கி அதை பாதுகாப்பதை விடவும் தங்க முதலீட்டு பத்திரம் மிகவும் பாதுகாப்பானது.
அனைத்திற்கும் மேலாக தங்க பத்திர முதலீட்டில் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு வரி சலுகை உண்டு.


Click it and Unblock the Notifications