ரூ.1 லட்சத்தை ரூ.4.5 லட்சமாக மாற்றிய தங்க பத்திரம்: ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தங்கப் பத்திரம் (SGB) 2017-18 சீரிஸ்-XI இன் முதிர்வு விலையை அறிவித்துள்ளது. டிசம்பர் 11, 2017 அன்று வெளியிடப்பட்ட இந்த பத்திரத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஒரு யூனிட்டிற்கு ரூ12,801 ஆக திரும்ப கிடைக்கும் என ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த இறுதி விலை நிர்ணயம், டிசம்பர் 11, 2025க்கு முந்தைய மூன்று வணிக நாட்களின் (அதாவது டிசம்பர் 8, 2025, டிசம்பர் 9, 2025, மற்றும் டிசம்பர் 10, 2025) 999 தூய்மையான தங்கத்தின் சராசரி விலையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. SGB 2017-18 சீரிஸ்-XI பத்திரம், டிசம்பர் 15, 2017 அன்று நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஒரு கிராமுக்கு ரூ 2,952 ஆகவும், ஆன்லைன் சந்தாதாரர்களுக்கு ரூ2,902 ஆகவும் வெளியிடப்பட்டது. இது தற்போது 12,801 ரூபாயாக அவர்களுக்கு திரும்ப கிடைத்துள்ளது.

ரூ.1 லட்சத்தை ரூ.4.5 லட்சமாக மாற்றிய தங்க பத்திரம்: ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தங்க பத்திரத்தில் முதலீடு செய்தவர்கள் கிட்டத்தட்ட 341% என்ற குறிப்பிடத்தக்க லாபத்தை பெற்றுள்ளனர். தற்போதுள்ள முதிர்வு விலையான ரூ12,801 இல், ஆன்லைன் வெளியீட்டு விலையான ரூ2,902-ஐக் கழித்தால், வட்டியைக் கணக்கில் கொள்ளாமல் ஒரு யூனிட்டிற்கு ரூ 9,899 லாபம் கிடைத்துள்ளது. சதவீத அடிப்படையில் பார்க்கும்போது, இது 341.1% ஆகும். இது தங்க பத்திரத்தில் முதலீடு செய்தவர்களுக்கு மிகப்பெரிய லாபம் என்பதை உறுதி செய்கிறது.

எனவே இந்த பத்திரத்தில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தவர்கள் அதனை தற்போது 4 .5 லட்சம் ரூபாயாக திரும்ப பெற்றுள்ளனர். இதேபோல், ரிசர்வ் வங்கி தங்கப் பத்திரம் 2019-20 சீரிஸ் I இன் முன்கூட்டியே மீட்பு விலையையும் அறிவித்துள்ளது. ஜூன் 11, 2019 அன்று வெளியிடப்பட்ட பத்திரத்தின் முதலீட்டாளர்கள், எட்டு வருட நிலையான காலவரம்பைக் கொண்டிருந்தாலும், ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, வெளியீட்டு தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் முடிந்த பிறகு முன்கூட்டியே வெளியேறும் நெகிழ்வுத்தன்மையைப் பெறுவார்கள்.

அதன்படி, இந்தத் பத்திரத்துக்கான மீட்புத் தேதி டிசம்பர் 11, 2025 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் தங்கப் பத்திரத்தின் வெளியீட்டு விலை ஆன்லைன் சந்தாதாரர்களுக்கு ஒரு கிராமுக்கு ரூ 3,146 ஆகவும், மற்றவர்களுக்கு ரூ 3,196 ஆகவும் இருந்தது. இதற்கும் இப்போது ஒரு யூனிட்டிற்கு ரூ 12,801 என கிடைக்கும்.

மத்திய அரசின் சார்பாக ரிசர்வ் வங்கியால் நிர்வகிக்கப்படும் தங்கப் பத்திரம் (SGB) திட்டம், உண்மையான தங்கத்திற்குப் பதிலாக பாதுகாப்பான, காகித வடிவ அல்லது டிமேட் வழிமுறையை வழங்கிறது. இது தங்கத்தை சேமிக்கும் கவலையையும், அதன் தூய்மை குறித்த ஐயப்பாடுகளையும் நீக்கி, பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுக்கு 2.5% வட்டியையும் வழங்குகிறது.

SGB பத்திரம் வெளியிட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, வட்டி செலுத்தப்படும் தேதிகளில் முன்கூட்டியே மீட்கப்படலாம். இந்த பத்திரம் வாங்கவும், விற்கவும் அல்லது மாற்றவும் கூடியது. மேலும், கடன் பெறுவதற்கான பிணையமாகவும் பயன்படுத்தலாம். இது முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட ஒரு முதலீட்டு வாய்ப்பை வழங்குகிறது.

தங்க பத்திரம் முதிர்வு அடையும் போது அந்த தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, பத்திரம் முதிர்ச்சி அடையப்போவது குறித்து முதலீட்டாளருக்குத் தெரிவிக்கப்படும். முதிர்ச்சி தேதியில், ரிசர்வ் வங்கி அறிவித்த தொகை, பதிவுசெய்யப்பட்ட விவரங்களின்படி,முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் தானாகவே வரவு வைக்கப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+