டெல்லி: தங்க பத்திரங்கள் வட்டியுடன் சேர்த்து கண்டிப்பாக 12 சதவிகிதம் லாபத்தை தரும் என வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்துள்ளார். அண்மையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 6 சதவிகிதமாக குறைத்தார். இதனால் இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளது. எனவே தங்க பத்திரங்களுக்கான டிமாண்ட் குறைந்து மக்கள் மீண்டும் தங்க நகைகள் பக்கம் திரும்பி விடுவார்கள் என்ற வாதம் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் பட்ஜெட்டுக்கு பிந்தைய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்கோத்ரா தற்போது தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டு இருந்தாலும் தங்கத்தில் சிறந்த முதலீடு என்றால் அது தங்க பத்திரமாகத் தான் இருக்கும் எனக் கூறியுள்ளார். ஏனெனில் தங்க பத்திரத்தில் முதலீடு செய்தவர்கள் கண்டிப்பாக 12 சதவிகிதம் லாபத்துடன் தான் அதனை திரும்ப எடுப்பார்கள் என தெரிவித்துள்ளார். 12 சதவீத லாபம் என்பது குறைவானது கிடையாது எனக் கூறியுள்ளார்.

தற்போது வரை தங்க பத்திரங்களில் முதலீடு செய்தவர்கள் சராசரியாக ஆண்டுக்கு 9 முதல் 11 சதவீதம் வரை லாபம் பெறுகிறார்கள். அது மட்டும் இன்றி அரசும் அவர்களுக்கு ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டியை வழங்குகிறது என சுட்டிகாட்டியுள்ளார்.
2022 ஆம் ஆண்டில் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை மோசமான நிலைக்கு சென்றதை அடுத்து இறக்குமதியை கட்டுக்குள் வைக்கும் பொருட்டு தான் அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது. தற்போது நடப்பு கணக்கு பற்றாக்குறை சீராக இருப்பதால் அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்து இருக்கிறது என கூறினார்.
2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்க பத்திர திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு அடுத்த வாரம் அவர்களின் பத்திரங்கள் முதிர்வு பெறுகின்றன. அந்த சமயத்தில் ஒரு கிராமின் விலை 3119 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது அதைவிட இரண்டு மடங்கு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. எனவே இதில் முதலீடு செய்தவர்கள் கணிசமான லாபத்தை தான் பெற்றுள்ளனர் என கூறியுள்ளார்.
இருந்தாலும் நடப்பாண்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை தங்க பத்திரங்கள் வெளியீடு குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தான் அரசு தங்க பத்திர திட்டத்தை கைவிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக மணி கண்ட்ரோல் தளம் செய்தி வெளியிட்டு இருந்தது.
Story Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?



Click it and Unblock the Notifications