தங்க இறக்குமதியை குறைக்கும் நோக்கில் 2015ல் மத்திய அரசு இறையாண்மை தங்க பத்திரங்களை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்படி, மக்கள் தங்கத்தை உலோகமாக வாங்காமல் காகிதம் அல்லது டிஜிட்டல் வடிவில் தங்க பத்திரமாக வாங்குவர்.
மேலும் ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி கிடைக்கும். 8 ஆண்டுகள் வரை தங்க பத்திரங்கள் விற்காமல் இருந்தால் மூலதன ஆதாய வரி விலக்கு கிடைக்கும். தங்க பத்திரங்கள் பாதுகாப்பான முதலீடாக இருப்பதோடு, வட்டி வடிவில் வருவாயும கிடைப்பதால் மக்கள் தற்போது இறையாண்மை தங்க பத்திரங்களில் முதலீடு செய்ய தொடங்கி விட்டனர்.

நடப்பு 2023-24ம் நிதியாண்டுக்கான 3வது மற்றும் 4வது சீரிஸ் இறையாண்மை தங்க பத்திரங்கள் வெளியிடும் தேதி குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. 3வது சீரிஸ் தங்க பத்திரங்களுக்கான சந்தா டிசம்பர் 18ம் தேதி தொடங்கி 22ம் தேதி நிறைவடையும். தங்க பத்திரங்கள் டிசம்பர் 28ம் தேதி வழங்கப்படும். 4வது சீரிஸ் தங்க பத்திரங்களுக்கான சந்தா 2024 பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி 16ம் தேதி முடிவடையும். அந்த மாதம் 21ம் தேதி தங்க பத்திரங்கள் வெளியிடப்படும்.
தங்க பத்திரங்களை தனிநபர்கள்,குடும்பங்கள், அறக்கட்டளைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களும் வாங்கலாம். குறைந்தபட்ச முதலீடு 1 கிராம். அதிகபட்ச வரம்பு மாறுபடும். தனிநபர்கள் மற்றும் இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் ஆண்டுக்கு அதிகபட்சம் 4 கிலோ மதிப்புக்கு தங்க பத்திரங்களில் முதலீடு செய்யலாம். அறக்கட்டளை மற்றும் அதுபோன்ற நிறுவனங்கள் ஆண்டுக்கு 20 கிலோ மதிப்புக்கு முதலீடு செய்யலாம்.
நன்மைகள்: ஆண்டுக்கு 4.5 சதவீதம் நிலையான வட்டி கிடைக்கும்.
மத்திய அரசின் உத்தரவாதத்தால் பாதுகாப்பான முதலீடாக மாறுகிறது
பெறப்படும் வட்டிக்கு வருமான வரியில் இருந்து விலக்கு
தங்கம் விலை உயரும் என்பதால் மூலதனம் உயரும்
5 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப பெறலாம் அல்லது பங்குச் சந்தையில் விற்பனை செய்யலாம்.
அருகில் உள்ள வங்கி, அஞ்சல் நிலையம் அல்லது பங்குச் சந்தையில் தங்க பத்திரங்களை வாங்கலாம். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி கிடைக்கும். எனவே முதலீட்டாளர்கள் ஆன்லைனில் தங்க பத்திரங்கள் சந்தாவுக்கு விண்ணப்பியுங்கள்.


Click it and Unblock the Notifications