இந்தியாவில் ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பல்வேறு பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வந்த அதிகபட்ச ஜிஎஸ்டி வரி என்பது தற்போது பெருமளவில் குறைந்திருக்கிறது.
ஜிஎஸ்டி வரி: தற்போதைக்கு 5, 18, 40 என மூன்று விதமான ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மட்டுமே இந்தியாவில் நடைமுறையில் இருக்கின்றன . ஜிஎஸ்டி வரி விகித சீர்திருத்தம் என்பது பண்டிகை காலத்தில் வந்திருப்பதால் வீட்டு உபயோக பொருட்களை வாங்குபவர்கள் , துணிமணி எடுப்பவர்களுக்கெல்லாம் இந்த ஜிஎஸ்டி வரி திருத்தம் ஒரு பெரிய அளவிலான சேமிப்பை ஏற்படுத்தி தரும் என நம்பப்படுகிறது .

துணிகளுக்கு ஜிஎஸ்டி: தீபாவளி பண்டிகை என்றாலே அனைத்து குடும்பமும் முதலில் வாங்குவது புதிய ஆடைகளை தான். இந்த ஜிஎஸ்டி வரி திருத்தம் புதிய ஆடைகளை வாங்குபவர்களுக்கும் சேமிப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறது . 2,500 ரூபாய் வரையிலான விலைகொண்ட துணிகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் இதற்கு முன்பு 12 சதவீதமாக இருந்தது அது தற்போது 5 சதவீதம் என குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் நாம் 2500 ரூபாய் விலைக்குள் வாங்க கூடிய துணிகளுக்கு இதுநாள் வரை செலுத்தப்பட்டு வந்த வரி என்பது குறைந்திருக்கிறது . இது நமக்கு 7% தொகை சேமிப்பை ஏற்படுத்தி தரும்.
சமூகவலைதளங்களில் தகவல்: எனவே துணிமணி வாங்குபவர்கள் 2500 ரூபாய்க்குள் துணிகளை வாங்கிக் கொண்டால் ஜிஎஸ்டி வரி சேமிப்பின் பலனை அனுபவிக்க முடியும். இதற்கிடையே ஜிஎஸ்டி வரி திருத்தம் தொடர்பான ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது . தீபாவளிக்கு துணி எடுக்க சென்றீர்கள் என்றால் ஒரு குடும்பத்திற்கு 6 ஆயிரம் ரூபாய்க்கு துணி வாங்கினீர்கள் என்றால் துணியை பிரித்து கொடுத்து மூன்று பில் போடுங்கள் 2500 ரூபாய் , 2500 ரூபாய் என தனித்தனியாக பிரித்து பில் போட்டால் ஜிஎஸ்டி வரி சேமிக்க முடியும் என ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தனி தனியா பில் போடனுமா? :அதாவது 2500 ரூபாய்க்கு மேல் பில் போட்டால் நீங்கள் அதற்கு 18 சதவீத ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் , 2500க்குள் பில் போட்டால் 5% ஜிஎஸ்டி செலுத்தினால் போதும் என ஒரு தகவல் வாட்ஸ் அப் ,பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் வேகமாக வலம் வருகிறது. இது உண்மை தானா என்பது குறித்து குட் ரிட்டர்ன்ஸ் தமிழ் ஆய்வு செய்தது.

விற்பனையாளர்கள் விளக்கம்: இது தொடர்பாக ஓசூர் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு குட் ரிட்டர்ன்ஸ் தமிழ் பேசியது, அப்போது இது ஒரு பொய்யான செய்தி என்ற விளக்கத்தை அவர்கள் அளித்தார்கள் . அனைத்து துணி கடைகளிலுமே நாம் வாங்கக்கூடிய துணிகளுக்கு ஒவ்வொரு துணிக்குமான விலை அதற்கான ஜிஎஸ்டி என்றுதான் பில் போடுவார்களே தவிர மொத்தமாக கணக்கிட்டு மொத்த விலைக்கு ஜிஎஸ்டி போட மாட்டார்கள் என விளக்கம் தந்துள்ளனர்.
இது தான் உண்மை: உதாரணமாக நீங்கள் ஒரு சுடிதார் ,ஒரு ஷர்ட், ஒரு பேன்ட் என வாங்குகிறீர்கள் என்றால் சுடிதாரின் விலை அதற்கான ஜிஎஸ்டி , பேன்ட் விலை அதற்கான ஜிஎஸ்டி, ஷர்ட் விலை அதற்கான ஜிஎஸ்டி என்றுதான் பில் போடுவார்களே தவிர மொத்தமாக மூன்றுக்கும் விலை போட்டுவிட்டு அந்த மொத்த தொகைக்கு ஜிஎஸ்டி போட மாட்டார்கள் என விளக்கம் தந்திருக்கின்றனர்.
புடவைகளுக்கு 5% ஜிஎஸ்டி: அதே வேளையில் புடவைகளுக்கு மட்டும் 2500 ரூபாய்க்கு மேல் அதன் விலை இருந்தாலும் அதனை ஃபேப்ரிக்காக கருதி அதற்கு 5 சதவீதம் மட்டும்தான் ஜிஎஸ்டி போடப்படும் என விளக்கம் தந்திருக்கின்றனர் . மற்றபடி நாம் வாங்கக்கூடிய அனைத்து விதமான ஆடைகளுக்கும் அதன் விலை 2500 ரூபாய்க்குள் இருந்தால் 5% ஜிஎஸ்டி 2500 ரூபாய்க்கு மேல் இருந்தால் 18 சதவீதம் ஜிஎஸ்டி என்று தான் வசூலிக்கப்படும். பில்லை பிரித்து வாங்குவதால் ஜிஎஸ்டி குறைந்துவிடாது.
ஜிஎஸ்டி சேமிக்க வழி: ஒருவேளை நீங்கள் ஜிஎஸ்டி குறைப்பு பலனை அனுபவிக்க வேண்டும் என எண்ணுகிறீர்கள் என்றால் நீங்கள் வாங்கக்கூடிய அந்த துணியின் விலை 2500 ரூபாய்க்குள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் அந்த வகையில் உங்களுக்கு 5 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி வரும். எனவே சமூக வலைத்தளங்களில் இப்படி நீங்கள் துணியை வாங்கிவிட்டு மூன்று பில்லாக போடுங்கள் நான்கு பில்லாக போடுங்கள் என வர கூடிய செய்தியில் உண்மை கிடையாது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications