தங்கம் விலை தடாலடி உயர்வு.. இனி கையில புடிக்க முடியாது போலியே! அமெரிக்காவில் நடக்கும் 3 முக்கிய விஷயம்!

தங்கம் இந்திய சந்தையில் மட்டும் அல்லாமல் உலகளவில் முக்கிய முதலீடாக மாறி வருகிறது. கடந்த 5 மாதங்களுக்கு தங்கத்தை கண்டாலே தெறித்து ஓடிய முதலீட்டாளர்கள் கடைசி 3 வாரங்களாக தங்கத்திலும், வெள்ளியிலும் பணத்தை கொட்டி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவில் நடக்கும் 2 முக்கிய சம்பளம் காரணமாக தங்கம் விலை இனி தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை 4வது நாளாக உயர்வுடன் துவங்கினாலும், வெள்ளி விலை சரிவில் துவங்கியுள்ளது. சர்வதேச ஸ்பாட் சந்தையிலும் இதே நிலை தான். எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை அக்டோபர் மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஒப்பந்தத்தின் விலை 0.5 சதவீதம் உயர்ந்து 1,63,253 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை செப்டம்பர் மாத பியூச்சர்ஸ் ஒப்பந்தம் 0.44 சதவீதம் சரிந்து 2,45,524 ரூபாயாக உள்ளது.

தங்கம் விலை தடாலடி உயர்வு.. இனி கையில புடிக்க முடியாது போலியே! அமெரிக்காவில் நடக்கும் 3 முக்கிய விஷயம்!

இதேபோல் ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் 1 சதவீதம் வரையில் உயர்ந்து 4,656.44 டாலராக உயர்ந்துள்ளது. இதேபோல் வெள்ளி விலை 0.2 சதவீதம் வரையில் சரிந்து 68.41 டாலர் வரையில் சரிந்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்காவின் எக்னாமிக் D-day விஷயத்தை தாண்டி அமெரிக்க முதலீட்டு சந்தையை நேரடியாக பாதிக்க உள்ள 3 விஷயங்கள் அடுத்தடுத்து நடக்க இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கம் மீது திரும்பியுள்ளனர்.

Also Read

முதல் விஷயம் இந்த வாரம் அமெரிக்காவிந் பணவீக்கம் மற்றும் நுகர்வோர் செலவினத்தின் ஜூலை மாதம் அளவுகள் ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஜூன் மாதத்தில் PCE Price Index 0.1 சதவீதம் குறைந்து 3.7 சதவீதமாக பதிவு செய்தாலும் ஜூலை மாத தரவுகளில் 0.2 சதவீதம் அதிகரிக்கும் என கணிப்புகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பெட் நாணய கொள்கை கூட்டத்தில் பணவீக்கம் அதிகரித்தால் கட்டாயம் அடுத்த கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என நாணய கொள்கை கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டு இருந்தது. இதற்கு ஏற்றார் போல் தற்போது வெளியாகும் தரவுகளில் பணவீக்கம் அதிகரித்தால் கட்டயம் பென்சாமார்க் வட்டி விகிதம் அதிகரிக்கும்.

இரண்டாவது விஷயம் இந்த வார இறுதியில் பெடரல் ரிசர்வ் தலைவர் கெவின் வார்ஷ் முக்கிய கூட்டத்தில் பேச உள்ளார், இவருடைய பேச்சு தான் மொத்த முதலீட்டு சந்தையை புரட்டிப்போட உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா அரசு பத்திர சந்தையில் எடுத்த முடிவு தான். தற்போது கெவின் வார்ஷ் பேச்சு பணவீக்க தரவுகள் மற்றும் அமெரிக்க அரசின் பத்திர கொள்கை மாற்றத்திற்கு மத்தியில் வருவதால் தங்கம் விலைக்கு இது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

Recommended For You

மூன்றாவது விஷயம் அமெரிக்க அரசின் குருவூல செயலாளர் கடந்த வாரம் வியாழக்கிழமை முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார், அரசின் 4 பில்லியன் டாலர் பத்திர Buyback திட்டத்தை 2 மடங்கு அதிகரிக்க திட்டமிட்டு உள்ளதாக அறிவித்தார். இதன் மூலம் அமெரிக்க அரசு சந்தையில் இருக்கும் அரசு பத்திரத்தை திரும்ப பெற்று அதற்கான டாலரை கொடுக்கும், இது அமெரிக்க அரசு பத்திரத்தை வைத்திருக்கும் அனைத்து நாடுகளும், முதலீட்டாளர்களுக்கும் வருமானம் ஈட்ட சரியான வாய்ப்பாக இருந்தாலும்...

இந்த ஒரு முடிவின் மூலம் அரசு பத்திர முதலீட்டின் லாபம் குறையும், அதேபோல டாலர் மதிப்பும் குறையும். இவை இரண்டும் தங்கம் மீதான முதலீட்டுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளதால் இனி வரும் காலக்கட்டத்தில் தங்கம் விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளது (பெட் வட்டி விகிதம் உயர்த்தும் வரை).

பொதுவாக டாலர் மதிப்பு சரிந்தால் தங்கத்தில் அதிகப்படியான முதலீடு குவியும், தற்போது பத்திர முதலீட்டின் மீதான லாபமும் குறைந்துள்ள காரணத்தால் தங்கம் கூடுதலான கவனத்தை முதலீட்டு சந்தையில் பெற்றுள்ளது.

இறுதியாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா இன்று அறிவிக்க உள்ள கட்டுப்பாடுகள் உலகளாவிய வர்த்தக சந்தையை எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது முதலீட்டு சந்தையை தீர்மானிக்கும் முக்கிய விஷயமாக இருக்கப்போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+