இலங்கை: இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இலவசமாக டூரிஸ்ட் விசா வழங்கும் திட்டத்தை இலங்கை அரசு நீட்டித்துள்ளது.
இதன்படி இந்தியா, சீனா,ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு சுற்றுலா வரும்போது இலவசமாக விசா பெற்றுக் கொள்ளலாம் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்கே அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் " வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு 50 டாலர்கள் கட்டணத்தில் 30 நாள் சுற்றுலா விசா என்ற நடைமுறை அப்படியே நீட்டிக்கப்படும் என்றும், இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச விசா சேவை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இலங்கை அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட மக்கள் தவிப்புக்கு ஆளானார்கள். இலங்கையின் பெரும்பாலான வருமானம் என்பது சுற்றுலாத்துறை மூலமே கிடைக்கிறது.
எனவே வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பொருட்டு இலங்கை அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக தான் கடந்த ஆண்டு இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இலவச விசா வழங்கப்படும் என இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டது. தற்போது அது தொடர்ந்து நீட்டிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
இந்தியாவிலிருந்து சுற்றுலா நோக்கத்திற்காக இலங்கை செல்பவர்கள் பயண ஆவணங்களை இலங்கை அரசின் விசா வழங்கக்கூடிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து இ விசா பெற்றுக் கொள்ளலாம். இந்த இ விசா மூலம் இந்தியர்கள் அதிகபட்சம் 30 நாட்கள் வரை இலங்கையில் தங்கி இருக்க முடியும்.
அதே வேளையில் மற்ற நாடுகளை சேர்ந்தவர்களுக்கு 30 நாட்கள் இலங்கையில் தங்குவதற்கான சுற்றுலா விசாவை பெற 50 டாலர்கள் கட்டணமாக செலுத்தப்பட வேண்டும். இதனை செயல்படுத்தி வருவது ஒரு வெளிநாட்டு தனியார் நிறுவனம் என்றும் இந்த நிறுவனம் கூடுதலாக பல்வேறு கட்டணங்களை விதிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த புதிய விசா முறை மூலமாக ஆண்டு தோறும் கிட்டதட்ட 1800 கோடி ரூபாய் மோசடி செய்யப்படும் என மதிப்பிடப்படுவதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் பொறுப்பை வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்கியதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் என அவர்கள் கூறி வருகின்றனர். இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கை அரசு விசா வழங்கும் முறை அப்படியே தொடரும் என கூறியுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!



Click it and Unblock the Notifications