கல்வி, மருத்துவம், ஹோட்டல் என்று பல்வேறு தொழில் துறைகளில் கொடி கட்டி பறக்கும் எஸ்.ஆர்.எம். குழுமம் தனது வர்த்தகத்தை மேலும் பல துறைகளில் விரிவுப்படுத்த தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது சிமெண்ட் உற்பத்தி துறையில் களம் இறங்கியுள்ளது.

இதற்காக, ரூ.225 கோடி முதலீட்டில் எஸ்.ஆர்.எம்.பி. சிமெண்ட்ஸ் நிறுவனம் என்ற புதிய நிறுவனத்தை எஸ்.ஆர்.எம். குழுமம் தொடங்கியுள்ளது. இதன் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.
எஸ்.ஆர்.எம்.பி. சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஓம் பிரகாஷ் கூறுகையில், இந்திய சிமெண்ட் சந்தையில் முக்கிய நிறுவனமாக மாற தயாராக இருக்கிறோம். Portland Pozzolana Cement (PPC) உடன் நாங்கள் சிமெண்ட் சந்தையில் இறங்குகிறோம்.
நவம்பர் 15 முதல் மாலத்தீவு, இந்தோனேஷியா மற்றும் இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய தொடங்குவோம். எங்கள் நிறுவனம் தமிழ்நாட்டில் 3 ஆலைகளையும், ஆந்திராவில் ஒரு ஆலையையும் கொண்டுள்ளது. இந்த ஆலைகளின் ஆண்டு உற்பத்தி திறன் 4.20 லட்சம் டன்னாகும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் இதனை 1 கோடி டன்னாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. டீலர்களின் எண்ணிக்கையை 100ல் இருந்து 1,000ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.
எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலைவர் ரவி பச்சமுத்து கூறுகையில், எஸ்.ஆர்.எம். பிராண்டின கீழ் எங்களது பிராண்ட் மதிப்பு மிகவும் வலுவானது. மாநிலத்தில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் சிமெண்ட்டுக்கு நல்ல தேவை இருக்கிறது என்று தெரிவித்தார்.
எஸ்.ஆர்.எம்.பி. சிமெண்ட்ஸ் நிறுவனம் விரைவில், சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்ட் (OPC)மற்றும் உயர் செயல்திறன் கொண்ட சிமெண்ட் உள்பட பெரிய அளவிலான சிமெண்ட் தயாரிப்புகளை உற்பத்தியை தொடங்க உள்ளது. மேலும், மற்ற பயன்பாடுகளுக்கான வெள்ளை சிமெண்ட் மற்றும் சிமெண்ட் போன்ற நிலையான கட்டுமான பொருட்கள் உற்பத்தியிலும் கவனம் செலுத்துவோம் என்று எஸ்.ஆர்.எம்.பி. சிமெண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications