ஈரான் போர் காரணமாக உலகளவில் தங்கம் விலை சரிந்து வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் இருந்து தங்கம், வெள்ளி விலைகள் கணிசமாக உயர்ந்தன. இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் வரலாற்று உச்சபட்ச விலையை தொட்டன. ஒரு சவரன் ஆபரண தங்கம் 1.33 லட்சமாகவும் ஒரு கிலோ வெள்ளி 4 லட்சத்தையும் கடந்தது.
ஈரான் போருக்கு பின்னர் தங்கம், வெள்ளி விலைகள் சரிந்தன. இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,200 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,13,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 270 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2.7 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை 3 மாத காலமாகவே ஒரு வரம்பிற்குள்ளாகவே இருக்கும் நிலையில் இந்த ஆண்டு முழுவதுமே தங்கம் விலை குறைவிலேயே இருக்குமா அல்லது கடந்த ஆண்டை போல விலை உயருமா என மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஸ்டாண்டர்ட் & சார்ட்ர்ட் நிறுவனம் தங்கம் விலையின் போக்கு எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு அறிக்கையை தந்துள்ளது. அதில் தங்கம் குறுகிய காலத்திற்கு தான் விலை சரிவில் இருக்கும் என தெரிவித்துள்ளது. அதாவது ஈரான் போர் சூழல் தான் தங்கம் விலை சரிவுக்கு காரணம் என்றும் அடுத்த சில மாதங்களில் நிலைமை மாறும் என்றும் தெரிவித்துள்ளது.
அடுத்த மூன்று மாதங்களில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 5,200 டாலர் என்ற அளவை எட்டும் என கணித்துள்ளது. இது தற்போதுள்ள விலையை விட 20% அதிகமாகும். அதே விலை உயர்வை இந்தியாவிற்கு பொருத்தி பார்த்தால் 22 ஆபரண தங்கம் ஒரு சவரன் விலை 1.36 லட்சத்தை எட்டும். அப்படி என்றால் செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் ஒரு சவரன் தங்கம் விலை 1.36 லட்சம் என புதிய வரலாற்று உச்சத்தை தொட வாய்ப்புள்ளது என்கிறது இந்த ரிப்போர்ட்.
அடுத்த 12 மாதங்களுக்கு ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 டாலரை எட்ட வாய்ப்புள்ளது.அதாவது அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் ஒரு சவரன் தங்கம் விலை 1.47 லட்சத்தை தொட்டிருக்கும் என கணிக்கிறது. எனவே நீண்ட கால அடிப்படையில் தங்கத்தின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்கிறது. குறுகிய கால ஏற்ற இறக்கத்தை பார்க்காமல் தங்கத்தை எப்போதும் நீண்ட கால முதலீடாக பார்த்து விலை இறங்கும் போதெல்லாம் வாங்குவது என்ற உத்தியை கையாள பரிந்துரை செய்கிறது.
வளர்ந்து வரும் நாடுகளின் மத்திய வங்கிகள் அதிகமாக தங்கம் வாங்கி கொண்டே இருப்பது தங்கம் விலை உயரும் என்பதற்கான சிக்னல் என கூறுகிறது. எனவே உங்களின் போர்ட்போலியோவில் எப்போதுமே தங்கத்திற்கு இடம் தர வேண்டும் என கூறுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

