சென்னை: கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் காப்பீடு திட்டங்கள் நாட்டின் அனைத்து பகுதிகளில் இருக்கும் மக்களையும் சென்று சேர வேண்டும் என்பதற்காகவும் எல்ஐசி நிறுவனம் பீமா சக்தி யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
பீமா சக்தி யோஜனா என்றால் என்ன?: கிராமப்புறங்களை சேர்ந்த ஒரு லட்சம் பெண்களை எல்ஐசியின் காப்பீட்டு முகவராக மாற்ற வேண்டும் என்பதை இந்த திட்டத்தின் இலக்காகும். இதற்காக எல்ஐசி நிறுவனம் கிராமப்புறங்களை சேர்ந்த ஒரு லட்சம் பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு காப்பீடு தொடர்பான பயிற்சிகளை வழங்க இருக்கிறது. அது மட்டும் இன்றி இந்த பெண்களுக்கு முதல் மூன்று ஆண்டு காலத்திற்கு ஊக்கத் தொகையும் வழங்க இருக்கிறது. இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பதை நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

திட்டத்தில் இணைய தகுதிகள்: https://licindia.in/lic-s-bima-sakhi இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் இந்த பீமாசக்தி யோஜனா குறித்த அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும். முற்றிலும் பெண்களுக்காக மட்டுமே இது வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 18 வயதிலிருந்து அதிகபட்சம் 70 வயது வரை இருக்கும் பெண்கள் இந்த திட்டத்தில் சேர முடியும். பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் வாய்ப்பு கிடைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் பலன்கள்: இந்த திட்டத்தில் காப்பீடு முகவராக தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு முதல் ஓராண்டுக்கு 7 ஆயிரம் ரூபாயும் இரண்டாவது ஆண்டில் 6 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது ஆண்டில் 5 ஆயிரம் ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது: ஏற்கனவே எல்ஐசிஐ ஏஜென்ட் அல்லது ஊழியர்களாகவோ இருக்கும் நபர்களின் வாழ்க்கை துணை ,குழந்தைகள், பெற்றோர், சகோதர ,சகோதரிகள் ஆகியோருக்கு இதில் வாய்ப்பு கிடையாது. எல்ஐசியில் இருந்து ஓய்வு பெற்ற நபர்களுக்கும் இதில் வாய்ப்பு கிடைக்காது.
என்னென்ன ஆவணங்கள் தேவை: இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்பவர்கள் விண்ணப்ப படிவத்தோடு அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை வழங்க வேண்டும்.அவர்களின் வயது சான்றிதழ், முகவரி சான்றிதழ் மற்றும் கல்வித் தகுதியை நிரூபிக்கும் சான்றிதழ்களை ஜெராக்ஸ் காப்பி எடுத்து அதில் தங்களின் கையெழுத்திட்டு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்வது எப்படி?: https://licindia.in/lic-s-bima-sakhi என்ற பக்கத்திற்கு சென்ற உடன் click for bima sakhi என்ற லிங்கை தேர்வு செய்ய வேண்டும். அது https://agencycareer.licindia.in/agt_req/New_Lead_Sakhi_Candidate_Data_entry_For_NewWeb.php இந்த பக்கத்திற்கு உங்களை அழைத்து செல்லும். இந்த விண்ணப்பத்தினை பொறுத்தவரை விண்ணப்பதாரரின் பெயர் , பிறந்த தேதி, செல்போன் நம்பர், மின்னஞ்சல் முகவரி ,தற்போது வசித்து வரும் முகவரி ஆகிய விவரங்கள் கேட்கப்படுகின்றன.
இதனை அடுத்து இதனை அடுத்து தேவைப்படும் ஆவணங்களை அப்லோட் செய்து விட்டால் இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து எல்ஐசி நிறுவனம் சார்பாக நீங்கள் தேர்வு செய்யப்படுகிறீர்கள் என்றால் உங்களுக்கு அதற்கான நடைமுறைகள் குறித்து தகவல்கள் அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு காப்பீடு குறித்த அனைத்து பயிற்சிகளையும் எல்ஐசி நிறுவனமே வழங்குகிறது. எனவே நீங்கள் கிராமப்புறங்களில் இருக்கும் பெண்கள் என்றால் இந்த வாய்ப்பை நிச்சயம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications