அமெரிக்கா: உலகின் மிகப்பெரிய நிறுவனங்களை நிறுவியவர்களின் தொடக்கம் மிகச் சாதாரணமாக தான் இருந்துள்ளது என்பதற்கு உதாரணமானவர் தான் ஸ்டீபன் ஆலன் ஸ்வாசர்மென் (Stephen Allen Schwarzman). புல் வெட்டும் தொழிலில் தொடங்கி உலகின் மிகப்பெரிய தொழிலதிபராக உயர்ந்திருக்கிறார் இவர்.
உலகின் மிகப்பெரிய மாற்று முதலீட்டு நிறுவனங்களில் ஒன்று பிளாக்ஸ்டோன் (Blackstone). இதன் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்டீபன் ஆலன் ஸ்வாசர்மென் தன்னுடைய தன்னுடைய 14 வயதில் புற்களை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்.

அவர்தான் தற்போது அமெரிக்காவின் வெற்றிகரமான பில்லினியர் தொழிலதிபர்களில் ஒருவராக இருக்கிறார். அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் யூத குடும்பத்தில் பிறந்தவர் ஸ்டீபன் ஸ்வாசர்மென். இவரது தந்தை பிலடெல்ஃபியாவில் கடை வைத்து நடத்தி வந்தார்.
14 வயதில் ஸ்டீபன் ஸ்வாசர்மென் புல் வெட்டும் வேலைக்கு சென்று கொண்டு இருந்தார். பின்னர், பல இடங்களில் ஆட்களை பிடித்து பணியமர்த்தி அதை ஒரு தொழிலாகவே செய்து வந்துள்ளார். வேலை ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய படிப்பையும் கைவிடாமல் பி ஏ படித்து முடித்தார்.
யேல் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு பயின்ற போது, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷும் இவரும் ஒன்றாகவே படித்துள்ளனர். பின்னர் சிறிது காலம் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய இவர் ஹார்வர்டு வணிகப் பள்ளியில் எம்பிஏ படித்தார்.
தன்னுடைய தந்தையின் தொழிலை மிகப் பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என விரும்பினார். ஆனால் அவரது தந்தை அதற்கு அனுமதி தரவில்லை. எனவே வேலைக்கு செல்ல தயாரானர் ஸ்டீபம். நிதித்துறை சார்ந்த பணிகளை தேடினார். டொனால்ட்சன் ,லஃப்கின் & ஜென்ரெட் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.
1985 ஆம் ஆண்டு ஸ்டீபனும் அவரது பாஸ் பீட்டர்சனும் இணைந்து தி பிளாக் ஸ்டோன் குழுமத்தை உருவாக்கினர்.இந்த நிறுவனம் ஒரு தொழிலை கைப்பற்றி வேறு ஒருவருக்கு மாற்றி தருவது, ரியல் எஸ்டேட் வணிகம் மற்றும் மாற்று சத்துக்களை நிர்வகிப்பது போன்ற பணிகளை மேற்கொண்டது.
இந்த நிறுவனத்தின் முதுகெலும்பாக செயல்பட்டவர் ஸ்டீபன் ஸ்வாசர்மென். உலகிலேயே மிகப்பெரிய கமர்ஷியல் சொத்துக்களுக்கு உரிமையாளராக இருக்கக்கூடிய நம்பர் ஒன் நிறுவனமாக தி பிளாக் ஸ்டோன் செயல்பட்டு வருகிறத.
நிறுவனங்களுக்கும் கடன் வழங்குவது மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை செய்து தருவது, இன்சூரன்ஸ் என பல துறைகளுக்கு இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ப்ளூம்பெர்க் பில்லினியர் குறியீட்டின் படி 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் படி ஸ்டீபனின் நிகர சொத்து மதிப்பு 2.67 லட்சம் கோடி ரூபாய் ஆகும். 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டில் ஸ்டீபன் ஸ்வாசர்மென் ப்ளூம்பெர்க்கின் ஆண்டின் பிரபலமான 50 நபர்கள் பட்டியலில் இடம்பிடித்தார்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications