ஜூன் 4ஆம் தேதி பங்குச்சந்தையில் வரலாறு காணாத சரிவு பதிவாகி வரும் வேளையில், இந்த மோசமான அலையில் தவறான முடிவுகளை எடுத்துச் சிக்காமல் இருப்பது எப்படி என்று முதலீட்டாளர்களுக்கு நிபுணர் ஆலோசனை வழங்கியுள்ளார் நிர்மல் பாங் இன்ஸ்டிட்யூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் அரோரா.
"இன்றைய வர்த்தகத்தில் உடனடியாக பங்குகளை வாங்க அவசரப்பட வேண்டாம். சந்தை சீராகும் வரை காத்திருங்கள், பின்னர் முதலீடு செய்யலாம்," என்று முதலீட்டாளர்களுக்கு அறிவுரை வழங்கினார் ராகுல் அரோரா.

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 300 இடங்களைத் தாண்ட முடியாமல் போனது, எக்ஸிட் போல் முடிவுகளை விட மிகக் குறைவான எண்ணிக்கை என்பதால் இது பங்குச்சந்தைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதை அரோரா உறுதி செய்துள்ளார்.
ஆனால், பல்வேறு துறைகளில் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு மிக அதிகமாக இருந்தது மூலம் முதலீட்டாளர்கள் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்குள் தற்போது இருக்கும் லாபத்தைப் பணமாக்கிக்கொள்ளும் முடிவில் அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்துள்ளனர், இதன் காரணமாகவே சென்செக்ஸ் 6100 புள்ளிகள் வரையில் சரிந்தது என என்று நிர்மல் பாங் இன்ஸ்டிட்யூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் அரோரா கூறுகிறார்.
கடந்த ஆண்டில் பொதுத்துறை நிறுவனப் பங்குகளின் மதிப்பீடு அதிகரித்ததற்கு, அரசின் உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிப்பு மற்றும் உற்பத்தி இணைப்பு ஊக்கத் திட்டங்களே காரணமாக இருந்தன. ஆனால், பொதுத்துறை வங்கிகளைத் தவிர, பிற பொதுத்துறை நிறுவனங்களின் கணக்கு அறிக்கைகள் அவற்றின் பங்குகளின் மதிப்பை நியாயப்படுத்துவதற்கு போதுமான வலுவற்றதாக உள்ளது. இதன் வெளிப்பாடாகவே நிஃப்டி PSE குறியீடு 14 சதவீதம் வரையில் இன்று சரிய வழிவகுத்துள்ளது என்று அரோரா தெரிவித்தார்.
இதற்கிடையே, தேர்தல் முடிவுகள் சந்தை எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாததால், குறுகிய காலத்தில் பார்மசூட்டிகல் மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறைகள் போன்ற பாதுகாப்பான துறைகளை நோக்கி சந்தை கவனம் செல்லும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

சந்தை நிலைமை சீரானதும், மூன்று மாத காலகட்டத்தில் நுகர்வோர் பொருட்கள், பார்மசூட்டிகல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை சில பங்குகளை உள்ளடக்கிய போர்ட்போலியோவை உருவாக்க முதலீட்டாளர்களுக்கு அரோரா பரிந்துரைத்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு நிமிடமும் எக்சிட் போல்களை நொறுக்கி வரும் வேளையில், எக்சிட் போல்களை நம்பி முதலீடு செய்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்து வருகிறார்கள்.
குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எக்சிட் போல்-களை மட்டுமே நம்பி திங்கட்கிழமை வர்த்தகத்தில் பெரும் தொகையை முதலீடு செய்து ஷார்ட் கவரிங் செய்தனர், ஆனால் தற்போது அனைத்தும் வீணாகிவிடவே, தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.
தேர்தல் முடிவுகள் வெளியிடும் நாளில் மேலும் நிஃப்டி 8.2% குறைந்தது, சென்செக்ஸ் 8% குறைந்தது, வங்கி நிஃப்டி 9.2% குறைந்தது, FINNIFTY 9.2% குறைந்தது, MIDCPNIFT 10.2% குறைந்தது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு மத்தியம் 1.15 மணிக்குள் ரூ.45.56 லட்சம் கோடி குறைந்து வெறும் ரூ.380.35 லட்சம் கோடியாக இருந்தது. திங்கட்கிழமை வர்த்தக முடிவில் 426 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications