பெங்களூரு: கடந்த நான்கு மாதங்களில் பெங்களூருவில் மோசடி வழக்குகள் அதிகரித்துள்ளன. இதன் விளைவாக மக்கள் சுமார் ரூ. 197 கோடி ரூபாயை இழந்துள்ளதாக சமீபத்தில் வெளியான அறிக்கை கூறுகிறது. அதன் விரிவான விவரங்களை விவரிக்கிறது இந்தப் பதிவு.
இந்தியாவில் மோசடி தொடர்பான சைபர் கிரைம் வழக்குகள் 735 பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 10 % வழக்குகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்ற நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. பங்குச் சந்தை மோசடிகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இந்த வழக்குகளை விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் சிறப்பு குழு ஒன்றை அமைத்துள்ளனர். பிப்ரவரியில் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக 8 மோசடி தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 237 வழக்குகளில் ரூ. 88 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

சில ஆண்டுகளாக மக்கள், அதிக வருமானம் பெற வேண்டும் என்று பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பிற முதலீட்டு திட்டங்களைப் பற்றி ஆய்வு செய்கின்றனர். இதன் விளைவாக தெரியாத நபர்களிடம் ஆன்லைனில் பேசி, தான் ஏமாறுகிறோம் என்று கூட தெரியாமல் போலியான செயலிகளின் மூலம் லட்சக்கணக்கான தொகையை இழந்து வருகின்றனர். வருமானம் பெற வேண்டும் என்று எண்ணுவதற்கு முன்பு நாம் செய்ய இருக்கும் முதலீட்டு திட்டம் உண்மைதானா.. என்று பலமுறை ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதன் பிறகு முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். மோசடிகள் குறித்து போலீசார் தொடர்ந்து எச்சரிக்கையை விடுத்தாலும், ஏமாறும் மக்கள் இன்னும் ஏமாந்து கொண்டு தான் இருக்கின்றனர்.
கடந்த மார்ச் மாதம் தாங்கள் புகழ்பெற்ற நிதி நிறுவனங்கள் என்று பொய்யாக கூறி போலிச் சான்றிதழ்களை காட்டி முதலீட்டாளர்களை ஏமாற்ற முயற்சித்த நிறுவனங்களுக்கு எதிராக தேசிய பங்கு சந்தை (NSE) முதலீட்டாளர்களை எச்சரித்தது. இருந்தும், அது தெரியாத சிலர் தொடர்ந்து போலியான முதலீட்டு நிறுவனங்களின் மூலம் ஏமாந்து வருகின்றனர்.
இது போன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களில், பெரும்பாலானோர் 30 வயதிற்கும் மேற்பட்டவர்கள் மற்றும் பங்குச்சந்தையை பற்றி நன்கு அறிந்தவர்கள் என்று காவல்துறை இணை ஆணையர் சந்திரகுப்தா அறிக்கையில் தெரிவித்துள்ளார். பேராசையால் மக்கள் பணத்தை இழக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போதுள்ள இளம் முதலீட்டாளர்களும், இதுபோன்ற போலியான முதலீட்டு திட்டங்களுக்கு மயங்கி அதிக அளவில் பணத்தை இழக்கின்றனர். தெரியாத நபர்கள் இதுபோல ஏமாந்தால் அவர்களுக்கு சொல்லி புரிய வைக்கலாம். ஆனால் நன்கு படித்த நபர்களே, இது போன்ற மோசடியில் சிக்கி பல்லாயிரக்கணக்கான தொகையை இழப்பது வேதனை அளிக்கிறது. ரூ.200 கோடி ரூபாய் இழப்பு என்பது அவ்வளவு சிறிய தொகை அல்ல. அந்த அளவு மக்களின் அறியாமையை காட்டுகிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
More From GoodReturns

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications