வரும் நாட்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செமிகண்டக்டர், டிரோன், செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளின் ஆதிக்கம் மற்ற துறைகளை காட்டிலும் அதிகமாக இருக்கும். எதிர்காலத்தில் இந்த துறைகளின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும் என்பதே இதற்கு காரணம்.
இந்த துறைகளை சேர்ந்த பங்குகளில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் நல்ல ஆதாயம் அளிக்கும். இந்த துறைகளை சேர்ந்த சில பங்குகள் எதிர்காலத்தில் சிறப்பாக செயல்படும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அந்த பங்குகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி:
அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட்: இந்நிறுவனம் மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஒரு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமாகும். இந்நிறுவனம் கழுதியில் உலகின் மிகப்பெரிய சூரிய மின் நிலையத்தை அமைத்து நிர்வகித்து வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.1,498.60ஆக இருந்தது.
என்.எச்.பி.சி.லிமிடெட்: இது மத்திய அரசுக்கு சொந்தமான நீர் மின் உற்பத்தி நிறுவனம். இந்நிறுவனம் சூரிய, ஜியோதெர்மல், அலை மற்றும் காற்றாலை போன்ற பிற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் வாயிலாகவும் மின் உற்பத்தி செய்து வருகிறது. இப்பங்கின் விலை இன்று வர்த்தகத்தின் இடையே ரூ.65.73ஆக இருந்தது.
எஸ்.ஜே.வி.என்.: மத்திய அரசுக்கு சொந்தமான நீர்மின் உற்பத்தி மற்றும் பரிமாற்ற நிறுவனம் எஸ்.ஜே.வி.என் (SJVN). இந்நிறுவனம் சோலார் மின் உற்பத்தி திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.94.79ஆக இருந்தது.
செமிகண்டக்டர்:
ஆர்.ஐ.ஆர். பவர் எலக்ட்ரானிக்ஸ்: இந்நிறுவனம் செமிகண்டக்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. நாளுக்கு நாள் செமிகண்டக்டர் தேவை அதிகரித்து வருவது இந்நிறுவனத்துக்கு சாதகமான விஷயமாகும். மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.801.90ஆக இருந்தது.
ஸ்பெல் (spel): இந்நிறுவனமும் செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனம்தான். மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.76.98ஆக இருந்தது.
டிக்சன் டெக்னாலஜிஸ்: நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் தயாரிப்பில் டிக்சன் டெக்னாலஜிஸ் ஈடுபட்டு வருகிறது. சமீபகாலமாக இப்பங்கின் விலை அடிக்கடி புதிய உச்சத்தை தொட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.6,314.00ஆக இருந்தது.
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.):
டாடா எலக்ஸி: இந்நிறுவனம் ஆட்டோமொபைல், ஒளிபரப்பு, கம்யூனிகேஷன்ஸ், சுகாதாரம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப சேவைகளை வழங்கிறது. மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.8,996.65ஆக இருந்தது.
பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட்: சர்வதேச சாப்ட்வேர் நிறுவனமான இந்நிறுவனம், டிஜிட்டல் டிரான்ஸ்.பர்மேஷன், கிளவுட், கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற பிரிவுகளில் பலவிதமான தீர்வுகளை வழங்குகிறது. மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.6,821.70ஆக இருந்தது.
போஷ் லிமிடெட்: இந்நிறுவனம் வாகன தொழில்நுட்பம், தொழில்துறை தொழில்நுட்பம், நுகர்வோர் பொருட்கள் மற்றும் எரிசக்தி மற்றும் கட்டிட தொழில்நுட்பம் ஆகியவற்றில் முன்னிலையில் உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.22,137.40ஆக இருந்தது.
டிரோன்:
எச்.ஏ.எல்.: மத்திய அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்.ஏ.எல்.) விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனமாகும். இந்நிறுவனம் டிரோன்களையும் தயாரிக்கிறது. மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.2,778.00ஆக இருந்தது.
பாரத் எலக்ட்ரானிக்ஸ்: இந்நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமான மற்றும் அதிக லாபம் ஈட்டும் ஒரு மகா நவரத்னா நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் விண்வெளி மற்றும் பாதுகாப்பு சார்ந்த தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.164.00ஆக இருந்தது.
இன்போ எட்ஜ்: நாட்டில் உள்ள மிகச் சில லாபகரமான இணைய நிறுவனங்களில் இன்போ எட்ஜ் (இந்தியா) லிமிடெட் நிறுவனமும் ஒன்று. மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.5,142.65ஆக இருந்தது.


Click it and Unblock the Notifications