நீங்க பங்குச்சந்தையில் முதலீடு செய்பவரா..? கையில் வெண்ணெயை வைத்துக் நெய்க்கு அலைய வேண்டாம்..!!

பணப்புழக்கச் சிக்கலில் சிக்கியிருக்கும் போது, கையில் இருக்கும் ஆதாரங்களை வைத்து பணத்தைத் திரட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்குப் பங்குகளில் முதலீடு செய்யும் பழக்கம் இருந்தால், நீங்கள் கையில் வைத்திருக்கும் பங்குகளைப் பயன்படுத்தி பணம் பெற ஒரு எளிமையான வழி இருக்கிறது. அதன் பெயர் பங்குகளுக்கு எதிரான கடன் (Loan Against Shares - LAS).

நீங்க பங்குச்சந்தையில் முதலீடு செய்பவரா..? கையில் வெண்ணெயை வைத்துக் நெய்க்கு அலைய வேண்டாம்..!!

பங்குகளுக்கு எதிரான கடன் என்றால் என்ன?: பங்குகளுக்கு எதிரான கடன் என்பது, உங்கள் பங்குகளை (Demat கணக்கில் வைத்திருக்கும் பங்குகள்) அடகு வைத்து, வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் பெறுவதற்கான ஒரு வழிமுறையாகும். இந்தக் கடனுக்கு, உங்கள் பங்குகள் அடகு வைக்கப்பட்டு அதை ஆதாரமாகக் கருதி அடமான கடன் பெற முடியும்.

யார் இந்தக் கடனைப் பெறத் தகுதி பெற்றவர்கள்?: பொதுவாக, டிமேட் கணக்கில் பங்குகளை வைத்திருக்கும் தனிநபர்கள் பங்குகளுக்கு எதிரான கடன்களுக்கு தகுதி பெற்றவர்கள். இருப்பினும், இந்த தகுதி நிபந்தனைகள் வங்கி/நிதி நிறுவனத்தைப் பொறுத்து சற்று வேறுபடலாம்.

கடன் தொகை எவ்வளவு: நீங்கள் பெறக்கூடிய கடன் தொகை, அடகு வைக்கப்பட்ட பங்குகளின் சந்தை மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக இருக்கும். இது பங்குகளின் வகை மற்றும் கடன் வழங்கும் நிறுவனத்தின் கொள்கைகளைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக, கடன் தொகை 50% முதல் 70% வரை அல்லது சில சமயங்களில் அதற்கும் மேலாகவும் இருக்கலாம்.

உதாரணம்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, உங்கள் பங்குகளுக்கு எதிராக ரூ.20 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இதன் மூலம், அவசர தேவைகள், தனிப்பட்ட தேவைகள் அல்லது புதிய பங்கு வெளியீடுகளில் பங்கேற்பதற்கு நீங்கள் நிதி திரட்டலாம்.

இருப்பினும், இந்த வங்கிக் கடன், ஏற்கனவே உள்ள பங்குகளை அடகு வைத்து, புதிய பங்கு வெளியீடுகளில் பங்கேற்பதற்காகப் பயன்படுத்த அனுமதி இல்லை.

கவனிக்க வேண்டியவை: பங்குகளுக்கு எதிரான கடனை சில நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியாது, பங்குச் சந்தையில் லாபம் ஈட்டுவதற்கான முதலீடு (Speculative Purposes), நிறுவனங்களுக்கு இடையேயான முதலீடு (Inter-Corporate Investments), ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டு உரிமையைப் பெறுதல் (Acquiring Controlling Interest in a Company) போன்ற விஷயங்களுக்குப் பங்குகள் மீதான கடன்களைப் பெற முடியாது.

பங்குகளுக்கு எதிரான கடன் என்பது, கைவசம் பணம் இல்லாத சமயங்களில் உடனடியாகப் பணத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள ஒரு வசதியான வழிமுறையாகும். இருப்பினும், கடனை பெறுவதற்கு முன்பு, வட்டி விகிதங்கள், கடன் தொகைக்கான தகுதி மற்றும் கடன் நிபந்தனைகள் போன்றவற்றைக் கவனித்து கடன் பெறுவது அவசியம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+