அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அந்நாட்டின் பணவீக்கம் குறைந்ததை தொடர்ந்து நாணய கொள்கையை கட்டுப்படுத்துவதை நிறுத்திவிட்டு, 2024 ஆம் ஆண்டு 3 முறை வட்டி விகிதத்தை குறைப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவின் டாவ் ஜோன்ஸ், எஸ் அண்ட் பி 500, நாஸ்டாக் குறியீடுகள் நேற்றைய வர்த்தகத்தில் 1.4 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
இதன் எதிரொலியாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டு சந்தையான பத்திர சந்தையில் இருந்து அதிகப்படியான முதலீட்டை வெளியேற்றி ரிஸ்க் எடுத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்தனர். இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் காலை வர்த்தகத்தில் அதிகப்படியான முதலீட்டை ஈர்த்தது.

புதன்கிழமை காலை வர்த்தகம் துவங்கிய 15 நிமிடத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சுமார் 1 சதவீதம் உயர்ந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயர்ந்தது. மேலும் சென்செக்ஸ் சுமார் 900 புள்ளிகள் உயர்ந்து 70,540.00 புள்ளிகளை தொட்டு உள்ளது.
அமெரிக்க முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்களுடைய பணத்தை ஐடி சேவை துறையில் முதலீடு செய்துள்ளனர். இதில் முக்கியமாக சிறிய ஐடி நிறுவனங்கள், 2000 ரூபாய்க்கு குறைவாக இருக்கும் ஐடி நிறுவன பங்குகள் அதிகளவிலான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதில் முக்கியமாக Mphsis 6.33 சதவீதமும், கோபோர்ஜ் 4.64 சதவீதமும், பெர்சிஸ்டென்ட் சிஸ்டம்ஸ் 4.31 சதவீதமும், டெக் மஹிந்திரா 3.44 சதவீதமும், ஹெச்சிஎல் டெக் 3.40 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதை தொடர்ந்து விப்ரோ 2.44 சதவீதமும், இன்போசிஸ் 2.37 சதவீதமும், டிசிஎஸ் 1.68 சதவீமும் வளர்ச்சி அடைந்துள்ளது. நிஃப்டி ஐடி குறியீடு பிற துறைகளை காட்டிலும் அதிகப்படியான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது, காலை வர்த்தகத்தில் 2.61 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஐடி துறையை தொடர்ந்து நிஃப்டி ரியல் எஸ்டேட் குறியீடு 2 சதவீதமும், நிதியியல் சேவை துறை 1.71 சதவீதமும், வங்கி துறை நிஃப்டி குறியீடு 1.70 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் பார்மா மற்றும் ஹெல்த்கேர் துறை குறியீடுகள் மட்டுமே சரிவில் உள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 929.60 புள்ளிகள் உயர்ந்து 70,514.20 புள்ளிகளை எட்டியுள்ளது, சென்செக்ஸ் அதிகப்படியாக 70,602.89 புள்ளிகளை அடைந்தது. நிஃப்டி குறியீடு 256.35 புள்ளிகள் உயர்ந்து 21,182.70 புள்ளிகளை எட்டியிருக்கும் வேளையில் அதிகப்பசியாக 21,210.90 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.
More From GoodReturns

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications