முதலீட்டுச் சந்தையில் முதலீடு செய்து ஈசியாக லாபத்தைப் பார்க்கும் காலம் முடிந்தது என்பது தான் நிதர்சனமான உண்மை, சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரு முதலீட்டாளர்கள் வரை தற்போது புதிய முதலீட்டுத் திட்டத்தையும், மாற்று வழிகளையும் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
இது தற்காலிகமாக மாற்றம் என்று நினைக்கும் அனைவருக்கும் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் ஒரு எச்சரிக்கையாக உள்ளது.
அமெரிக்கப் பணவீக்கம்
அமெரிக்காவின் பணவீக்கம் தற்போது 1980ஆம் ஆண்டுக்குப் பின்பு 7 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, இதைக் குறைக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் மார்ச் மாதத்தில் கட்டாயம் வட்டி விகிதம் குறைந்தபட்சம் 0.25 சதவீதம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது.
பெடரல் ரிசர்வ்
அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் பணவீக்க இலக்கான 2 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் காரணத்தால் இதைக் குறைக்கப் பிப்ரவரி மாதம் வெறும் 30 பில்லியன் டாலருக்கு பத்திர கொள்முதலும், மார்ச் மாதத்தில் இருந்து பத்திர கொள்முதலை நிறுத்தவும் முடிவு செய்துள்ளது. இவ்விரு அறிவிப்புகள் வியாழக்கிழமை வர்த்தகச் சந்சையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது.
வியாழக்கிழமை வர்த்தகம்
வியாழக்கிழமை வர்த்தகத்தில் மட்டும் மும்பை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 4.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டு மதிப்பீட்டை இழந்துள்ளனர். அமெரிக்கப் பெடர்ல் வங்கி முடிவால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையில் முதலீட்டைத் தொடர்ந்து குறைத்து வருகின்றனர்.
5 முறை வட்டி உயர்வு
மேலும் பெடரல் ரிசர்வ்-ன் தலைவர் ஏற்கனவே 3 முதல் 5 முறை வட்டி விகிதம் உயர்த்தப்படும் என அறிவித்தார், இதைக் கடைப்பிடித்தால் அடுத்த சில காலாண்டுகளுக்கு முதலீட்டு சந்தை கட்டாயம் மந்த நிலையிலும், சரிவிலும் தான் இருக்கும். இதன் மூலம் மீண்டும் முதலீட்டுச் சந்தையில் தனது ஆதிக்கத்தைக் காட்டியுள்ளது.
முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது
முதலீட்டாளர்கள் தற்போது இரண்டு முக்கியமான விஷயத்தைச் செய்ய வேண்டும். முதலில் தினசரி வர்த்தகச் சரிவையும் மாற்றங்களையும் ஆய்வு செய்து முதலீட்டு முறையை மாற்ற வேண்டும், இரண்டாவதாக அடுத்த 6 - 12 மாதத்தில் முதலீட்டு சந்தைக்கு என்னென்ன ஆபத்துக்கள், பாதிப்புகள் வரும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பட்ஜெட்-க்கு முன் ஏற்பட்டு உள்ள இந்த மாற்றம் பெரும் பாதிப்பை உருவாக்கும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications