இந்திய பங்குச்சந்தை கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியான சரிவை சந்தித்து வருகிறது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 குறியீடுகள் பெரிய அளவிலான வீழ்ச்சியை கண்டு வரும் காரணத்தால் முதலீட்டாளர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
புதன்கிழமை அதாவது டிசம்பர் 18 அன்று வர்த்தக முடிவில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் 0.80% வரையிலான சரிவை பதிவு செய்தன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வரும் காரணத்தால் முன்னணி நிறுவன பங்குகள் சரிவதை தாண்டி மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகளும் சுமார் 1% வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 502 புள்ளிகள் குறைந்து 80,182.20 இல் முடிவடைந்தது, இதன் மூலம் 0.62% வீழ்ச்சி அடைந்துள்ளது. நிஃப்டி 50 குறியீடு 137 புள்ளிகள் குறைந்து 24,198.85 புள்ளிகள் முடிவடைந்தது, 0.56% வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் 0.61% மற்றும் 0.76% சரிவுடன் வர்த்தகம் முடிவடைந்தன.
இந்த மூன்று நாள் தொடர் வீழ்ச்சி காரணமாக சென்செக்ஸ் 1,951 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது, பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மூலதனம் 459 லட்சம் கோடி ரூபாயில் இருந்து கிட்டத்தட்ட 453 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதுவே துறை வாரியாக பார்க்கும் போது நிஃப்டி மீடியா குறியீடு 2% க்கும் அதிகமான வீழ்ச்சியை சந்தித்தது, இதேபோல் நிஃப்டி PSU வங்கி குறியீடு 2% குறைந்தது. நிஃப்டி வங்கி, நிதி சேவைகள், தனியார் வங்கி மற்றும் உலோகம் போன்ற பிற துறைகளும் 1% க்கும் அதிகமான கணிசமான இழப்புகளை இந்த 3 நாட்களில் சந்தித்துள்ளது.
இதேவேளையில் நிஃப்டி பார்மா குறியீடு இந்த போக்கை மீறி, 1% க்கும் அதிகமான லாபத்தை பதிவு செய்தது. நிஃப்டி ஐடி குறியீடும் சிறிய அளவிலான உயர்வை பதிவு செய்துள்ளது.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications