சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 குறியீடுகள் 1%க்கும் மேல் சரிவடைந்த நிலையில், இந்திய பங்குச் சந்தை இன்று ரத்தக்களரியானது. செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் நிஃப்டி 50 குறியீடு 24,781.1 புள்ளிகளிலும், சென்செக்ஸ் குறியீடு 81,151.27 புள்ளிகளிலும் வர்த்தகம் முடிந்தது.
மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் இன்று அதிகமாகப் பாதிக்கப்பட்ட நிலையில், நிஃப்டி மிட்கேப் 50 மற்றும் நிஃப்டி ஸ்மால் கேப் 100 குறியீடுகள் முறையே 2.45% மற்றும் 3.92% சரிவுயடைந்தன.

இன்றைய வர்த்தக சரிவுக்கு பல காரணிகள் பங்களித்துள்ளது, அவற்றில் முக்கியமான இந்திய நிறுவனங்களின் மோசமான காலாண்டு முடிவுகள், தொடர்ந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளரின் பங்கு விற்பனை மற்றும் உலக சந்தை போக்குகள் ஆகியவை அடங்கும்.
நிஃப்டி 50 குறியீட்டில் ஐசிஐசிஐ வங்கி முக்கிய லாபதாரராக உயர்ந்த நிலையில், அதானி எண்டர்பிரைசஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், மகேந்திரா & மகேந்திரா, கோல் இந்தியா மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை அதிகளவில் சரிவை சந்தித்தது. வங்கி நிஃப்டி குறியீடும் கடந்த வாரத்தில் 1.35% சரிவுயடைந்தது.
அக்டோபர் 22, 2024 அன்று வர்த்தக அமர்வின் போது அதிகம் லாபம் அடைந்த, அதிகம் இழப்பை சந்தித்த பங்குகளின் பட்டியல் இதுதான்:
சென்செக்ஸ் குறியீடு:
அதிகம் லாபம் அடைந்த நிறுவனம்: ஐசிஐசிஐ வங்கி (0.67% உயர்வு)
அதிகம் இழப்பை சந்தித்த நிறுவனம்: மகேந்திரா & மகேந்திரா (3.79% சரிவு), டாடா ஸ்டீல் (2.94% சரிவு), ஸ்டேட் வங்க் ஆப் இந்தியா (2.91% சரிவு), பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (2.89% சரிவு), டாடா மோட்டார்ஸ் (2.64% சரிவு)
நிஃப்டி குறியீடு:
அதிகம் லாபம் அடைந்த நிறுவனம்: ஐசிஐசிஐ வங்கி (0.67% உயர்வு)
அதிகம் இழப்பை சந்தித்த நிறுவனம்: அதானி எண்டர்பிரைசஸ் (3.88% சரிவு), பாரத் எலக்ட்ரானிக்ஸ் (3.77% சரிவு), மகேந்திரா & மகேந்திரா (3.70% சரிவு), கோல் இந்தியா (3.51% சரிவு), டாடா ஸ்டீல் (2.99% சரிவு)
நிஃப்டி மிட்கேப் 50:
அதிகம் லாபம் அடைந்த நிறுவனம்: பீனிக்ஸ் மில்ஸ், கோல்கேட் பால்மோலிவ் இந்தியா
அதிகம் இழப்பை சந்தித்த நிறுவனம்: சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ், எல் & டி பைனான்ஸ், யெஸ் வங்கி, NMDC, SRF
நிஃப்டி ஸ்மால் கேப் 100 குறியீடு:
அதிகம் லாபம் அடைந்த நிறுவனம்: சிட்டி யூனியன் வங்கி, சென்சூரி டெக்ஸ்டைல்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ், அபார் இண்டஸ்ட்ரீஸ்
அதிகம் இழப்பை சந்தித்த நிறுவனம்: ஆதித்யா பிர்லா ரியல் எஸ்டேட், HFCL, மங்களூர் ரிபைனரி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ், குஜராத் மினரல் டெவலப்மென்ட் கார்ப், இந்துஸ்தான் காப்பர்
மும்பை பங்குச்சந்தை:
அதிகம் லாபம் அடைந்த நிறுவனம்: பாலிமெடிக்கியூர் (3.50% உயர்வு), வருண் பேவரேஜஸ் (2.78% உயர்வு), Hindustan Zinc (2.37% உயர்வு), Tube Investments Of India (2.08% உயர்வு), சிட்டி யூனியன் வங்கி (11.77% உயர்வு)
அதிகம் இழப்பை சந்தித்த நிறுவனம்: Aditya Birla Real Estate (9.72% சரிவு), HFCL (7.48% சரிவு), Finolex Industries (7.44% சரிவு), NLC India (7.21% சரிவு), Punjab National Bank (7.18% சரிவு)
சேசிய பங்குச்சந்தை:
அதிகம் லாபம் அடைந்த நிறுவனம்: பாலிமெடிக்கியூர் (3.01% உயர்வு), வருண் பேவரேஜஸ் (2.78% உயர்வு), Hindustan Zinc (2.36% உயர்வு), Tube Investments Of India (2.25% உயர்வு), சிட்டி யூனியன் வங்கி (11.87% உயர்வு)
அதிகம் இழப்பை சந்தித்த நிறுவனம்: Supreme Industries (9.92% சரிவு), Aditya Birla Real Estate (9.67% சரிவு), Jupiter Wagons (8.48% சரிவு), HFCL (8.06% சரிவு), Finolex Industries (7.65% சரிவு).
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications