டீப்ஃபேக் தொழில்நுட்பம்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களை குறிவைக்கும் மோசடியாளர்கள்.. மக்களே உஷார்..!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது அனைத்து துறைகளிலும் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் வேளையில் எந்த அளவுக்கு மக்களும், நிறுவனங்களுக்கும் சாதகமாக இருக்கிறதோ, அதே அளவுக்கு பல புதிய பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது.

குறிப்பாக டீப்ஃபேக்ஸ் (Deepfakes) எனப்படும் நவீனத் தொழில்நுட்பம் போலியான போட்டோ, வாய்ஸ், வீடியோ ஆகியவற்றை நிஜமென நம்பும் அளவுக்கு, உருவாக்கும் திறன் கொண்டது. இன்போசிஸ் நாராயண மூர்த்தி சொல்வது போல் எல்லா தொழில்நுட்பத்திலும் சாதக பாதகங்கள் உள்ளது, இது தவறானவர்கள் கைகளுக்குச் செல்லும் போது தான் பிரச்சனை.

டீப்ஃபேக் தொழில்நுட்பம்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களை குறிவைக்கும் மோசடியாளர்கள்.. மக்களே உஷார்..!

இப்படி டீப்ஃபேக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் மக்கள் பணம், முக்கிய தனிநபர் விபரம், வர்த்தகத்தை மோசடியாளர்களிடம் இழந்திருக்கும் நிலையில், தற்போது பங்குச்சந்தையும் இந்த வரிசையில் மாட்டிக்கொண்டு உள்ளது. குறிப்பாக இந்தியாவில் பங்குச்சந்தை சார்ந்து டீப்ஃபேக்ஸ் மூலம் பலர் மோசடி வலையில் விழுந்து வருகின்றனர்

டீப்ஃபேக்ஸ் பயன்படுத்தி எப்படி மோசடி செய்யப்படுகிறது..? : முதலில் மோசடியாளர்கள் பிரபலமான பங்குச்சந்தை வர்த்தக செயலிகள் போன்ற க்ளோனிங் ஆப்-ஐ உருவாக்கிக் கொள்கின்றனர். இத்தகைய க்ளோனிங் ஆப் டெலிகிராம் சேனலில் அதிகளவில் உலா வருகிறது.

இந்த போலியான ஆப் உண்மையான ஆப் போலவே UI/UX இருக்கும் காரணத்தால் சாமானிய மக்களால் இதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இது தான் மோசடியாளர்கள் ஏமாற்றப்படும் முக்கிய இடமாகப் பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டமாக டீப்ஃபேக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான லாப - நஷ்ட கணக்குகள், வர்த்தக பரிமாற்றங்கள், வர்த்தக தள ரிப்போர்ட்கள், வங்கி கணக்குகள் ஆவணங்களைத் தயாரித்து அதை வீடியோவாக உருவாக்கி கொள்கின்றனர்.

இது ஸ்கிரீன்ஷாட் விடவும் மிகவும் தத்ரூபமாக இருக்கும். இதை வைத்து புதிய மற்றும் இளம் முதலீட்டாளர்களிடம் ஆவணங்களைக் காட்டி முதலீடு செய்ய தூண்டப்படுகிறார்கள்.

இதுக்குறித்து ஆய்வு செய்த போது டெலிகிராம் சேனலில் Zerodha, Grow, Upstox ஆப்-களின் க்ளோன் வடிவங்கள் கொண்டு மாதாந்திர கட்டண அடிப்படையில் போலியான ஆவணங்களைத் தயாரிக்கும் சேவை உடன் க்ளோனிங் ஆப் நிர்வாகம் செய்யும் சேவை அளிக்கப்படுகிறது.

இத்தகைய மோசடிகள் குறித்துத் தெரியாத பலர் போலி டேட்டா, டீப்ஃபேக் வீடியோ ஆகியவற்றைப் பார்த்து நம்பி இந்த க்ளோன் ஆப் மூலம் முதலீடு செய்து பணத்தை இழந்து வருகின்றனர். இந்த க்ளோனி ஆப் பெற மாதம் 4000 ரூபாய் செலுத்தினாலே போதும் என்பது தான் கொடுமையான விஷயம், இதை வைத்து மோசடியாளர்கள் பல லட்சத்தை இழந்து வருகின்றனர்.

நவம்பர் 22 ஆம் தேதி ஜெரோதா நிறுவனத்தின் சிஇஓ நித்தி காமத் தனது வாடிக்கையாளர் ஒருவர் 1.80 லட்சம் ரூபாயை இழந்திருக்கக் கூடும் வேளையில் கடைசி நொடியில் தப்பித்தார் என தெரிவித்தார். மேலும் சந்தையில் பல க்ளோனி ஆப் இருப்பதாகவும் எச்சரித்தார்.

இதேபோல் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிறுவனத்தின் சிஇஓ, வங்கியின் பேங்க் மேனேஜர் பேசுவது போலப் போலியான வாய்ஸ் உருவாக்கி அதன் மூலம் பல கோடி ரூபாயை ஞ பிரிட்டன், ஹாங்காங் நாட்டில் மோசடி செய்யப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+