தேசிய பங்குச்சந்தை (NSE) இன்று வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக, மே 20ம் தேதி பங்குச்சந்தை வர்த்தகம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாளில் தான் மும்பையில் வாக்குப்பதிவு நடக்கிறது என்பதால் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு பங்குச்சந்தை அலுவலகம் மூடப்பட உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் 5 கட்டங்களாக நடக்கிறது குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவாக, மே 20ம் தேதி முடிவடையத் திட்டமிடப்பட்டிருந்த நிஃப்டி மிட்கேப் செலக்ட் (Nifty Midcap Select) ஒப்பந்தங்கள், மே 17ம் தேதி முடிவடையும். மேலும், நிஃப்டி மிட்கேப் செலக்ட் (Nifty Midcap Select) ஆப்ஷன்ஸ் கான்டிராக்ட் முதிர்வு தேதி மே 20ம் தேதி என்பதற்குப் பதிலாக மே 17ம் தேதி என மாற்றியமைக்கப்பட்டுள்ளது எனத் தேசிய பங்குச்சந்தை அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13 மற்றும் மே 20 ஆகிய தினத்தில் தேர்தல் நடக்க உள்ளது.
இதில் மே 20ம் தேதி, தூலே, திண்டோரி, நாசிக், பிவாண்டி, கல்யாண், தானே, மும்பை வடக்கு, மும்பை வடமேற்கு, மும்பை வடகிழக்கு, மும்பை தெற்கு, மும்பை தென் சென்ட்ரல், மும்பை வடக்கு சென்ட்ரல் மற்றும் பால்கர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
மேலும், மகாராஷ்டிரா தினத்தையொட்டி மே 1ம் தேதியும் பங்குச்சந்தை வர்த்தகம் நடைபெறாது. இதனால் பங்குச்சந்தை வர்த்தகர்கள் விடுமுறை நாட்களைத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டியது கட்டாயம்.


Click it and Unblock the Notifications