மும்பை: 2024- 2025 நிதியாண்டு தொடங்கியதில் இருந்து தற்போது வரை இந்திய பங்குச்சந்தைகள் அவ்வப்போது சரிவை கண்டாலும் அவ்வப்போது புதிய உச்சத்தையும் எட்டி வருகிறது. இந்த 5 மாதங்களில் பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளன. பெஞ்ச்மார்க் குறியீடான NSE Nifty கடந்த 5 மாதங்களில் 13% வளர்ச்சி அடைந்துள்ளது, அதே போல Nifty Midcap 150 குறியீடு 23% மற்றும் Nifty Smallcap 250 குறியீடு 27% உயர்ந்துள்ளன.
நிஃப்டியுடன் சேர்ந்து பல்வேறு நிறுவனங்களின் பங்கு மதிப்புகளும் அதிகரித்துள்ளன. உதாரணமாக மைக்ரோகேப் நிறுவனமான LCC Infotech நிறுவனத்தின் பங்கு மதிப்பு நடப்பு நிதியாண்டில் 362% உயர்ந்துள்ளது. மார்ச் 28ஆம் தேதி இதன் ஒரு பங்கின் மதிப்பு 1.90 ரூபாய் என இருந்து தற்போது 8.77 ரூபாய் என உயர்ந்திருக்கிறது.

அடுத்ததாக, V-Marc India நிறுவனத்தின் பங்கு மதிப்பு 333% உயர்ந்து தற்போது 439 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல Shekhawati Industries நிறுவன பங்கின் மதிப்பு 310% வளர்ச்சி அடைந்து தற்போது 86 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகிறது. இந்த பட்டியலில் அடுத்த இடத்தை பிடித்திருப்பது Enser Communications. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 63 ரூபாயில் இருந்து 238.85 ரூபாய் என 278% வளர்ச்சி அடைந்துள்ளது.
இதே போல Kody Technolab, Sungarner Energies, Shakti Pumps (India), Transwarranty Finance, Viviana Power Tech, GMR Power உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்பும் கடந்த 5 மாத காலத்தில் 220% முதல் 275% வரை லாபம் கண்டுள்ளன.
PG Electroplast (PGEL) நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் 216% உயர்ந்து 525.15 ரூபாய் என வர்த்தகமாகிறது. இந்நிறுவனம் கூகுளிடம் இருந்து ODM உரிமம் பெற்றுள்ளது எனவே இதன் மதிப்பு உயர்ந்த வண்ணமே இருக்கும் என்கின்றன தரகு நிறுவனங்கள்.
அது மட்டுமின்றி Kavveri Telecom Products, Suraj Estate Developers, Windsor Machines &Trident Techlabs ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த 5 மாதங்களில் 200% வரை வளர்ச்சி அடைந்துள்ளன. இதில் குறிப்பாக Suraj Estate Developers பங்கு மதிப்பு தற்போது 772 ரூபாய் என வர்த்தகமாகும் நிலையில் அது 935ரூபாய் வரை உயரக் கூடும் என நுவாமா தரகு நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications