இறங்கிய வேகத்திலேயே ஏறிய தங்கம்!! ஜூன் மாதத்தில் முதன்முறையாக தங்கம் விலை உயர்வு!!

ஜூன் 1ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து சரிவிலேயே இருந்து வந்த தங்கம் விலை திடீரென இன்று விலை உயர்ந்து சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறது. சென்னையில் யூ டர்ன் அடித்த தங்கம் விலை மீண்டும் பழைய விலைக்கு திரும்பியிருக்கிறது.

ஜூன் 1ஆம் தேதியான திங்கட்கிழமை அன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு 130 ரூபாய் விலை குறைந்து 14, 500 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே ஜூன் 2 மற்றும் 3 ஆகிய 2 நாட்களிலும் தங்கத்தின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஜூன் 4ஆம் தேதி அன்று ஒரு கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 14,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஜூன் 5-ம் தேதியன்று ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை சரிவடைந்து 14,430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம், வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை கிராமுக்கு 230 ரூபாய் என தடாலடியாக விலை சரிவடைந்து 14,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. திங்கள் கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கம் 130 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 14,070 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இறங்கிய வேகத்திலேயே ஏறிய தங்கம்!! ஜூன் மாதத்தில் முதன்முறையாக தங்கம் விலை உயர்வு!!

இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 130 ரூபாய் விலை கூடி 14,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 1040 ரூபாய் விலை உயர்ந்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது சனிக்கிழமை அன்று விற்பனையான விலைக்கு தங்கம் விலை திரும்பி இருக்கிறது. ஜூன் 1 முதல் 4000 ரூபாய்க்கு மேல் சரிவடைந்த தங்கம் திடீரென சவரனுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்திருப்பது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறது.

Also Read

24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 142 ரூபாய் விலை உயர்ந்து 15,491 ரூபாய்க்கும் 10 கிராம் 1420 ரூபாய் விலை உயர்ந்து 1,54,910 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் 125 ரூபாய் விலை உயர்ந்து 11, 920 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்து 95 ,360 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 270 க்கும் ஒரு கிலோ 2.7 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Recommended For You

ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து சரிவிலேயே இருந்து வந்த தங்கம் விலை இன்றைய தினம் திடீரென விலை உயர்ந்திருக்கிறது. ஈரான் போர் தொடர்பான அறிவிப்புகள் தான் தங்கம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் தென்பட தொடங்கி இருப்பதும் ஈரான் அமெரிக்கா இடையே ஒப்பந்தம் ஏற்படும் என இஸ்ரேலிடம் கண்டிப்புடன் அமெரிக்கா கருத்து தெரிவித்திருப்பதுமே உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்து தங்கத்தின் விலை கூடுவதற்கு காரணமாக இருக்கிறது.அதே தான் இந்திய சந்தையிலும் எதிரொலிக்கிறது.

சென்னை மட்டுமில்லாமல் மதுரை, கோவை , திருச்சி ஆகிய தமிழ்நாட்டின் பிரதான நகரங்களிலும் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 14,200 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,13,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+