தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

ஈரான் போர் தொடர்பான ஒவ்வொரு தகவலும் தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்திய வண்ணம் இருக்கிறது. போர் தீவிரமடைவதற்கான அறிவிப்பு வெளியே வரும் போது தங்கம் விலை குறைந்தது , போர் சற்றே அமைதியை நோக்கி செல்வதற்கான தகவல் வெளியாகும் போது தங்கத்தின் விலை கூடுகிறது.

அந்த வகையில் இன்று காலை சரிவடைந்து மக்களுக்கு நிம்மதியை தந்த தங்கம் மாலையிலேயே விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,810 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் 1,10, 480 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே மாலையில் தங்கத்தின் விலையை நகை வியாபாரிகள் சங்கம் உயர்த்தி இருக்கிறது.

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

இதன்படி சென்னையில் தற்போது 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 180 ரூபாய் விலை உயர்வு உண்டு 13,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 1, 11 ,920 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதாவது இன்று காலையுடன் ஒப்பிடும்போது சென்னையில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1440 ரூபாய் உயர்வு கண்டிருக்கிறது.

வெள்ளி விலை இன்று காலை மாற்றம் இல்லாமல் இருந்தது ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே மாலையில் வெள்ளியின் விலை உயர்ந்திருக்கிறது. ஒரு கிராமுக்கு ஐந்து ரூபாய் விலை உயர்ந்து 260 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் இன்று காலை சரிவடைந்த தங்கம் மற்றும் மாற்றமில்லாமல் இருந்த வெள்ளியின் விலைகள் மாலையில் ஏன் திடீரென உயர்ந்தன என்ற கேள்வி எழுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது தீவிர தாக்குதல் நடத்தப்படும் ஈரான் நரகத்திற்கு சென்று விடும் என கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தார். ஈரானும் அதற்கு பதிலடி தரப்படும் என கூறியது. இதனால் போர் தீவிரமடையும் கச்சா எண்ணெய்க்கு இன்னும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற சூழல் உண்டானது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது, இதனால் இன்று காலை தங்கத்தின் விலை குறைந்தது. ஆனால் தற்போது பாகிஸ்தான் திறப்பில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அமைதி பேச்சு வார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 45 நாட்கள் போர் நிறுத்தம் கொண்டு வருவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்படுவதாகவும் சொல்லப்பட்டது.

இது பங்குச்சந்தைகள் நீண்ட நஷ்டத்தில் இருந்து மீண்டு வருவதற்கு பெரிய அளவில் உதவியது. அதே வேளையில் தங்கம் விலையை உயர செய்தது. இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது 10 கிராம் தங்கத்தின் விலை 1,48,785 ரூபாயாக தான் இருந்தது அதுவே நண்பகலில் 1,51,008 ரூபாய் என விலை உயர்ந்தது. வெள்ளியின் விலை பொருத்தவரை இன்று காலை எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் ஒரு கிலோ வெள்ளி விலை 2,30,000 ரூபாயாக இருந்தது அதுவே தற்போது 2,35,000 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+