இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியான சுதா மூர்த்தி தன்னுடைய பேச்சாற்றலால் அனைவரையும் கவரக்கூடியவர். அவரது வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் அறிவுரைகள் குறித்த வீடியோக்களை நாம் அடிக்கடி சமூக வலைதளங்களில் காண முடியும்.
மூர்த்தி அறக்கட்டளைக்கு தலைவராக செயல்பட்டு வரும் சுதா மூர்த்தி சமூகசேவையில் ஆர்வம் கொண்டவர். சுதா மூர்த்தி பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். சுதா மூர்த்திக்கு 2006ல் பத்மஸ்ரீ விருதும் 2024 ஜனவரியில் பத்ம பூஷன் விருதும் மத்திய அரசால் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

மார்ச் 8ஆம் தேதி ,அவர் மாநிலங்களவைக்கு உறுப்பினராக குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டார். இதனை அடுத்து சுதா மூர்த்தி குறித்து தான் சமூகவலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
சுதா மூர்த்தி, ஆகஸ்ட் 19, 1950 இல், வட கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தில் உள்ள ஷிகாவ்னில் பிறந்தார். ஹூப்பள்ளியில் உள்ள பி.வி. பூமரட்டி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியலில் பட்டம் பெற்ற பிறகு, சுதா மூர்த்தி பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார், அங்கு அவர் 1974 இல் தங்கப் பதக்கம் பெற்றார்.
புனேவின் டாடா இன்ஜினியரிங் மற்றும் லோகோமோட்டிவ் நிறுவனத்தில் (டெல்கோ) பணியமர்த்தப்பட்ட முதல் பெண் பொறியாளர் இவர். பின்னாளில் பெண் பொறியாளர்கள் இங்கே பணி செய்வதற்கு சுதா மூர்த்தியின் இந்த பணி அமர்த்தல் காரணமாக அமைந்தது.ஜே.ஆர்.டி டாடா நிறுவனத்தின் ' ஆண் பணியாளர்கள் மட்டும்' என்ற கொள்கையை ஆட்சேபித்து சுதா மூர்த்தியை பணி அமர்த்தினர்.
சுதாமூர்த்திக்கு இன்போசிஸ் நிறுவனத்தில் 0.83 % பங்குகள் உள்ளன. இன்போசிஸ் நிறுவன பங்குகளின் மதிப்பை அடிப்படையாக கொண்டு மதிப்பீடு செய்தால், சுதா மூர்த்தியின் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு சுமார் 5,600 கோடி ரூபாய் ஆகும்.
மும்பை பங்குச்சந்தையில் இன்போசிஸ் தாக்கல் செய்ய ஆவணத்தின் படி நிறுவனத்தின் 3.45 கோடி பங்குகளை சுதா மூர்த்தி தன் வசம் வைத்திருக்கிறார். மும்பை பங்குச் சந்தையில் இன்போசிஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 1616.95 ரூபாயாக உள்ளது.
இதனை கொண்டு கணக்கீடு செய்து பார்த்தால் சுதா மூர்த்தியின் பங்கு மதிப்பு ரூ.5,586.66 கோடி ரூபாயாகும். இது தற்போது ஐடி நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரிகளாக இருக்கும் நபர்களின் ஊதியத்தை விட பல மடங்கு அதிகம் ஆகும்.
அதே போல, இன்போசிஸ் இணை நிறுவனரான நாராயண மூர்த்திக்கு 1.66 கோடி பங்குகள் மட்டுமே தற்போது உள்ளது. பங்கு மதிப்பின் அடிப்படையில் கணக்கு செய்தால், அதன் மதிப்பு 2,961 கோடி ரூபாய் ஆகும்.
இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 6,71,121 லட்சம் கோடி ரூபாய் ஆகும். சந்தை மதிப்பின் அடிப்படையில் இன்போசிஸ் நாட்டின் ஏழாவது பெரிய நிறுவனமாகும். இந்தியாவின் பெரிய ஐடி நிறுவனங்களின் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளது இன்போசிஸ்.
Story Written by: Devika
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications