யூடியூப்-ல் கலக்கும் மாமியார் - மருமகள்! இன்போசிஸ் நாராயணமூர்த்தி மனைவி சுதா மூர்த்தி.. புது அவதாரம்

நாட்டின் இரண்டாவது பெரிய ஐ.டி. நிறுவனமான இன்போசிஸின் இணை நிறுவனர்களில் ஒருவர் என்.ஆர். நாராயண மூர்த்தி. இவரது மனைவி சுதா மூர்த்தி. இவர் கல்வியாளர், எழுத்தாளர், நன்கொடையாளர் மற்றும் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவி என பலமுகங்களை கொண்டவர்.

ஓய்வு பெறும் வயதை எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே கடந்து விட்டாலும் இன்றும் ஓய்வில்லாமல் உழைத்து கொண்டு இருக்கிறார். தற்போது யூடியூப்பிலும் கலக்க தொடங்கி விட்டார். சுதா மூர்த்தி அண்மையில் யூடியூப்பில் சுதா அம்மாவுடன் கதை நேரம் (Story Time with Sudha Amma)என்ற அனிமேஷன் தொடரை அறிமுகம் செய்தார். இதற்கு பலத்த வரவேற்பு காணப்படுகிறது.

யூடியூப்-ல் கலக்கும் மாமியார் - மருமகள்! இன்போசிஸ் நாராயணமூர்த்தி மனைவி சுதா மூர்த்தி.. புது அவதாரம்

அனிமேஷன் வீடியோ தொடரை அவரும் அவரது மருமகள் அபர்ணா கிருஷ்ணனும் இணைந்துதான் உருவாக்கி வெளியிடுகிறார்கள். சுதா மூர்த்தியின் மகன் ரோகன் மூர்த்தியின் மனைவிதான் அபர்ணா கிருஷ்ணன்.

மாமியாரும் மருமகளும் ஒற்றுமையாக வேலை செய்கிறார்கள் என்ற செய்தி பலருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும். மருமகளுடன் இணைந்து பணியாற்றுவதில் எந்த பிரச்சினையும் இல்லையா என்று கேட்டால், மருமகளை பாராட்டி பேசுகிறார் மாமியார்.

சுதா மூர்த்தி பேட்டி ஒன்றில், அனிமேஷன் வீடியோ தொடரை தொடங்கியது எனது மருமகளின் யோசனை. இதனை தொடங்குவதற்கு மருமகளுடன் இணைந்து பணியாற்றுவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் கதையை கொடுப்பதுடன் ஒதுங்கி கொள்வேன், தொந்தரவு செய்யமாட்டேன், அவள் வேலையில் நான் தலையிடுவதில்லை.

அனிமேஷன் வீடியோ பணி அவளது களம். அது பற்றி தெரியாமல் நான் தலையிடக்கூடாது. எங்கள் இருவருக்கும் பேசி கொள்வதற்கும் மற்றும் ஒருவரையொருவர் தவறாக புரிந்து கொள்வதற்கும் நேரம் இல்லை. பெரும்பாலும் அவள் வேலையில் மும்முரமாக இருப்பாள், நானும் பயணம் செல்கிறேன். அவள் நல்லவள், திறமையானவள், நல்ல வேலை செய்வாள், பின் நான் ஏன் கவலைப்பட வேண்டும்? என்று தெரிவித்தார்.

அபர்ணா கிருஷ்ணன் கூறுகையில், அனிமேஷன் ஸ்டோரி வீடியோ தொடங்குவதற்கான உத்வேகம் வாசகர்களிடமிருந்து வந்தது. புத்தக கண்காட்சி முதல் புத்தக வெளியீட்டு விழாக்கள் வரை நாங்கள் எங்கு சென்றாலும் மக்கள் சுதா மூர்த்தியின் கன்டென்ட்டை எங்கு பார்க்கலாம் என்று கேட்கிறார்கள்.

நாங்கள் தேவையை உணர்ந்தோம். அனிமேஷன் வீடியோ அனைவருக்கும் சென்றடைய சிறந்த வழியாகும். இந்தியாவின் பெருநகரம், நகரம் மற்றும் கிராமத்தில் உள்ள குழந்தையையும் சென்றடைய இதுவே சிறந்த வழியாகும். யூடியூப் போன்ற காட்சி தளத்துடன் அவரின் (சுதா மூர்த்தி) சிறந்த கதைகளை அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் அனிமேஷன் தொடர்பாக மாற்ற முயற்சித்துள்ளோம் என்று தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+