பெங்களூரு, கர்நாடகா: பெங்களூருவில் கடந்த ஆண்டு கோடை காலத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் அப்படி ஒரு சூழல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே கர்நாடகா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பெங்களூரை பொறுத்தவரை , பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம் கார் கழுவுவது மற்றும் தோட்டங்களுக்கு என குடிநீரை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இவ்வாறு குடிநீரை வீணாக்குபவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பெங்களூருவில் குடிநீரை வீணாக்கியதாக 112 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5.6 லட்சம் ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டிருப்பதாக பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியத்தின் தலைவர் ராம் பிரசாத் மனோகர் தெரிவித்துள்ளார்.

கிட்டூர் கர்நாடகாவை பொறுத்தவரை அல்மாட்டி மற்றும் நாராயணபுரா நீர்த்தேக்கங்களில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதாகவும் இந்த ஆண்டு இந்த தண்ணீரே போதுமானதாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அது தவிர சுமார் 640 கிராமங்களை கிராமங்களை குடிநீர் குழாய்கள் மூலம் இணைத்து இருப்பதால் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டு தண்ணீர் லாரிகளை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது என்றும் தெரிவிக்கின்றனர்.
மத்திய கர்நாடகாவில் பெரிய அளவு தண்ணீர் தட்டுப்பாடு வருவதற்கான வாய்ப்பில்லை என கூறும் அதிகாரிகள் மல்டி வில்லேஜ் சப்ளை என்ற திட்டத்தின் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். 90% கிராம பஞ்சாயத்துகளுக்கு தற்போது தண்ணீர் பிரச்சனை கிடையாது இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
கடற்கரை கர்நாடகா பகுதியில் தட்சின கனடா மற்றும் உடுப்பி ஆகிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்காக அடையார் அணையிலிருந்து குடிநீரை பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்வதற்காக நடவடிக்கை எடுத்துள்ளனர். உடுப்பி மாவட்டத்தில் தற்போதைக்கு எந்த தண்ணீர் தட்டுப்பாடும் இல்லை , கடந்த ஆண்டு சிறந்த மழைப்பொழிவு இருப்பதால் நிலத்தடி நீரே போதுமானதாக இருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
கல்யாண கர்நாடகாவை பொருத்தவரை கலாபூராகி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒவ்வொரு வார்டிலும் ஒவ்வொரு தண்ணீர் லாரி நிறுத்தி மக்களுக்கு குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பழைய மைசூர் பகுதியில் தற்போதைக்கு சில இடங்களில் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு மக்களுக்கு குடிநீர் பிரச்சனை இல்லாத வகையில் நடவடிக்கை எடுத்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
கேஆர்எஸ் மற்றும் கபினி ஆகிய அணைகளில் இருந்து போதுமான அளவு நீர் வந்துவிடும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். பழைய மைசூரு, கோலார் உள்ளிட்ட பகுதிகளில் இந்த முறை வெயில் கடுமையாக இருக்கும் என்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று அதிகாரிகள் கணித்துள்ளனர். எனவே இந்த பகுதியில் மாவட்ட ரீதியாகவும் பஞ்சாயத்து ரீதியாகவும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக லாரிகளில் குடிநீர் கிடைக்க வசதி செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications